அண்மைய செய்திகள்

recent
-

மன்/புனித சவேரியார் ஆண்கள் பாடசலை சாதனை மாணவர்கள் கெளரவிப்பு நிகழ்வு

தேசிய ரீதியில் இடம் பெற்ற 20 வயது பிரிவினருக்கான பாடசாலை மட்ட கால்பந்தாட்ட சுற்றுபோட்டியில் 2 வது இடத்தை பெற்ற மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வும் 2021 இடம் பெற்ற சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளை பெற்ற மாணவர்களையும், ரோல்போல் போட்டியில் தேசிய ரீதியில் சாதித்த மாணவர்களையும் கெளரவிக்கும் நிகழ்வும் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை அதிபர் அருட்சகோதரர் ரெஜினோல்ட் தலைமையில் இன்று இடம் பெற்றது மன்னார் பிரதான சுற்றுவட்ட பகுதியில் இருந்து மாலை அணிவிக்கப்பட்டு பேண்ட் வாத்திய இசைக்கு மத்தியில் ஊர்வளமாக அழைத்து வரப்பட்டு பாடசாலையில் சாதனை மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கெளரவிக்கப்பட்டனர் அதே நேரம் தேசிய ரீதியிலான வெற்றிக்கு பங்காற்றிய பாடசாலை உடற்பயிற்சி ஆசிரியர்கள் கால்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர்களும் நினைவு சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர் 

 இவ் நிகழ்வுக்கு மன்னார் பொது பொலிஸ் அத்தியட்சகர், மன்னார் வலயக்கல்வி பணிமனை திட்டமிடல் பணிப்பாளர், மன்னார் வலய ஆசிரிய ஆலோசகர்,அருட்தந்தையர்கள் அருட்சகோதரர்கள்,சாதனை மாணவர்களின் பெற்றோர்கள்,பழையமாணவ சங்கத்தினர்,ஆசிரியர்,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் குறித்த நிகழ்வின் போது வீதியில் ஊர்வலமாக வருகை தந்த மாணவர்கள் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட செயலக பணியாளர்களினால் விசேட விதமாக சாதனை மாணவர்கள் கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடதக்கதுமன்/புனித சவேரியார் ஆண்கள் பாடசலை சாதனை மாணவர்கள் கெளரவிப்பு நிகழ்வு Reviewed by Author on November 29, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.