அண்மைய செய்திகள்

recent
-

ஜனவரி முதல் கடவுச்சீட்டுக்கு ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம்

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் புதிய கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் சம்பிகா ராமவிக்ரம தெரிவித்துள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தலைமையில் நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார். புதிய முறைமையின் போது புதிய கடவுச்சீட்டைப் பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய முடியும். “விண்ணப்பதாரர்கள் இதை வீட்டிலேயே செய்யலாம். 

அவர்கள் கைவிரல் ரேகைகளைக் கொடுக்க மாத்திரமே திணைக்களத்திற்கு செல்ல வேண்டும். அந்த நோக்கத்திற்காக, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய 50 முன் அலுவலகங்களை அமைக்க எதிர்பார்க்கிறோம். விண்ணப்பதாரருக்கு அருகில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று கைரேகையைக் கொடுக்க ஒன்லைன் சந்திப்பு வழங்கப்படும். புதிய முறை அமுலுக்கு வரும்போது பெறுவதற்கு நிலவும் நெரிசல் குறையும்,” எனவும் அவர் தெரிவித்தார். ஒன்லைனில் பணம் செலுத்துவதற்கும் கடவுச்சீட்டை வீட்டிற்கு பெற்றுக் கொள்வதற்கும் (ஒரு நாள் விண்ணப்பதாரர்களுக்கு கூரியர் சேவை மற்றும் சாதாரண விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம்) வசதிகள் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனவரி முதல் கடவுச்சீட்டுக்கு ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம் Reviewed by Author on December 01, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.