அண்மைய செய்திகள்

recent
-

கைலாசாவை நாடாக அங்கீகரித்த அமெரிக்க நகர நிர்வாகம்!

கைலாசாவை இறையாண்மை பெற்ற நாடாக நெவார்க் நகர நிர்வாகம் அங்கீகரித்துள்ளது. 

  நித்யானந்தா 
நித்யானந்தாவின் தனித் தீவான கைலாசாவுக்கு அமெரிக்காவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல சிறப்பு நாடு என்ற அடையாளத்தையும் கொடுத்தது அமெரிக்கா. அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு சட்டம் உள்ளது. யாருடனும் அவர்கள் சொந்த ஒப்பந்தங்களைச் செய்யலாம். அதனடிப்படையில் நியூ ஜெர்சி மாநிலத்தில் நெவார்க் நகருடன் நித்யானந்தா கைலாசதேசத்தில் ஒப்பந்தம் போட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பக்தர்களுக்கு நேரில் காட்சியளிக்காமல் ஆன்லைன் வழியாகவே சத்சங்கம் மேற்கொண்டு வந்திருந்தார். 

  கைலாசா நாடு 
இதனையடுத்து கைலசா எனும் புதிய நாட்டை வாங்கி விட்டதாகவும் இது இந்துக்களின் புனித பூமியாக இருக்கும் எனவும் கூறி திடீர் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் இதனை பலரும் நம்பவில்லை. நம்பியவர்கள் இந்நாடு எங்கு இருக்கிறது என்று கேட்க தொடங்கினர். பல நாட்கள் இது குறித்த மர்மம் நீடித்து வந்த நிலையில், அவர் தனி நாடு கோரி ஐநாவில் விண்ணப்பித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில்தான் அமெரிக்காவின் நெவார்க் நகரத்துடன் கைலாசா சார்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

  அங்கீகாரம் 
இந்த ஒப்பந்தத்தின்படி தொற்றுநோய், சிக்கலான மனநலப் பிரச்சனைகள், வன்முறை, வறுமை, கல்வியறிவின்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் மூலம் ஏற்படும் பாதிப்புகளை இரு நகரங்களும் சேர்ந்து தீர்வு காணும் வகையில் ஒப்பந்தமாகியுள்ளது . இந்த விழாவில் ஐ.நா விற்கான கைலாஸாவின் நிரந்தர உறுப்பினரான விஜய் பிரியா மேயர் பராகா, துணை மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .


கைலாசாவை நாடாக அங்கீகரித்த அமெரிக்க நகர நிர்வாகம்! Reviewed by Author on January 13, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.