அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் திருக்கேதீச்சர ஆலய மகா சிவராத்திரி தின முன் ஏற்பாடு குறித்து அரச அதிபர் தலைமையில் ஆராய்வு.

மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி சிவராத்திரி தினத்தை சிறப்பாக முன்னெடுக்கும் வகையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்டன்லி டிமல் தலைமையில் இன்று புதன்கிழமை (25) காலை விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது. குறித்த கலந்துரையாடலில் திருக்கேதீச்சர ஆலய திருப்பணி சபை செயலாளர் சிவசம்பு ராமகிருஷ்ணன் மற்றும் அதன் பிரதிநிதிகள் , அரச தனியார் திணைக்களின் தலைவர்கள்,போலீஸ், ராணுவம் உயர் அதிகாரிகள் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உட்பட அழைக்கப்பட்ட பிரதி நிதிகள் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

 கடந்த காலங்களில் நோய் தொற்று காரணமாக சிவராத்திரி தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் யாத்திரிகர்கள் வருகை குறைக்கப்பட்டு பல சுகாதார கட்டுப்பாட்டுக்கு மத்தியில் சிவராத்திரி தினம் இடம்பெற்றது. இம்முறை சிவராத்திரி தினம் பல்லாயிரக்கணக்கான யாத்திரைகள் ஒன்று கூடலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மன்னார் திருக்கேதீச்சர திருத்தலத்தில் சிவராத்திரி தினத்தில் பல லட்சம் யாத்திரிகர்கள் வருகை தர உள்ள நிலையில் ஏற்பாடுகள் முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் முன் ஆயுதங்களும் குறிப்பாக சுகாதாரம், போக்குவரத்து ,பாதுகாப்பு, குடிநீர் ,உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளும்முன்னெடுக்கப்பட உள்ளது.இவ்விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







மன்னார் திருக்கேதீச்சர ஆலய மகா சிவராத்திரி தின முன் ஏற்பாடு குறித்து அரச அதிபர் தலைமையில் ஆராய்வு. Reviewed by Author on January 25, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.