Slider

காணொளிகள்

மன்னார் செய்திகள்

விம்பம்

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

பல்சுவை

School events

மருத்துவம்

புகைப்படத்தளம்

கட்டுரைகள்

சினிமா

-

கர்நாடக 'இசைமணி', 'இசைத் தமிழ் மகள்' அந்தோனிப்பிள்ளை பேபி சரோஜா அவர்களின் அகத்திலிருந்து.....

கணனியில் முகம்  கலைஞனின் அகம்

கலைஞனின் அகம் கணனியில் முகம் இப் பகுதியில் இவ்வாரத்திற்கான  கதாநாயகி கர்நாடக  'இசைமணி', 'இசைத் தமிழ் மகள்' அந்தோனிப்பிள்ளை பேபி சரோஜா அவர்களின் அகத்திலிருந்து 


தங்களைப் பற்றி?

எனது சொந்த இடம் யாழிசை  பொங்கும் சங்கம். யாழ்ப்பாணம்தனிலே மாவட்ட புரத்தின் அண்மித்த வித்தக புரத்தில் சாஸ்திரிய கர்நாடக சங்கீதத்தை வளர்த்து வந்த இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவள். தற்போது இயற்கை அழகு மிக்க ஆத்திக்குழி  கிராமத்தில் எனது கணவர் P.P.அந்தோனிப்பிள்ளை. எனது மகள்மார் இருவர். ஜீவந்தினி, சுகந்தினி. இசையில் பட்டம் பெற்றவர்கள். எனது குடும்படும் கலைக் குடும்பமே..

பாடசாலைக் காலங்களில் உங்கள் கச்சேரி?

எனது பாடசாலைக் காலங்களில் 1955 இல் சமயப் போட்டிகள் பண்ணிசைப் போட்டிகள் போன்றவற்றிலும் எனக்கு ஊக்கமளித்து என்னை வளப்படுத்திய ஆசிரியை மாவைபாப்பாணர் இராசமணி அவர்கள் போட்டிகளுக்கு அழைத்துச் செல்வார். யாழ் கந்தர் மடம், மங்கையக்கரசி வித்தியாலயம் போன்ற இடங்களில் போட்டிகளில் முதலிடம் பெற்றுக் கொண்டேன். பாடசாலை மற்றும் வாணி விழாக்களிலும் எனது கச்சேரி இடம் பெறும்.

தங்கள் குரு பற்றி?

குரு இல்லாமலா எனது குருநாதர்  என்றால் மாவிட்டபுரம் நாதஸ்வர வித்துவான் சோ.உருத்திரபதி அவர்கள் தான் அவர்களிடம் இருந்து தான் உருப்படிகள், வர்ணம் மற்றும் தாளம், ராகம், சுருதி போன்ற இசை நுணுக்கங்கள் கற்றுக் கொண்டேன். இன்னும் என் குரு வணக்கத்தோடு தான் என் கச்சேரிகளை ஆரம்பிப்பேன்.

உங்களின் முதல் இசைக் கச்சேரி பற்றி?

எனது இசைக்கச்சேரி அரகேற்றம் செய்ய விரும்பிய எனது பெற்றோர்களான விநாயகர் லக்ஸ்மிபிள்ளை அவர்களின் முயற்சியின் பலனாக மாவை முத்தமிழ்க் கலாமன்றத்தினால் 1966ம் ஆண்டு எஸ்.சண்முக நாதக் குருக்கள் தலைமையில் முதன்மை விருந்தினாக 'கலையரசு' சொர்ணலிங்கம் ஐயா அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்ததோடு பொற்கிளியும் தந்து என்னை வாழ்த்தினார். 


உங்கள் இசைக் கச்சேரியின் வளர்ச்சி பற்றி?
  
1975ல் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத் தாபனம் நடாத்திய இசைத் தேரிவில் தேர்ச்சி பெற்று 8 வருட காலமாக இசைக் கச்சேரியை ½ அரை மணிநேரமாக பாடி வந்துள்ளேன். வானொலியில் எனது திறமையை பாராட்டி 1980ம் ஆண்டு வானொலி மஞ்சரியில் என் போட்டோவை பதிவு செய்தது. முகப்புப் படம் தலாதா மாளிகையுடன் இருந்தது. எனது பல ஆவணங்கள் நாட்டுப் பிரச்சினை காரணமாக அழிந்து போயுள்ளன. 

மறக்க முடியாத சம்பவம் ஏதும்?

யாழ்ப்பாணம் தெல்லிப் பழையில் மகஜனக் கல்லூரியில் இசைக்கச்சேரியில் வாணிவிழாவில் எனது அண்ணன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ' சங்கீத பூஷணம்' இசைமாணிப்பட்டமும் பெற்றவர் 'கலாபூஷணம்' இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் விரிவுரையாளராக இருந்தவர். அண்ணன் செல்லத்துரை பல கச்சேரிகள் நடத்தியுள்ளார். அவருக்கு நான் தான் (தம்புரா) வாசிப்பேன். ஒருமுறை அன்று தான் இசைக்கச்சேரியில் தம்புரா வாசித்துக் கொண்டு இருக்கும் போது நித்திரை வர தூங்கி விட்டேன். சிறிது நேரம் தம்புரா ஒலி சத்தம் வராமல் இருக்க திரும்பி பார்த்தவர் நான் தூங்கிக் கொண்டிருக்க கண்டு பெரியகுட்டு ஒன்று தலையில் போட்டார் கலைந்தது தூக்கம்.... இன்னும் பல.

மகிழ்ச்சியான இசைக்கச்சேரி பற்றி?

1960ல் பொன்னாலை வரதராஜப் பெருமாள் உற்சவம் நடைபெற்றது. அதில் தெலுங்கு உருப்படிகளும் மூன்று  (கல்யாணி ராகத்தில் - எதாபுணரா), இரண்டாவது (பண்டுரிதி கொலு - ஹம்சரிதம்) மூன்றாவது (நிகுமோமூ - ஆபோரிராகம்) இரண்டு நிமிடத்திற்கு மேல் இருந்தவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள். இன்னும் நினைக்கையில் மகிழ்ச்சியாகவே உள்ளது.

மன்னாரில் உங்கள் இசைக் கச்சேரி பற்றி?

இடப் பெயர்வின் மூலம் மன்னார் மண்ணை வந்து சேர்ந்த நான் எனது இசைக் கச்சேரியை நடத்த வேண்டும். கர்நாடக சங்கீதத்தை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கோயில்களில் பண்ணிசை நடத்தும் போது கேட்டுவிட்ட மருத்துவக் கலாநிதி கதிர்காமன் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்கி லண்டன் கனக துர்க்கை அம்மன் இல்லத்தில் இடம்பெயர்ந்த பிள்ளைகளுக்கான 2 வருட பண்ணிசையினை கற்பித்தேன்.

2002 இல் மன்/சித்தி விநாயகர் தேசியப் பாடசாலையில் அதிபர் தயாநந்தா அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க வாணி விழாவில் எனது இசைக் கச்சேரியை நடத்தினேன்.
எழுத்தூர் அகிலாண்டேஸ்வரி அம்பாளின் விசாகப் பொங்கலில் எனது இசைக் கச்சேரி நடைபெற்றது.

மன்னார் மண்ணில் உள்ள இந்து ஆலயங்களின் மகிமை பாமாலைகள் பாடியதாக சொன்னீர்களே. அந்த எண்ணம் எவ்வாறு தோன்றியது?

எழுத்தூர் அகிலாண்டேஸ்வரி அம்பாளின் விசாகப் பொங்கலில் எந்தவித பக்க வாத்தியமும் இல்லாமல் தனியாக வயலினோடு கச்சேரியினை நடத்திக் கொண்டு இருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த கதிரேசன் சிவம் ஐயா அவர்கள் என்னிடம் சொன்னார்.
மன்னாரில் உள்ள இந்து ஆலயங்களின் மகிமை பற்றி பாடல் இயற்றப்போகிறேன். அதற்கு இசையமைத்து பாடுவீர்களா என்றார். நான் சம்மதித்தேன். அம்பாள் கிருபையால் இதுவரை பத்து கோவில்களின் மகிமை பாடல்களாக வெளிவந்துள்ளது. இதுவரை 100 பாடல்களுக்கு மேல் ராகம் தாளம் சுரதியமைத்து கொடுத்துள்ளேன். இசைக்கச்சேரியும் செய்துள்ளேன். உப்புக்குளம் பிள்ளையார் பாடல்கள் கும்பாபிஷேக மலரில் உள்ளது. இப் பணி தொடரும்.


