அண்மைய செய்திகள்

recent
-

மல்லாவியில் தியாக தீபம் திலீபனினுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலித்தனர்

 தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு கடந்த 15 ஆம் திகதி பொத்துவில்லில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்ட ஊர்தி பவனியானது கிழக்கு மாகாணத்தில் இருந்து, வடக்கு மாகாணத்திற்கு வருகை தந்து, வடக்கு மாகாணத்தின், பல்வேறு பகுதிகளுக்கும், சென்று வருகின்றது.


அந்தவகையில் இன்று எட்டாவது நாள் மன்னார் மாவட்டத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த ஊர்தி பவனியானது மன்னாரிலிருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவியை வந்தடைந்து மல்லாவி பாண்டியன்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிற்கும்  சென்று மக்களது அஞ்சலியை தொடர்ந்து இன்றைய எட்டாம்நாள் பயணம் 
மல்லாவியுடன் நிறைவு பெற்றது.

நாளையதினம் வடமராட்சி கிழக்கில், இந்த ஊர்தி பவனி மக்கள் அஞ்சலிக்காக செல்ல இருக்கின்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று மல்லாவிக்கு வருகை தந்த ஊர்திக்கு, இன்றைய தினம் , துணுக்காய், மாந்தை கிழக்கு, பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த, பல்வேறு இடங்களிலும் மக்கள் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தி இருந்தனர்.

மல்லாவியில் தியாக தீபம் திலீபனினுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலித்தனர் Reviewed by Author on September 23, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.