அண்மைய செய்திகள்

recent
-

விளம்பரத்தை பார்த்து முடி மாற்றும் சிகிச்சை; காயங்கள் அழுகி 30 வயது இளைஞர் மரணம்

முடி மாற்று சிகிச்சை எடுத்துக் கொண்ட 30 வயது நபர் உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்துள்ளார். இவ்விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியைச் சேர்ந்த நபர் ஆதர் ரஷீத். 30 வயதான இவர் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தலை முடி அதிகம் கொட்டுவதால் முடி மாற்று அறுவை சிகிசை செய்யும் முடிவில் ரஷீத்
இருந்துள்ளார். கடந்த ஆண்டு முடி மாற்று சிகிச்சைக்காக மருத்துவமனையின் விளம்பரத்தை பார்த்த ரஷீத் அங்கு சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சிகிச்சை முடிந்த சில நாட்களில் செப்சிஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஏற்பட்ட காயங்கள் ஆறாமல் அழுகி ரத்தத்தில் நச்சுத்தன்மை கலந்தது. தொடர்ந்து சிறுநீரகம் செயலிழந்தது. இதன் பின் படிப்படியாக இதர உறுப்புகளும் செயலிழக்க துவங்கியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஷீத் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரஷீத்திற்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்க ரஷீத்தின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் புகாரை பெற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். இதன் பின் ரஷீத்திற்கு அறுவை சிகிச்சை செய்தவர்கள் உட்பட நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
விளம்பரத்தை பார்த்து முடி மாற்றும் சிகிச்சை; காயங்கள் அழுகி 30 வயது இளைஞர் மரணம் Reviewed by Author on December 04, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.