இசைக்கான தங்கள் பங்களிப்பு?

06.10.1973இல் தெல்லிப் பழை மகஜனக் கல்லூரியில் நவராத்திரிக் கலை விழாவில் கச்சேரி.
பண்ணிசைப் போட்டி, வாணிவிழா, தமிழ்தினப் போட்டி 1999, 2000, 2001, 2002 போன்ற ஆண்டுகளில் நடுவராக கடமையாற்றியுள்ளேன்.
05.10.2000 புனித சவேரியாரில் ஆண்டுகள் பாடசாலையில் பக்திப் பாடல் பாடியுள்ளேன்.
கர்நாடக இசையை 2 வருடத்திற்கு மேலாக மாணவர்களுக்கு கற்பித்துள்ளேன்.
கொழும்பு இந்து மாமன்றம் சார்பில் தமிழ்நாடு தருமபுரம் ஆதினம் நடத்திய அனைத்துலக சைவசித்தாந்த விழாவில் பங்கு கொண்டு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து தேவார புராணம் பாடியுள்ளேன்.
யாழ் மேற்கில் சீரணி அம்மன் ஆலயத்தில் அபிராமிப் பட்டடைய விழாவில் 100 பாடல்கள் யாழ் வித்துவான்களோடு நானும் 6 பாடல்கள் இராக மாலிகையாகப் பாடியுள்ளேன்.

உங்களை கவர்ந்த கலைஞர்கள் பற்றி?

எனது குருநாதருடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வயலின் வித்துவான் இணுவில் கே.இராதாக் கிருஷ;ணன் அவர்கள் எந்தவொரு சங்கதியைப் போட்டாலும் அப்படியே வாசிப்பார்.  இன்னும் பலர் உள்ளார்கள்.

உங்களை கவர்ந்த பெண் பாடகர்கள் யார்?

என்னைக் கவர்ந்தவர்கள் பல இருந்தாலும் அதிலும் எம்.எல்.வசந்தகுமாரி மகாராஜபுரம் சந்தானம் போன்றவர்களின் கச்சேரியை விரும்பிக் கேட்டேன். எனக்கு பிடித்த பாடலாக கே.பி.சுந்தராம்பாள் பாடியுள்ள 'ஞானப் பழத்தைப் பிழிந்து' என்ற பாடலும் எம்.எஸ். சுப்புலட்சுமி மீரா படத்தில் 'காற்றினிலே வரும் கீதம்' என்ற பாடல்கள் மிகவும் கவர்ந்தவை. இந்தப் பாடல்களை எனது இசைக்கச்சேரியிலும் பாடியுள்ளேன். அப்பவும் இப்பவும் நல்ல வரவேற்பை பெற்றவை. எந்தப் பாடலையும் கேட்டவுடன் கிரகித்து விடுவேன். அவ்வளவிற்கு இசையில என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.

உங்கள் இசைக் கச்சேரியில் எவ்வகையான பாடலை பாடுவீர்கள்? மிகவும் புகழடைந்த பாடல்கள் பற்றி?

 என்னுடைய இசைக் கச்சேரியில் பக்திப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள், துதிப் பாடல்கள், பாமாலைகள் பாடுவேன். 'அருள்மிகு சிறி இராஜராஜேஸ்வரி துதிப் பாமாலையும் 'அருள் மிகு சிறி பாலமுருகன் பக்திப் பாமாலை' இவ்விரண்டும் சிறந்த கர்நாட்டிக் மற்றும் இசையமைப்புக்கான பாராட்டினை 2008ம் ஆண்டு மன்னார் பிரதேச செயலகத்தில் கௌரவித்தார்கள்...

நீங்கள் கவலையடையும் விடயம்?

எமது மாவட்டத்திலும் ஏனைய நிகழ்ச்சிகளிலும் நான் காண்பது மக்கள் வரவேற்பது மிகவும் குறைவு. அது போல துணைப் பக்க வாத்தியக் கருவிகளும் வாத்தியக் கலைஞர்கள் இல்லை. நல்ல திறமையுள்ள கலைஞர்கள் முன்வர வேண்டும். முயற்சி செய்ய வேண்டும்..

நீங்கள் இதுவரை பாடிய இசையமைத்த மன்னார் மண்ணின் இந்து ஆலயங்கள் பற்றிய நூல்கள் உள்ளதா?

ஆம் உள்ளது. 10 ஆலயங்களுக்கு மேல் கதிரேசன் சிவம் ஐயா பாடல்கள் எழுத கர்நாடக இசையமைத்து இராக தாளம் மெட்டமைத்து பாடியுள்ளேன். இப்பவும் பாடி வருகின்றேன். பாடியவைகளில் சில..
09.06.2006 அன்று எழத்தூர் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பாளின் துதிப் பாடல்கள் 10 பாடல்களை கொண்ட நூல்கள் 200 பிரதிகளாக வெளியிடப்பட்டது.
20.09.2006 அன்று பெரியகடை அருள்மிகு ஞானவைரவர் திருமுருகன் பக்தி கீதங்கள் 10 பாடல்கள் கொண்ட நூல்கள் 200 பிரதிகளாக வெளியீடு..
28.01.2007 அன்று மன்னார் உப்புக்குளம் சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாவிஷேக சிறப்பு மலரில் 12 பாடல்கள் 500 பிரதிகளாக  வெளியீடு..
16.04.2007 கீரி அருள்மிகு ஸ்ரீபால முருகன் பக்திப் பாடல்கள் 10 பாடல்களைக் கெர்ட நூல்கள் 150 பிரதிகளாக வெளியீடு..
12.08.2007 உப்புக்குளம் அருள்மிகு இராச இராஜேஸ்வரி அம்பாள் துதிப் பாமாலை 12 பாடல்களைக் கொண்டது. நுல்கள் 150 பிரதிகளாக வெளியீடு.
06.07.2008 அன்று மன்னார் அருள்மிகு ஆலடி விநாயகர் மகிமைப் பாமாலை 10 பாடல்கள் கொண்ட 200 பிரதிகளாக வெளியீடு..
08.05.2009 அன்று மன்னார் செல்வநகர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் பாமாலை 10 பாடல்கள் கொண்ட நூல்கள் 200 பிரதிகளாக வெளியீடு
11.11.2009 அன்று தோ.ட்டக்காடு மன்னார் அருள்மிகு ஸ்ரீ செந்தூர் முருகன் பக்தி பாடல்கள் 10 பாடல்கள் கொண்ட நூல்களாக 200 பிரதிகள் வெளியீடு
23.08.2010 அன்று நானாட்டான் அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்துமாரி அம்மன் பக்திப் பாடல்கள் 10 பாடல்கள் கொண்ட நூல்கள் 200 பிரதிகள் வெளியீடு



இசைத் துறையில் பெற்ற விருதுகளும் கௌரவங்களும் பற்றி?

மன்னார் மாவட்ட கலை இலக்கிய மன்ற முத்தமிழ் விழாவில் எனது கலைப் பணிகளைப் பாராட்டி 29.09.2013 அன்று 'இசைத் தமிழ் மகள்' பட்டம் தந்து கௌரவித்தார்கள். 
நானாட்டான் பிரதேச செயலக கலாச்சார பேரவை நடாத்திய விழாவில் எனது சேவையைப் பாராட்டி 'செழுங்கலை வித்தகர்' விருது தந்து கௌரவித்தார்கள்.
மன்னார் ஆலடி விநாயகர் பாமாலை நூல் வெளியீட்டு விழாவில் கர்நாடக 'இசைமணி' என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளரும் சபைத் தலைவருமான வி.ஜி.ஆர் ஜெவ்றி அவர்களும் கதிரேசன் சிவம் ஐயா அவர்களும் பாராட்டி கௌரவித்தார்கள்.
யாழ்ப்பாண நல்லை ஆதினம் என்னை பாராட்டி ஆசிர்வதித்துள்ளார். இன்னும் பல அமைப்புகளால் கோயில் நிர்வாகத்தினரால் பொற்கிழியும் பொன்னாடையும் போர்த்தி கௌரவித்தார்கள்.
2014 ஆண்டிற்கான கலாபூஷண விருது பெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்னார் கலைஞர்களுக்கு மகுடம் சூட்டும் மன்னார் இணையம் பற்றி தங்களின் கருத்து?

