அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் உயர்தர பரீட்சையில் முதலிடத்தை பெற்ற பாடசாலைகள்

மன்னார் மாவட்டத்தில் கபொத உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவு மற்றும் வணிக பிரிவுகளில் முதல் இடத்தை மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவிகளும் பெளதீக விஞ்ஞானம் மற்றும் கலைப்பிரிவில் முதலாம் இடத்தை மன்/சித்திவிநாயகர் பாடசாலை மாணவர்களும் உயிர்முறைமைகள் தொழில்நுட்ப பிரிவில் மன்/அஸ்ஹர் தேசியபாடசலை மாணவியும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர் மன்னார் எமில் நகர் பகுதியை சேர்ந்த மாணவி அபினா அமலதாஸன் உயிரியல் பிரிவில் 2 A B சித்திகளை பெற்று மன்னார் மாவட்டத்தில் முதல் இடத்தை பெற்றுள்ளார் அதே நேரம் தினகரன் ஜனுசா மூன்று A சித்திகளை பெற்று வணிக பிரிவில் மாவட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ளார்

 மேலும் மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் உயர்தர பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் சிவபாலன் யுதர்சன் மூன்று A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியாக பெளதீக விஞ்ஞான பிரிவில் முதல் இடத்தையும் நிலாமதி அன்ரனி சில்வஸ்டர் 3 A சித்திகளை பெற்று கலைபிரிவில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளனர் அத்துடன் மன்/அல்ஹஸ்கர் தேசிய பாடசாலையை சேர்ந்த மாணவி மொஹமட் பாருக் பாத்திமா வாஸ்மியா உயிர்முறைமையியல் தொழில்நுட்ப பாடத்தில் மூன்று A சித்திகளை பெற்று மாவட்டரீதியில் முதலாம் இடம் பெற்றுள்ளார்










மன்னார் மாவட்டத்தில் உயர்தர பரீட்சையில் முதலிடத்தை பெற்ற பாடசாலைகள் Reviewed by Author on August 30, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.