அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் டெங்கு அபாய வலயங்களில் விசேட சிரமதான நிகழ்வு முன்னெடுப்பு

 மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக டெங்கு பரவல் அபாயம் அதிகரித்து வரும் நிலையில் டெங்கு பரவல் அதிகமாக இனம் காணப்பட்ட பகுதிகளில் விசேட வீட்டு தரிசிப்பு மற்று சிரமதான செயற்பாடு நிகழ்வு இடம் இன்று (27) பெற்றது.


மன்னார் பிரதேச செயலகம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை,மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, மன்னார் பொலிஸார் மற்றும் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் உப்புக் குளம் வடக்கு , உப்புக் குளம் தெற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள வீடுகள் முழுமையாக இன்றைய தினம் பரிசோதிக்கப்பட்டதுடன் டெங்கு பரவல் தொடர்பில் அக்கறையீனமாக காணப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த நிகழ்வில் மன்னார் பிரதேச செயலக உத்தி யோகஸ்தர்கள், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஊழியர்கள், மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை அதிகாரிகள்,கடற்படையினர்,மன்னார் பொலிஸார்,கிராம சேவகர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர் .

குறித்த சிரமதானம் மற்றும் வீட்டு தரிசிப்பு தொடர்சியாக மன்னார் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் குறிப்பாக டெங்கு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களில் இடம் பெறவுள்ளதுடன் டெங்கு பரவலுக்கு ஏதுவான காரணிகளுடன் இனம் காணப்படும் வீடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






மன்னாரில் டெங்கு அபாய வலயங்களில் விசேட சிரமதான நிகழ்வு முன்னெடுப்பு Reviewed by Author on May 27, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.