எங்களைப்  போன்ற கலைஞர்களை வீடு தேடி வந்து உரையாடி ஊக்கமளிக்கும் உங்களின் பணி மிகவும் போற்றத்தக்கது. இப்படியான கடினமான செயலை செய்யும் உங்களுக்கும் உங்கள் இணைய நிர்வாகத்தினருக்கும் எத்தனை முறை நன்றி கூறினாலும் தகாது. எல்லாம் வல்ல இறைவன் தான் உங்களுக்கு எல்லா வல்லமையும் தந்து தொடர்ந்தும் சேவையாற்ற வேண்டுகிறேன். மென்மேலும் வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

சந்திப்பு : வை. கஜேந்திரன்.

















இலக்கியப் படைப்பாளி பி.பி அந்தோனிப்பிள்ளை அவர்களின் இதயத்திலிருந்து,,,,,


கலைஞனின் அகம் கணனியில் முகம் இப் பகுதியில்  இன்றைய கதாநாயகன் இலக்கியப் படைப்பாளி, நாடக ஆசிரியர், தமிழ் ஆசிரியர் ஓய்வு பெற்ற அதிபர் கவிஞர் என பல பன்முக ஆற்றலோடு திகழும் பி.பி அந்தோனிப்பிள்ளை எனும் மூத்த கலைஞர் அவர்களின் இதயத்திலிருந்து

தங்களைப் பற்றி ?

மன்னார் மாதோட்டத்தில் விவசாய செழிப்புமிக்க அழகிய ஆத்திக்குழி தான் எனது சொந்த இடம். எனது மனைவி பிள்ளைகNhளடு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றேன். தற்போதைய சூழலில் முதுமை காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளேன்.

பள்ளிப் பருவம் பற்றி?

 ஆரம்பக் கல்வியை மாவிலங்கேணி மத்திய மகாவித்தியாலயத்திலும் உயர் கல்வியை யாழ்ப்பாணம் பத்திரிசியார் கல்லூரியிலும் கற்று எஸ்.ஐ.பரீட்சையில் சித்தியெய்தி தமிழ் ஆசிரியராக நியமனம் பெற்றேன். சின்ன வயதில் குழப்படிதான். குழப்படி காரணமாக எனக்கு ஆங்கிலப் புலமையைப் பெற முடியாமல் போய் விட்டது. இப்பவும் கவலை தான்.

• சிறுவர் இலக்கியம் படைப்பதற்கான சந்தர்ப்பம் எவ்வாறு அமைந்தது ?

ஆசிரியர் நியமனம் பெற்றபின்பு சிறுவர் இலக்கியம் படைக்ககூடிய சந்தர்ப்பம் தானாக அமைந்தது. நான் பரம்பரை பரம்பரையாக வந்த கலைஞனோ கவிஞனோ கிடையாது. எனது தமிழ் பற்றின் தாகத்தால் தான் நான் கலைஞனானேன். 'பாட்டுப்பாடி ஆடுவோம்' என்ற எனது முதலாவது சிறுவர்களுக்கான படைப்பு .1989ம் ஆண்டு வெளியிட்டேன். புத்தகம் சொந்தமாக வெளியிடுவதில் உள்ள சகப்பான அனுபவத்தால் அதை நிறுத்திக் கொண்டேன்.

கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு?

பாடசாலையில் கற்பித்துக் கொண்டு இருக்கும் போது சிறுவர்களுக்கான பாடலாக 'கத்தரி தக்காளி மிளகாய்' 'வாலைத்தூக்கி ஓடி வரும்' ஆகிய இரு பாடல்களும் கல்வித் திணைக்களத்தினால் ஆசிரியர் கைநூலில் இடம் பெற்றதை தொடர்ந்து பெரும் வரவேற்பும் பாராட்டும் கிடைத்தது. அத்தோடு நான் உற்சாகத்துடன் நான் கவிதை எழுதவும் ஆரம்பித்தேன். ஆனால் எனக்கு கவிதை இலக்கணம் (யாப்பு, சொல், அணி, எதுகை, மோனை) வரைவிலக்கணம் எதுவும் தெரியாது. ஆனால் நான் எழுதிய பாடலும் கவிதைகளும் எல்லா அம்சங்களும் உள்ளது என்றார்கள். உளமாற ஏற்றுக்கொண்டு பாராட்டினார்கள்.

கவிதை பற்றி தங்களின் கருத்து ?

கவிதைக்கு ஒரு இலக்கணம் இருக்க வேண்டுமா? இலக்கணத்திற்கு ஒரு வரைவிலக்கணம் இருக்க வேண்டுமா? இலக்கியம் எனும் போது அதற்குள் அடங்க வேண்டும். இதற்குள் அடங்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் இலக்கியம் இலக்கியமாகவே இருக்க வேண்டும். அதுதான் சிறப்பு. அதற்கொரு எல்லை இருக்க கூடாது. அதற்கு எல்லை வகுத்தால் அதற்கு ஏது இருப்பு. இதை புதிதாய் படைப்போம் காப்பதும் எம் பொறுப்பு...

உங்களது கவிப் படைப்பைப் பற்றி?

சிறுவர் இலக்கிய பாடல்கள் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெறவும் எனது கவிதைகள் வானொலியில் முதன் முதலில் 2004ம் தேசிய வானொலியில் ஒலிபரப்பானது அன்றிலிருந்து இன்றுவரை ஒரு .சில நாட்களைத் தவிர ஒலிபரப்பாகின்றது. அவ்வாறு வானொலியில் தவி;ந்த எனது கவிதைகளையும் என்னிடம் இருந்த கவிதைகளையும் தொகுத்து நூலாக வெளியிட வேண்டும் என்று தீர்மானித்தேன். அவ்வாறே எனது முதலாவது கவிதை தொகுதி மார்கழி 2011 அன்று 'மழலை அமுதம்' என்ற பெயரில் லங்கா புத்தக நிறுவனத்தின் வெளியீட்டாக வந்தது. எனது இரண்டாவது தொகுப்பான 'மாண்புமிகு மாதோட்டம்' எனும் கவிதை தொகுதி 15.03.2013 வெளியீடு செய்துள்ளேன்.

ஆசிரியராக ஓய்வுநிலை அதிபராக இருக்கும் நீங்கள் தற்கால கல்வியைப் பற்றிய கருத்து?

கல்வி என்பது அன்றைய காலம் போல அல்ல. இன்று பல வழிகளில் பல விதமாய் விரிவடைந்து செல்கின்றது. யாரும் எப்படியும் எப்பொழுதும் எங்கேயும் கற்கலாம் தானே படிக்கின்றார்கள். ஆசிரியர்தான் வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதனால் ஆசிரியர்களையும் மாணவர்களையும் சமூகத்தையும் குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை. உரிமையுமில்லை. ஆசிரியருக்கே சொல்லிக் கொடுக்கும் அளவிற்கு தற்போதைய மாணவர்களின் திறமை .காணப்படுகின்றது. இதற்கு நவீனத்தின் சிறப்பும் மாணவர்களின் தானே கற்றல் தன்மையும் தான் காரணமாக அமைகின்றது.

உங்களை எவ்வாறு வளர்த்துக் கொண்டீர்கள்?

கல்வி கற்றலின் பயனாக ஆசிரியர் நியமனம் அத்தோடு சிறுவர் இலக்கியப் படைப்பாளியாக என்னை வளப்படுத்தினேன். அத்தோடு ஓய்வு நிலை அதிபராகவும் என்னுள் இயல்பாக இருந்த கவித் தன்மையும் வெளிப்பட நான் கவிஞன் ஆனேன். எம்மை நாமே இனம் கண்டு முயற்சியும் பயிற்சியும் செய்தால் இலகுவில் இலக்கை அடையலாம்.

வானொலிக்கு நாடகம் எழுதியது பற்றி?

வானொலியில் நாடகம் ஒலிபரப்பினார்கள். அதே போல் தேசிய விழிப்புணர்வு நாடகமாக எழுதியனுப்ப வேண்டும் என்றார்கள். நான் முதலில் வானொலியில் ஒலி பரப்பான 'குப்பை' எனும் நாடகத்தை கேட்டேன். அதே பாணியில் நான் 'தேசிய சொத்து', 'கட்டுக் காசுக்கு கடன் சாமான்', 'தேசிய விருது' போன்ற நாடகங்களை எழுதினேன். அவற்றை வானொலியில் ஒளிபரப்பிய போது மிகவும் சந்தோஷம் அடைந்தேன்.

மூன்று துறைகளிலும் எது இலகுவானதாக கருதுகறீர்கள்?

