அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பதட்டம்!இராணுவம் துப்பாக்கி பிரயோகம்

முல்லைத்தீவில் விசுவமடு பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று(18) இரவு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்தபோது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது இதனை தொடர்ந்து அங்கு கூடிய இளைஞர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. 

 இந்த சம்பத்தினை தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு பதட்டமான ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் மீது அங்கு கடமையில் நின்ற இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் இளைஞர்கள் சிலர் காயமடைந்த நிலையில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் இராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் இரு தரப்பிற்கும் இடையில் கைகலப்பாக மாறியதில் பொதுமக்களின் வாகனங்கள் சில சேதமடைந்த நிலையில் இராணுவத்தினரின் வாகனம் ஒன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. 

 இராணுவத்தினரின் தாக்குதலில் இளைஞர்கள் பலர் காயமடைந்துள்ள தோடு பொதுமக்களின் தாக்குதலில் இராணுவத்தினர் சிலரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இதன் போது ஆத்திரமடைந்த இளைஞர்கள் அங்குள்ள இராணுவ காவலரண் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இந்த சம்பவத்தினை தொடர்ந்து நிலமையினை கட்டுக்குள் கொண்டுவர இராணுவத்தினர் வானத்தினை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சிலமணிநேரங்கள் பரந்தன்- புதுக்குடியிருப்பு வீதியில் விசுவமடு பகுதியில் எவரும் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுதோடு அங்கு அதிகளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுமிருந்தனர் 

  தாக்குதல் பின்னணி 

நேற்று (18) காலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் பெற வந்தவர் (குறித்த நபர் மன நலம் பாதிக்கப்பட்டவர் ) எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள இராணுவ காவலரன் இராணுவத்தினருடன் முரண்பட்டபோது இராணுவத்தினர் குறித்த நபர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.குறித்த நபர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் இராணுவத்தினர் அவருக்கு சிகிச்சையளித்து விட்டு இராணுவ காவலரனில் தடுத்து வைத்திருந்தனர். மலையில் அங்கு கூடியிருந்த மக்கள் குறித்த நபரை விடுமாறு இராணுவத்தினரை கேட்டிருந்தனர்

.குறித்த நபரை இராணுவம் விடவில்லை இதனால் இராணுவத்திற்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சோடா போத்தல்கள் மற்றும் தடிகள் கொண்டு தாக்கினர்! .இருதரப்புக்கும் இடையே மோதல் அதிகரித்ததை அடுத்து இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். மக்களை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்காக இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.துப்பாக்கி பிரயோகத்தை தொடர்ந்து. மக்கள் கலைந்து சென்றனர்.தொடர்ந்து குறித்த பகுதியில் இராணுவம் பொலிஸார் குவிக்கப்பட்டு குறித்த பகுதியை இராணுவத்தினரும் பொலிஸாரும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். 

  பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வருகை 

வீதியில் போத்தல் உடைந்த தூள்கள் பரவி காணப்பட்டது.இராணுவம் தடிகள் ,மற்றும் துப்பாக்கிகளோடு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.இராணுவ வாகனம் மீதும் கல்வீசப்பட்டிருப்பதை காணமுடிந்தது இதன்போது குறித்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வருகை தந்து குறித்த பகுதியில் நடந்த சம்பவத்தை பார்வையிட்டு அங்கிருந்த மக்களுடனும் கலந்துரையாடி இருந்தார் பல இளைஞர்கள் தாக்கப்பட்டு அவர்களின் வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளது .மிக மோசமான சூழல் யுத்தம் நடைபெறும் பூமியாக காணப்படுகிறது. என தெரிவித்தார். 

  பலர் காயம்! இருவர் கைது 

விபத்தில் காயமடைந்தவர்கள் பலர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் விபத்தில் காயமடைந்த இராணுவத்தினர் சிலர் கிளிநொச்சி இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிது இந்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட இருவரை புதுக்குடியிருப்பு பொலிசாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர் குறித்த சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 இதேவேளை முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் முரண்பாடான பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர் . முள்ளியவளையில் அமைந்துள்ள லங்கா ஜ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொது பயன்பாட்டிற்கு எரிபொருள் இல்லை என இன்று எவருக்கும் வழங்கப்படாத நிலையில் மாலை வேளை தனியார் பேருந்து ஒன்றுக்கு எரிபொருள் வழங்கியதால் அங்கு கூடிநின்ற வாகன சாரதிகளுக்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவத்தினை தொடர்ந்து பொலிசார் அங்கு வரவளைக்கப்பட்டார்கள்.

அரசாங்க அதிபரின் அனுமதியுடன் போக்குவரத்து சேவைக்காக வந்த பேருந்துக்கு எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் அதற்கான அனுமதி கடிதத்தினை பொலிசாரிடம் காட்டியுள்ளார்கள். வீதியில் நின்ற சாரதி ஒருவர் தனது டிப்பரினை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் கொண்டுவந்து தனக்கும் எரிபொருள் வழங்குமாறு கூறியதை தொடர்ந்து அங்கு பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. வெளியில் நின்ற சாரதிகள் எரிபொருள் நிரப்பிய தனியார் பேருந்தினை எடுக்கவிடாது சூழ்ந்துகொண்டுள்ளார்கள். இன்னிலையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இராணுவத்தினர் மேலதிகமாக கொண்டுவரப்பட்டு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீதியில் நின்ற சாரதிகள் தமது வாகனங்களுக்கும் டீசல் வழங்கவேண்டும் என்று கோரி தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

 இராணுவத்தினரின் பிரசன்னத்தினை தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் சென்ற டிப்பர் ஒன்றிற்கு மாத்திரம் எரிபொருள் வழங்க வெளியில் நின்ற ஏனைய சாரதிகளின் கோரிக்கைக்கு அமைய டீசல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நின்ற பேருந்தினை வெளியில் எடுத்துள்ளார்கள். முரண்பாட்டினை ஏற்படுத்திய சாரதிகளும் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளார்கள் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு டீசல் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் அது அத்தியஅவசிய தேவைக்காகவும் விவசாயிகளுக்கு வழங்குவதற்காகவும் அரச அதிகாரிகளின் அனுமதியுடன் கொண்டு வரப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார்கள்.























முல்லைத்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பதட்டம்!இராணுவம் துப்பாக்கி பிரயோகம் Reviewed by Author on June 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.