அண்மைய செய்திகள்

recent
-

மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு.

 மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை (4) காலை பாடசாலை அதிபர் அருட்சகோதரர் ரெஜினோல்ட் தலைமையில்  இடம்பெற்றது.


புதிய கல்வி ஆண்டு ஆரம்பித்துள்ள நிலையில் சிரேஸ்ர மற்றும் கனிஸ்ர மாணவ தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டு வைபவரீதியாக சின்னம் சூட்டப்பட்டு இன்றைய தினம் மாணவ தலைவர்களுக்கான கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்

-குறித்த சின்னம் சூட்டும் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மடு சுகாதார வைத்திய அதிகாரி  ஒஸ்மன் டெனி மற்றும் நானாட்டான்  சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேர்ட் மற்றும் பழைய மாணவர்கள் பெற்றோர்கள்  அபிவிருத்திச் சங்க நிர்வாக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

-இதன் போது தெரிவு செய்யப்பட்ட 80 மாணவத்தலைவர்களுக்கு வருகை தந்த விருந்தினர்களினால் சின்னம் சூட்டி வைக்கப்பட்டதுடன் கடந்த வருடம் சிறப்பாக கடமையாற்றிய மாணவர் தலைவர்களுக்கு சான்றிதல்களும் வழங்கி வைக்கப்பட்டது

மேலும் கடந்த மாதம் மன்னார் கிரிக்கட் சங்கத்தினால் மாவட்ட ரீதியாக இடம் பெற்ற கிரிக்கட் சுற்றுப்போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவர்களுக்கான கெளரவிப்பும் வழங்கி வைக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.











மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு. Reviewed by NEWMANNAR on April 04, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.