 எழுதுவது என்பது இலகுதான் எனக்கு மூன்று துறையுமே எழுதுவது மிகவும் இலகுவாக இருந்தாலும் கணனியில் ரைப் செய்தால் நாடகம் எழுதுவது மிகவும் இலகுவாக உள்ளது. காரணம் பல பக்கங்கள் எழுதிய பின்பு சில விடையம் பிடிக்கவில்லையென்றால் மீண்டும் எழுத வேண்டும். ஆனால் கணனியில் நொடிப்பொழுதில் பிடிக்காத விடையத்தை அழித்து விட்டு புதிதாக ரைப் செய்யலாம். விருப்பத்தினை உடனே எழுதி விடலாம். கணணியுகம் இலகு.

உங்களைக் கவலைக்குள்ளாக்கிய விடயம்?

எனக்கு பேச்சுக் கலை மீது அதிக விருப்பம். ஆனால் என்னிடம் இருக்கும் கூச்ச சுபாவம் காரணமாக எல்லா விதமான நிகழ்ச்சிகளிலும் இருந்தும் விலகி வந்தேன். அதனால் என்னிடம் உள்ள மனக் கருத்து களை எண்ணங்களை அபிலாசைகளை வெளிக்காட்ட முடியாமல் போனது. என்னுள்ளே பல விடையங்கள் முடங்கியது. மிகவும் கவலையானதொரு விடையம் மட்டுமல்ல மிகவும் வேதனைப்படுகின்றேன். இதனால் தான் எனக்கு கிடைக்க இருந்த 'கலாபூஷண' விருதினையும் இழந்தேன்.

இவ் கலையுக வாழ்வில் நீங்கள் மிகவும் சந்தோஷம் அடைந்த விடயம்?

எனது கவிதைகள், பாடல்கள், கதைகள், பத்திரிகைகளில் நூல்களாகவும் வரும் போது எவ்வளவிற்கு மனம் சந்தோஷம் அடையுமோ அதே போல் பல மடங்கு சந்தோஷம் அடைந்துள்ளேன். எனது நாடகம் வானொலியில் ஒலிபரப்பான போது நான் ரசித்து எழுதிய ஒவ்வொரு வசனமும் என் காதில் விழும் போது எல்லையற்ற மகிழ்ச்சி தான் அதை வார்த்தைகளால் கூறிவிட முடியாது. என்னை அறிமுகப்படுத்தியதும் பிரபல்யப்படுத்தியதும் இலங்கை தேசிய வானொலிதான்.

உங்களை மிகவும் கவர்ந்த கலைஞர்கள் யார்? (இலங்கை, இந்தியா)?

 எல்லாக் கலைஞர்களையும் பிடிக்கும். கொசிமின் வியட்நாம் ஜனாதிபதியாக இருந்தவர். அவர் இலட்சியக் கணக்கான கவிதைகளை எழுதியுள்ளார். அவர் எழுதிய கவிதைகளில் ஒன்று

நான் காடுமேடு 'அலைந்து திரிந்தேன்
மேடு பள்ளங்கள் ஏறி இறங்கினேன்
மலை மேடுகள் பள்ளத்தாக்குகள் சுற்றினேன்
வனாந்தரங்கள் சமவெளிகள் ஊடாக பயணம் செய்தேன்

கொடிய விலங்குகளை சந்தித்தேன்
எவ்வித ஆபத்தும் இன்றி தப்பினேன் - அழகிய
சமவெளிக்கு வந்தேன்
மனிதனை சந்தித்தேன் - இப்போது  
நான் சிறையில் இருக்கின்றேன் 
இதே கருத்துடைய
கொம்பிழவர் ஐந்து
குதிரைக்கு பத்து முழம்
வெம்புதரிக்கு ஆயிரம்தான் வேண்டும்
மனிதனை பொறுத்த மட்டில்.........?
எந்த நாடக இருந்தாலும் கருத்து தான் முக்கியம்.

நீங்கள் எழுதியதில் உங்களை கவர்ந்த கவிதை எது?

'அறியாப் பருவத்திலே
ஆரம்பித்தான் சுவைக்க
அரக்கத்தனம் அறிந்தபின்
அமிழ்ந்து விட்டான் அதற்குள்'

மனிதரில் பிடித்தது?

உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி பேசும் மனிதரை பிடிக்கும்.

நூல்கள் பலவுண்டு நீங்கள் விரும்பிப் படித்த நூல் பற்றி?

டால்ஸ்டாயின் சிறகதை தொகுப்பில் 'மூன்று துறவிகள்' எனும் டால்டாயின் சிறுகதை மிகவும் பிடிக்கும்.

ஆசிரியராக அதிபராக பணியாற்றிய ஆண்டுகள் - 30 ஆண்டுகள் 

தற்போதைய நிலையில் (74 வயதில் உடல் சுகயீனமான) யாரை சந்திக்க விரும்புகின்றீர்கள்?

எனது நண்பர் கலாபூஷணம் செ.செபமாலை குழந்தை மாஸ்ரர் அவர்களை சந்திக்க விரும்புகின்றேன். பழைய பசுமையான நினைவுகளை மீட்க..

தற்போதைய நிலையில் என்னால் இலக்கியப் பணி ஆற்றமுடியவில்லையே என்று நினைத்ததுண்டா?

ஆம் நிச்சயமாக நான் இப்போது தான் வானொலிக்கு நாடகத்தை எழுதி அனுப்பினேன். ஒன்று இரண்டு, மூன்றிற்கு எனக்கு உடல்நிலை மிகவும் மோசமான நிலையினை அடைந்தது. எனது ஆசை குறைந்தது. 100 நாடகங்களாவது வானொலியில் ஒலிபரப்பும் அளவிற்கு எழுத வேண்டும் என்று அது நிறை வேறவில்லை. எதிர்பார்ப்போடு இருக்கும் சந்தர்ப்பம் அமைவில்லை. சந்தர்ப்பம் அமைந்த போது என்னால் முடியவில்லை. ஏமாற்றம் தான் வாழ்க்கை.

உங்களது ஜெயிப்புத் தன்மை பற்றி கூறுங்களேன்?

நான் பெரிதாக எதையும் வெற்றி பெறவில்லை. ஒரு நல்ல நிலைக்கு வெற்றி கொண்டரிடம் உங்கள் உயர்வுக்கு காரணம் எனும் போது அவன் எவனோ ஒருவனைத்தான் சொல்கிறான். தானாக எவனும் முன்னேறியதாக சொல்வதில்லை. அவ்வளவுதான் அவர்களது  நினைவும் உள்ளது. அவனவனின் முயற்சியும் பயிற்சியும் தான் அவனது முன்னேற்றத்திற்கு காரணம்.

தற்கால இளைஞர்களுக்கு தங்களின் கருத்து?

திருவாடுதுறை  இராஜரெட்ணம் செவ்வியின் போது ஜனாதிபதி விருது கிடைத்தது பற்றி கேட்ட போது அது எனது திறமைக்கு (நாதஸ்வர வித்துவான்) கிடைத்த விருதல்ல. அவர் ஆராய்ந்து அறிந்து தரவில்லை. பலர் சிபாரிசு செய்யவும் சொல்லவும் தான் தந்தார். அதை நான் ஏற்றுக் கொண்டேன். கௌரவத்திற்காக மனதால் அல்ல. அப்படியெனின் கல்யாண வரவேற்பு நிகழ்வில் நாதஸ்வரம் வாசித்துக் கொண்டு வருகின்றேன். நல்லிரவு ;1 மணியிருக்கும் 'சபாஷ் என்றறொரு சத்தம்' கேட்டது. திரும்பிப் பார்க்கின்றேன் ஆம் அங்கு அக்காலத்தில் வீதி விளக்குகள் இல்லை. மண்டையில் விளக்கை வைத்து நடப்பார்கள். அவர்களின் ஒருவன் தான் அவனை பார்த்து கை கூப்பி வணங்கினேன். அவன் இது போன்ற பல நிகழ்ச்சிகளை ரசித்தவன். இசை ஞானம் பெற்றவன். 'அந்த சபாஷ் தான்' நான் பெற்ற உயரிய விருதாக கருதுவேன் என்றார் அதுபோல கலை வந்து படிப்பிலையோ பட்டத்திலையோ இல்லை. அவனது திறமையைப் பொறுத்து அமையும். விருதுக்காக உங்கள் திறமை வெளிப்படாமல் உங்கள் திறமைக்காக விருதுகள் கிடைக்கட்டும். போதுமானளவு அனுபவத்தையும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளுங்கள் திறமையினை வெளிப்படுத்துங்கள். அதுவும் இளமையிலே நிலைத்து நில்லுங்கள்.

