அண்மைய செய்திகள்

recent
-

சிறப்பாக இடம் பெற்ற மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் ஆசிரியர் தினம் மற்றும் சிறுவர் தினம்

மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் 2022 ஆண்டுக்கான ஆசிரியர் தினம் மற்றும் சிறுவர் தினம் உட்பட மாணவர் தலைவர்களுக்கான தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(07) மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ரெஜினோல்ட் தலைமையில் இடம் பெற்றது சிறுவர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கெளரவிக்கப்பட்டனர் அதனை தொடர்ந்து ஆசிரியர்கள் மாலை அணுவிக்கப்பட்டு ஊரவலமாக அழைத்து வரப்பட்டு கெளரவிக்கப்பட்டனர் அதே நேரம் பாடசாலை ஆசிரியர்களினால் ஆசிரியர் கீதம் பாடப்பட்டு சத்தியபிரமானமும் மேற்கொள்ளப்பட்டது அதனை தொடர்ந்து மாணவர்களால் பல்வேறு கலைநிகழ்வுகள் இடம் பெற்றதுடன் 2022 ஆண்டுக்கான புதிய மாணவர் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களை கெளரவிக்கும் நிகழ்வும் இடம் பெற்றது 

மேலும் 2021 ஆண்டு இடம் பெற்ற கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் 9 A சித்திகளை பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை கெளரவிக்கும் நிகழ்வும் இடம் பெற்றது குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி பழைய மாணவர்சங்கத்தின் ஐக்கிய இராச்சியத்தின் நிர்வாக உறுப்பினர்களான திரு.அரசகோன் அகிலன் மற்றும் சுப்பரமணியம் மைக்கல் ஆகியோர் கலந்து கொண்டனர் அதே நேரம் பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர் நிகழ்வின் இறுதியில் பாடசலையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் 2021 ஆண்டு மாணவர்தலைவர்களாக சிறப்பாக செயற்பட்ட மாணவர்களுக்கான நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது













சிறப்பாக இடம் பெற்ற மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் ஆசிரியர் தினம் மற்றும் சிறுவர் தினம் Reviewed by Author on October 07, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.