அண்மைய செய்திகள்

recent
-

10,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!

பொருளாதார நெருக்கடி காரணமாக சுமார் 10,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக வெளியேறியுள்ளதாக இலங்கை கணினிச் சங்கத்தின் (CSSL) தலைவர் தமித் ஹெட்டிஹேவா தெரிவித்துள்ளார். சுமார் 10 சதவீதமான மென்பொருள் பொறியியலாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். 

 அவர்களின் மதிப்பீட்டின்படி, சுமார் 150,000 பேர் இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் நேரடியாக அங்கம் வகிக்கின்றனர். 2021 இல் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் சுமார் 125,000 பேர் என தெரிய வந்துள்ளது. வெளிநாடுகளில் தகவல் தொழில்நுட்பத்திற்கான வேலை வாய்ப்பு சந்தை வளர்ந்து வருவதால், சுமார் 10,000 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையின் தேவையை பூர்த்தி செய்ய இலங்கை ஏற்கனவே போராடி வருவதாகவும், எனவே மேலும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க வரிகளை தளர்த்துமாறு அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


10,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்! Reviewed by Author on December 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.