உங்களது படைப்புக்கள் பற்றி?

இரண்டு பிரிவாக நோக்கலாம். சிறுவர் பாடசாலை தொடர்பாகவும் கவிதைகள் தொடர்பானது. 
1. பாட்டுப்பாடி அடுவோம் - 1989 (சொந்த வெளியீடு)
2. பாடலும் சூழலும் - காயத்திரி பப்ளிகேசன்
3. பாடல் சொல்லும் கதைகள் - 2009 செப்ரம்பர் பிறைற் நிறுவனம்
4. பாடி மகிழ்வோம் - லங்கா புத்தகசாலை
5. கிராமத்தின் இதயம் (நாட்டார் பாடல்) - லங்கா புத்தகசாலை
6. சிறுவர் கதம்பமாலை - 2007,ஆகஸ்ட், காயத்திரி பப்ளிகேசன்
7. கட்டுரைக் கதம்பம் (தரம் 9-11) 2011டிசம்பர் - லங்கா புத்தகசாலை
8. கட்டுரைக் சுரங்கம் (தரம் 8-11) - காயத்திரி பப்ளிக்கேசன்
9. வரலாற்றில் தடம் பதித்தோர் 2008 ஜனவரி - காயத்திரி பப்ளிகேசன்
10. கட்டுரை எழுதுவோம் எப்படி 1990 - லங்கா  புத்தகசாலை
11. மாணவர் கட்டுரைக் கோலங்கள் (4,5,6) - லங்கா புத்தகசாலை
12. சிறுவர் சிந்தனை விருந்து (தரம் 5) - திவ்வியா பப்பிளிக்கேசன்
13. பாலர் கதை விருந்து - லங்கா புத்தகசாலை
14. ஆத்தி சூடி அறுபது - லங்கா புத்தகசாலை
15. கொன்றை வேந்தன் அறுபது - லங்கா புத்தகசாலை
16. கத்தோலிக்க திருமறை-சிறுவர் இலக்கிய வழியில் - லங்கா புத்தகசாலை (தரம் 2,3)
17. திருமறையும் நடைமுறையும் (தரம் 6, 7) - லங்கா புத்தகசாலை
18. தமிழ்மொழி செயல்நூல் (தரம் 4,5) - காயத்திரி பப்ளிக்கேசன்
19. கணிதம் செயல்நூல் (தரம் 4) - காயத்திரி பப்ளிகேசன்
20. கணிதப் பயிற்சி (தரம் 5) - காயத்திரி பப்ளிகேசன்
21. சூழலைப் பாடுவோம் - திவ்யா பப்ளிகேசன்
(கிடைக்கப் பெற்றவை)
கவிதை நூல்களாக..
1. மழலை அமுதம் கவிதைத் தொகுதி (மார்கழி 2011)
2. மாண்புமிகு மாNதூட்டம் (மண் பேசும் கவிதைகள்) 5.06-2013

சிறுகதைகளாக
இலங்கையின் இருபத்தெட்டு சிறுகதைகள் நூலில்
'வீட்டைக் கட்டிப்பார்' எனும் சிறுகதையும் வந்துள்ளது.
தேசிய வானொலியில் :தேசிய சொத்து', 'கட்டுக்காசுக்கு கடன்சாமான்' 'தேசிய விருது'
(ஒலிபரப்பானது)

தங்கள் கலைச் சேவையைப் பாராட்டி தந்த விருதுகள் பற்றி?

நான் பெரிதாக எதையும் பெற்று விடவில்லை. ஞாபகமும் இல்லை.
1. கல்வி பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வடமாகாணம் வழங்கிய ஆளுநர் விருது –2008
2. ஞானம் சஞ்சிகை – அட்டைப்பட அதிதியாக கௌரவித்தது.
3. மன்னார் தமிழ் செம்மொழி விழா 'நினைவுச் சின்னம்' 2010
4. மன்னார் தமிழ் செம்மொழி விழா 'கௌரவ விருது' 2010
5. மன்னார் நானாட்டான் பாடசாலைச் சங்கம் 'நினைவுச் சின்னம்' 2011
6. மன்னார் முருங்கன் கலா மன்றத்தினால் மன்ற இயக்குனர் 'கலைத்தவசி' 'கலாபூசணம்' செ.செபமாலை அவர்களால் (குழந்தை) எனது மாண்புமிகு மாதோட்டம் புத்தக வெளியீட்டின் போது எனக்களித்த 'மழலைக் கவியோன்' என்ற விருது (5.06.2013) இவ் விருதையே எனக்கு கிடைத்த உயரிய விருதாக கருதுகின்றேன்.

இன்னும் பல அமைப்புகள் சமூக சங்கங்கள் மூலமும் பாராட்;டுப்பத்திரமும் பொன்னாடையும் போர்த்தி பொற்கிளி தந்தும் கௌரவித்துள்ளார்கள்.

கலைத்துறையில் உங்களை ஊக்குவித்தவர்கள் பற்றி?

நினைவு கூற வேண்டியவர்கள் நிறையப் பேர் உள்ளனர்.
முதலில் எல்லாம் வல்ல இறைவன் என் பெற்றோர்கள் எனது நண்பர்கள் குறிப்பாக எனது ஆக்கங்களை வானொலியில் கேட்டும் எனது படைப்புக்களை பார்த்தும் உடனுக்குடன் பாராட்டும் நண்பன் பி.பிரான்சிஸ் சேவியர் அவர்களுக்கும் எனது கவிதைகளையும் நாடகங்களையும் தவழ விட்டு என்னை வெளிப்படுத்திய இலங்கை தேசிய வானொலியில் 'கலசம்' கவிதை தயாரிப்பாளர் ஜெயந்தி ஜெயசங்கருக்கும் எனது படைப்புக்களை சிறந்த முறையில் அச்சிட்டு வெளியீடு செய்யும் லங்கா புத்தக நிறுவனத்தின் முகாமையாளர், காயத்திரி நிறுவன முகாமையாளர் திரு.வே.நவமோகனுக்கும் பிறைட் நிறுவன முகாமையாளருக்கும் இன்னும் பல வழிகளிலும் என் பயணத்தில் பங்கு கொண்ட அனைவரையும் நன்றியுடன் நினைக்கின்றேன்.

மன்னார் இணையம் பற்றி தங்களின் கருத்து?

இலக்கணம் இலக்கியம் என்றில்லாமல் எல்லாக் கலைஞர்களையும் உள்வாங்கி வெளிச்சத்திற்கு கொண்டு வருதல் அளப்பரிய சேவை என்பேன். எம்மை போன்ற கலைஞர்களுக்கு பெருமை தான். எவ்வளவோ கஸ்ரப்பட்டு துன்பப்பட்டு கலைக்காக வாழ்கின்ற நம்மை வீடு தேடி வந்து உரையாடி உறவாடி உலகறியச் செய்யும் வண்ணம் இணையத்தில் எங்களை இணைத்து வெளிப்படுத்தும் உங்களுக்கும் உங்கள் இணைய நிர்வாகிக்கும் எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள். குறிப்பாக முதுமையின்  பிடியில் சிக்கியிருக்கும் என்னைப் போன்றவர்களையும் இணையத்தில் சேர்ப்பது எனது பாக்கியமாகவே கருதுகின்றேன். தொடரட்டும் உங்கள் சேவை அற்புதமான சேவை.

சந்திப்பும் சிந்திப்பும்
வை.கஜேந்திரன்.







கலைஞர் ஏ.டி.தேவதாசன் அல்மேடா அவர்களின் அகத்திலிருந்து

கலைஞனின் அகம் கணினியில் முகம்

 கணனியில் முகம் கலைஞனின் அகம் எனும் பகுதியின் இவ் வாரத்திற்கான படைப்பாளி கவிஞர், நாடக நடிகர், திரைப்பட நடிகர், நாடகஆசிரியர் மற்றும் நெறியாளர், சமாதான நீதவான், ஓய்வுபெற்ற தபாற் சேவகர்; என தன்னை சமூகத்திற்குரியவராக வளப்படுத்திக் கொண்டு இருக்கும் கலைஞர் ஏ.டி.தேவதாசன் அல்மேடா அவர்களின் இல்லத்தில்....

தங்களைப் பற்றி?

மாண்புமிகு மன்னார் மாந்தை தெற்கு பரப்பான்கண்டல் கிராமம் தான் எனது சொந்த இடம். ஆரம்பக் கல்வியை பரப்பான்கண்டல் பாடசாலையிலும் உயர்கல்வியை புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையிலும் .கற்றேன். எனது தந்தை அந்தோனி அல்மேடா, தாய் லூர்த்தம்மாள். தற்போது முருங்கன் பிட்டியில் பிள்ளைகளுடன் கலைக்குடும்பமாகவே வாழந்து வருகின்றோம்.

உங்களது நாடக அறிமுகம் பற்றி?

1967ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை பல நாடகங்களை எழுதி இயக்கி மேடையேற்றியுள்ளேன். எனது முதல் நாடகம் மரிய கொறற்றி. புனிதையின் சரித்திர நாடகத்தின் கதாநாயகன் அலெக்ஸ்சாண்டர் வேடமேற்று நடித்தேன். அப்போது என் மனநிலை நான்தான் பிரதான கதாநாயகன். நான் நடிக்கப் போகின்றேன். எல்லோருடைய பார்வையும் ஆவலும் என் மேல் தான். என்னைத் தான் எல்லோரும் பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள். எந்தக் குறையுமில்லாமல் நடிக்கணும் பாராட்டு வேண்டனும் என்ற எண்ணத்தோடு தான் நடித்தேன். பாராட்டும் பெற்றேன். அன்றில் இருந்து இன்றுவரை என் நாடக வாழ்க்கை தொடர்கின்றது.

உங்களை நாடகத்தில் அறிமுகப்படுத்திய குரு பற்றி?

நான் இன்னிலைக்கு காரணம் எனது குருதான் எ.பி.சேகர். உயிர்த்தராசன் குளத்தில் வசிக்கின்றார். அன்றைய காலத்தில் என்னை தெரிவு செய்து அதுவும் கதா நாயகனாக என்னை அறிமுகம் செய்து மேடையேற்றியவர். சிறந்த நாடக எழுத்து இயக்க நெறியாளர். திறமையானவர். டிக்கற் நாடகமாக இருந்தும் ;மக்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியே இன்றும் என்னுடைய வளர்ச்சி பாதையினை தொடங்கி வைத்தவர்...

நீங்கள் கதையெழுதி இயக்கி நடித்த முதல் நாடகம் பற்றி?

பண்டார வன்னியன், சங்கிலியன் என்னும் தமிழ்ப் பாரம்பரிய நாடகங்கள் தான் உண்மையான சரித்திரங்கள். அதில் நான் பண்டாரவன்னியனாகவும் சங்கிலியனாகவும் நடித்தேன். அதிலும் பெரும் பாராட்டு கிடைத்தது. பெரிய கட்டு என்னும் இடத்தில் கோயில் பெருவழாவில் தமிழ்ப் பொலிசாரால் பாராட்டப்பட்டு அவர்கள்; ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென ஒலிபெருக்கி பிரச்சினையாகி விட்டது. அந்த நேரத்தில் எல்லோரும் ஆரவாரப்பட்டார்கள். மேடைக்கு வந்த தமிழ்ப் பொலிசார் எல்லோரும் அமைதியாக இருங்கள் இன்னும் பத்து நிமிடங்கள் செட்டி குளத்தில் இருந்து ஒலிபெருக்கி கொண்டு வந்து நாடகத்தை போடுவோம் என்றார்கள். அது போலவே செய்தார்கள். நாடகத்தை வெகு சிறப்பாக நிறைவேற்றினோம். அந்த நாடகத்தின் மீது இருந்த அக்கறை தமிழ்ப்பற்று தமிழ் உணர்வு அவர்கள் முகத்திலும் அகத்திலும் தென்பட்டது. சந்தோஷம் அடைந்தேன். நல்லவரவேற்பும் கிடைத்தது.

உங்கள் நாடகத்தில் உங்களை மிகவும் கவர்ந்த நாடகம் பற்றி?

ஆங்கில கவிராஜன் ஷேக்ஸ்பியர் உணர்வு  பூர்வமாக எழுதிய 'ஒத்தெல்லோ' நாடகம் 2009, 2010 ஆண்டுகளில் உயர்தர பாடத்தில் நாடகரங்கியல் பல விடையங்களை உள்ளடக்கியது. 'ஒத்தெல்லோ' கைக்குட்டை சந்தேகம்' அதில் எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டமையால் அதை நாடகமாக எழுதி உயர்தர மாணவர்களை இயங்கி அதில் நான் ஒத்தெல்லோவாக நடித்தேன். மன்னார் மண்ணில் 4 தடவைகள் மேடையேற்றப்பட்டது. எனது மனம் கவர்ந்த நாடகம் அது தான் அதிலும் மறக்க முடியாத விடையம் என்னவென்றால் என்னுடன் வில்லனாக நடித்த மாணவன் அதே ஆவணி மாதத்தில் பரீட்சையில் நாடகரங்கியல் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று 'ஒத்தெல்லோ' நாடகப் பாத்திரத்தை விளக்கு அக் கேள்விக்கு சிறப்பாக பதில் எழுதியதாகவும் நான் சித்தியடைவேன் என்றான் அதே போல் சித்தியும் அடைந்து இப்போது நாடகரங்கியல் ஆசிரியராகவுள்ளார்.

உங்கள் பெயரை நிலை நிறுத்தி நாடகம் என்று சொன்னால்?

அண்மையில் முதியோர்களை கௌரவப்படுத்தும் வகையில் 'ஆணிவேர்கள்' என்னும் நாடகம் பெற்றோர்களை பிள்ளைகள் அநாதை இல்லம், முதியோர் இல்லம், கவனிப்பார் அற்ற நிலையை அவல சூழ்நிலையை சுட்டிக் காட்டுவதாக அமைந்தது. 'ஆணி வேர்கள்' எழுதி நெறியாள்கை செய்தேன். நான் நடிக்கவில்லை. மக்கள் மனதில் என்னை நிலை நிறுத்தியது எனலாம்.

உங்களை கவர்ந்த நாடகம்? பேரை நிலை நிறுத்திய நாடகம்?மற்றும் உங்களது நாடகத்திற்கான மக்கள் அங்கீரகாரம் எவ்வாறுள்ளது?

நான் முதலில் நகைச்சுவை நாடகங்களைத் தான் எழுதினேன். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தேவதாசன் அல்மேடா என்றால் நாடகம் நன்றாய் இருக்கும் வயிறு குலுங்கி சிரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் வருவார்கள் என்ற சூழல் அமைந்தது. நகைச்சுவையோடு சேர்த்து சமுதாய சீர் திருத்தங்களையும் சேர்த்துக் கொள்ள விரும்பினேன். அது போல பல நாடகங்களை மேடையேற்றினேன். பல நிறுவனங்களும் என்னுடன் இணைந்து கொண்டன. சுனுகுஇ ஊவுகுஇ மிதிவெடி பிரிவுஇ ஊயுசுநுஇ வாழ்வுதயம், மன்னார் பிரஜைகள் குழு தங்கள் நிறுவனக் கொள்கைகளையும் மக்களின் விழிப்புணர்வையும் பரப்புவதற்காக முயற்சிகளில் இறங்கியுள்ளேன். பல நாடகங்களை இயக்கி நெறியாள்கை செய்து மக்களிள் அங்கீகாரமும் கிடைக்கின்றது.

பல நூறு  நாடகங்களை எழுதி இயக்கி நெறியாள்கை செய்துள்ள நீங்கள் உங்கள் நாடகங்களை நூல் வடிவம் ஆக்கியுள்ளீர்களா?

புனித சவேரியாரின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக நாட்டுக் கூத்து இன்னும் நம் மதிதியில் அதற்கான மவுசு உள்ளது. சின்னப்பண்டிவிரிச்சான் கோயில் மக்களின் வேண்டுகோளிற்கு இணங்க புனித சவேரியார் எனும் புனிதரின் வாழ்க்கை வரலாற்றை மூன்றரை மணித்தியால நாடகமாக அரங்கேற்றினேன். அதனை சில பங்குத் தந்தையர்களின் உதவியோடு நூலாக்கும் விருப்பம் தெரிவித்தேன். மிக விரைவில் நூலாக வெளிவரும் என்னுடைய ஏனைய நாடகங்களை நூலாக வெளியிட விருப்பம்தான் பொருளாதார பிரச்சினையால் அப்படியே உள்ளது.

நாடகத் துறையில் வளர்ச்சி பெற்று வரும் நீங்கள் மேலதிகமாக மேற்கொள்ளும் விடையங்கள் பற்றி?

மன்னார் மாவடடத்தில் நடைபெறுகின்ற ஒவ்வொரு நாடக விழாக்கள் போட்டிகளுக்கு நடுவராக கடமையாற்றியுள்ளேன். அத்தோடு தமிழ்த்தினப் போட்டி மாவட்டம், மாகாணம், கோட்டம் என பல போட்டிகளில் முதலா.ம் இடங்களை பெற்றுள்ளன. எனது நாடகங்களும் பலவுண்டு. அத்தோடு நான் 1966ம் ஆண்டில் இலங்கை சினிமாத்திரைப் படமான 'மீனவப்பெண்' எனும் திரைப்படத்திலும் சிறு கதா  பாத்திரம் ஒன்று நடித்துள்ளேன். வி.எஸ்.கிருஷ்ணக்குமார் இயக்கத்தில் வெளியானது

கவிதை துறை பற்றி?

இதுவரை நூலக வெளிவரவில்லை. ஆனால் பல கவிதைகளை எழுதிவைத்துள்ளேன். அத்தோடு எமது கிராமத்தில் மங்களகரமான அனைத்து விடையங்களுக்கும் பிரியாவிடை நிகழ்வுகள் வாழ்த்துப்பாக்கள், கவிமாலைகள், எழுதிக் கொடுத்துள்ளேன். எழுதி வருகின்றேன். பலரின் பாராட்டினையும் பெற்று வருகின்றேன். கவிதை நூல் வெளியிடும் எண்ணமும் உள்ளது.

நீங்கள் நாடகங்களை எழுதி, இயக்கி, மேடையேற்றி நெறியாள்கை செய்வதோடு மட்டுமல்லாமல் நடுவராகப் பணியாற்றும் போது எவற்றையெல்லாம் நாடகத்தில் அவதானிப்பீர்கள்?

கதைக்கரு, அரங்கப்பயன்பாடு, அமைப்பு முறைகள், ஆடையலங்காரம் நடிப்பு, திறமைக்குத்தான் முதலிடம். இது வரை முப்பதிற்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் நடுவராக கடமையாற்றியுள்ளேன். என்னுடன நடுவராக பணிபுரியும் திறமையான நடுவர்கள் இடும் புள்ளியும் எனது புள்ளியும் சம அளவாகவே இருக்கும் பொறுப்போடு செயற்படுவோம்.

இவரை விடவும் நான் நன்றாக செயற்பட வேண்டும் என்று யாரையாவது நினைத்ததுண்டா?

அப்படி நான் நினைத்ததில்லை. எனக்கென்று நான் தனிப்பாணி வைத்துள்ளேன். எதுகை, மோனையோடு எழுதினால் மரபுக் கவிதையாக இருக்கும். நாடகம் எழதினால் 'தம்பி எங்க போற உன்ன நம்பியல்லா நான் வாறன்' நகைச்சுவை விரும்பி ஏற்றுக் கொள்வார்கள்.  நான் இதுவரை எதையும் சாதித்து விடவில்லை. 'கல்விக்கு கரையில்லை என்பது போல' கலைக்கும் கரையில்லை என்பேன். முன்பு நடிப்பு என்றால் சிவாஜிதான் என்று இருந்த எமக்கு சின்னப் பெடியன் தனுஷ், சிம்புவும் ஏன் இன்னும் பல புதுமுகங்கள் அட அருமையாகத் தான் நடிக்கின்றார்கள் என்று சொல்லும் அளவுக்கு நடிப்பு வளர்ந்து வருகின்றது. இதுதான் எல்லை என்று இல்லை. ஒவ்வொருவருடைய பாணிகள் அவர்களின் திறமையின் வெளிப்பாடுகள்தான்.

உங்களை மிகவும் கவர்ந்த கலைஞர் யார்?

அதிகமான கலைஞர்கள் இருக்கின்றார்கள். அதிலும் என்னை கவர்ந்த அபிமானி என்றால் அவர் சூரியகட்டைக்காட்டைச் சேர்ந்த செபமாலைப் புலவர் தான். மிகவும் திறமையானவர். கடந்த வருடம் கலா பூஷண விருது பெற்றவர். அவருடன் சேர்ந்து பல நாடகங்களை மேடையேற்றியுள்ளேன்.

இத்துறையினை தெரிவு செய்ததை விட சும்மா இருந்திருக்கலாம் என்று வெறுப்படைந்ததுண்டா?


ஆம் நிச்சயமாக சில சமயங்களில் அமைந்ததுண்டு. நாடகங்களை மேடையேற்றி மக்கள் வரவேற்பு கிடைத்தாலும் போதிய பணம் இல்லாமையினால் கடன் வாங்கி கொடுக்கும் போதும் வெளியிலும் சரி வீட்டிலும் சில வேளைகளில் மனைவி கூட இதைவிட வேற வேலையில்லையா? உங்களுக்கு அந்தக் காலத்தில் விடிய விடிய விளக்கை வைத்து எழுதிக் கொண்டு இருக்கிறீங்களே என்று பேசிய பல சந்தர்ப்பங்களில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து முட்டி மோதியதால் தான் இந்த நிலையை அடைந்தேன் என்னை நீங்களும் செவ்வி காண வந்துள்ளீர்கள்.

நாடகக் கலைஞர்கள் பயிற்சியுடன் நெறியாள்கை அன்றும் இன்றும்?

தொடக்ககாலத்தில் 1966 ஆண்டுப் பகுதியில் பெரியவர்கள் தான் தாங்களாகவே முன்வருவார்கள். அவர்களுக்கு அதன் மீது விருப்பம் இருந்தது. என்ன சொன்னாலும் எத்தனை தடவை சொன்னாலும் எதிர்ப்புக்கள் ஏதும் இன்றி சொல்லியதை அப்படியே செய்வார்கள். அப்போது எனக்கு மகிழ்ச்சியாய் 'இருக்கும். நாடகமும் நல்ல முறையில் வெளிவந்து பாராட்டுப்பெறும். இன்று பெரும்பாலும் இளைஞர்கள் தான் நாடகத்தில் ஈடுபட்டாலும் அவர்களிற்கு பெரிதாக நாட்டம் இல்லை. ஒரு முறைக்கு இரண்டுமுறை சொன்னால் அடுத்த நாள் பயிற்சிக்கு வரமாட்டார்கள். எவ்வளவு எதிர்பார்ப்புடன் நா.டகத்தினை எழுதி மனதில் ஒப்பனை போட்டு வைத்திருக்கும் போது அதற்கு சக நடிகர்கள் ஒத்துழைப்பு வழங்காவிடில் எவ்வாறு அவ் நாடகம் வெற்றி பெறும் அவ்வாறான சந்தர்ப்பத்தில் மனம் நொந்து வேதனைப்படுவேன்.


அன்று கலைதான் வாழ்வு இன்று வாழ்வின் ஓர் அங்கம் கலையானது பற்றி?

ஆம் உண்மைதான் இன்று கலை பல்கலைக்கழகம், பாடசாலையிலும் பாடமாக இருந்தும் நாடக அரங்கியலை ஓர் பாடமாக கற்றும் பயிற்றப்பட்டும் இருக்கும் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றிருந்தும் அதில் முதிர்ச்சியில்லை. மாணவர்களுக்கு தகுந்த முறையில் வழிகாட்டல் சிறந்த முறையில் பயிற்சிவிக்கவும் தவறி விடுகின்றார்கள். இதனால் வெறுப்புற்று விருப்பமின்றி எமது கலைப் பாரம்பரியம் தனது தன்மையை இழந்து வருகின்றது.

உங்கள் வாழ்வில் இருந்து தற்கால இளைஞர் யுவதிகளுக்கு சமுதாய விழிப்புணர்வு நாடகம் மூலம் வழிகாட்டியாக தங்களின் அனுபவ பகிர்வில் இருந்து?

மக்களின் இரசனை மாறிவிட்டது. பெற்றோர்களே தொலைக்காட்சி தொடர் நாடகத்திலும் பிள்ளைகள் இணையத்தில் இன்னும் எத்தனையோ விதமான நவீன முறைச் சாதனங்களினால் சீரழிவான வாழ்வை நோக்கியே அதாவது 'மின்னுவதெல்லாம் பொன்' என்று நினைத்து வாழ்வை தொலைக்கின்றார்கள். எவரையும் வலுக்கட்டாயப்படுத்தி நல்வழிக்கு கொண்டு வர முடியாது. அவர்களாகவே திருந்த வேண்டும். எமது கலை கலாசாரத்தை நாம் இழந்து விடக் கூடாது எனும் எண்ணம் உள்ளத்தில் வர வேண்டும். இல்லத்தில் அதற்கான வழிகாட்டல்கள் இருக்க வேண்டும். அப்போது தான் எமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் கூறி மறுமலர்ச்சியை காணலாம். கடமையும் அதுவே.


கலைஞர்கள் கௌரவிக்கப்படுவதில்லை தேவையின் பின் ஒதுக்கப்படுகிறான் என்ற கருத்து உள்ளதே அது பற்றி?

உண்மையிலும் உண்மை கலைஞன் தன் வாழ்வினையே கலைக்காக அர்ப்பணிக்கும் போது அக்கலைஞனை அச்சமுதாயம் அரசாங்கம் அவனால் நன்மையைப் பெற்றுக் கொண்டு அவனை கண்டு கொள்ளாமல் விடுவது மிகவும் கேவலமானதொரு விடையம்தான் கலைஞனை வளப்படுத்துங்கள். கலை வளரும். எமது கலை கலாசாரப் பண்பாடு எழுச்சி பெறும் என்பது திண்ணம்.




தங்களின் வாழ்வினில் மனிதர்களில் பிடித்தது பிடிக்காதது?
திறமைகள் இருந்தாலும்கூட வளர்ந்து வருகின்ற இளம் கலைஞர்களை வளர்த்து விடுவார்கள் இல்லை மூத்த கலைஞர்கள் உணர்ந்து வழியமைக்க வேண்டும்.

மக்கள் - வாழ்க்கைக்கு கலை எவ்வளவு முக்கியமானதொரு விடையம் என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டு கலையையும் கலைஞர்களையும் வாழ்த்த வேண்டும். கலையை வாழ்வாக்க வேண்டும்.

தங்களால் இதுவரை 1966-2014 இன்று வரை எழுதி இயக்கிய நாடகம், வில்லுப் பாட்டு, தெருக்கூத்து, வீதி நாடகம் பற்றிய  தொகுப்பு
1966 – 1990 எழுதிய நாடகங்கள் யுத்த இடம்பெயர்வுகளால் அழிவுற்றது. அதன் பின் உள்ளது

01. ஒதெல்லோ 2000
02. செபமே ஜெயம் 1999
03. சமாதானச் சக்கரவர்த்தி 2002
04. வசந்த காலம் 2005
05. சுயநலம் 2006
06. சமத்துவம் 2010
07. அடிச்சுவடுகள் 2000
08. பயன்தரும் பயணம் 2000
09. நாமும் நமது வாழ்வும் 2000
10. தொட்ட பிள்ளைகள் 2009
11. விருட்சத்தின் வேர்கள் 2012
12. வாங்கமச்சான் வாங்க 2002
13. மகுடமா மங்கையா 2004
14. மறை .அறிவும் மனித வாழ்வும் 2001
15. அதிசய காரியம் 2008
16. அருள் சின்னப்பர் 2013
17. சாந்திபுரம் 2012
18. இரத்த சாட்சிகள் 2009
19. நம்பிக்கை நட்சத்திரம் 2012



வீதி நாடகங்கள்

01. நற்குணசேகரம் 2007
02. சுகாதாரம் பேணுவோம் 2011
03. பெண்ணின் பெருமை 2010
04. சத்திய ஒளி 2013
05. அவலங்கள் ஓய்வதில்லை 2011
06. நிஜத்தின் நிழல்கள் 2005
07. மனிதம் 2003
08. பிறரோடு பிறப்பு விழா 2009
09. மண்ணும் மனிதமும் 2005
10. உழைப்பின் உயர்வு 2005
11. யோசப்வாஸ் 2010
12. ஈசலின் இறகுகள் 2009
13. எச்சரிக்கை மணி 2010
14. வாழ்வின் உதயம் 2010
15. விரக்தியின் விளிம்பில் 2009
16. நாட்டு நடப்புக்கள் 2010


வில்லுப்பாட்டுக்கள்

01. மனிதனாக்கும் மறைக்கல்வி 2012
02. நம்பிக்கை நாயகன் 2010
03. ஏற்றிவிட்ட ஏணிகள் 2007
04. மனமாற்றம் 2009
05. நீதியின் குரல் 2012
06. பூவனம் 2001


நாட்டக்கூத்துக்கள்

01. தியாக தீபங்கள் 2009
02. மனிதம் மலரட்டும் 2008
03. இரத்த பாசம் 1997
04. புதுமைகள் புரிந்த புனிதன் 2013
05. உயிர் கொடுத்த உத்தமர்கள் 2010
06. அழியாத தேகம் 1996
07. மனித நேயம் 2006



உரைச்சித்திரம்

01. அன்பின் ஆழம் 2010


தாளலயம்

01. அடுத்த வீட்டில் ஆண்டவர் 2013
(கிடைக்கப் பெற்றவை)

1966 தொடக்கம் 2014 இன்று கலையோடு வாழும் நீங்கள் எதிர் கால இலக்கை எதுவரைக்கும்?

எனது இலக்கானது  எனது கண்பார்வை இருக்கும் வரைக்கும் எனது கைகள் நடுங்காத வரைக்கும் நான் சோர்வடையாத வரைக்கும் இக் காலையினை விட மாட்டேன் தொடர்ந்து கொண்டேயிருப்பேன்.


கலைத்துறைக்காக தாங்கள் பெற்ற விருதுகள் பற்றி?

மன்னார் வவுனியா சமூகத் தொடர் நிலையத்தால் 2010ம் ஆண்டு ஆருட்பணி கருணாரட்ணம் கிளி விருதும்
2010 நானாட்டான் பிரதேச மட்டத்தில் செழுங்கலை வித்தகர் விருதும்
2014ம் ஆண்டும் சமாதான நீதவான் நியமனம் பெற்றதோடு,
கிராம அபிவிருத்தி சங்கங்களினாலும் சமாசத்தினாலும், பாடசாலைச் சமூகங்கள் ஏனைய அபிவிருத்தி நிறுவனங்களாலும் இவரது சேவையைப் பாராட்டி பாராட்டுப் பத்திரங்களும் பொற் கிளியும் பொன்னாடையும் போர்த்திக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
2014ம் ஆண்டிற்கான கலாபூஷண விருதினை பெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


மன்னார் இணையம் பற்றித் தங்களின் கருத்து?

1966-2014 இன்று வரை கலையை வளர்த்து வருகின்றேன். இணையத்தில் கலைஞர்களே இம் முயற்சியினை பார்க்கும் போது எமது கலையை வளர்க்க இன்னொரு தலைமுறை தயாராகிக் கொண்டு வருகின்றது. இளைய தலைமுறையினரின் கைகளில் கலை வளரு.ம் நல்லதொரு முயற்சி அதுவும் இணையத்தில் வெளியிடுவது பாராட்டக்கு.ரியது. முதிய கலைஞர்களையும் இளைய கலைஞர்களையும் அவர்களது கலை வாழ்வை வெளிக் கொண்டு வருதல் மிகவும் வரவேற்கத் தக்கதும் வாழ்த்தியுரைக்கிறேன். 

தொடரட்டும் உங்கள் சிறப்பான  பணி. மன்னார் இணையத்தின் சேவையே தனி.


சந்திப்பும் சிந்திப்பும்
வை.கஜேந்திரன்.








கவிஞர் உள்ளுர் அறிவிப்பாளர் குறும்பட நடிகர் பி.பெனில்டஸ் தற்குருஸ் அவர்களின் அகத்திலிருந்து.

''கலைஞனின் அகம் கணனியில் முகம்''


ஊனமுற்றவர்கள் அங்கவீனர்கள் மாற்றுத்திறனாளிகள் விசேட தேவையுள்ளவர்கள் என காலத்திற்கு காலமாய் புதிது புதிதாய் பெயர்களை சூட்டி அறிக்கைகளை வெளியிடுவதும் ஊடகங்களில் ஒலி ஒளிப்படங்களை வெளியிடுவதோடு நின்று விடுகின்றது. இவர்களின் சேவை மனப்பாங்கு மனிதனின் அடிப்படை தேவையான உணவுஇஉடைஇ உறையுள்இ என்னும் மூன்றினையும் எவ்வாறு பெற்றுக் கொள்கின்றார்கள். அவர்கள் படும்இதுன்பஇ துயரங்களைஇ மன வேதனைகளைஇ கண்டு ஆறுதல் சொல்வார் யாருமில்லை... .எங்கள் வாழ்விலும் ஒளியேற்ற முன்வாருங்கள் என்கிறார்..


மாற்றுத்திறனாளியான கவிஞர் உள்ளுர் அறிவிப்பாளர் குறும்பட நடிகர் என நம்பிக்கை நாயகனாக திகழும் பி.பெனில்டஸ் தற்குருஸ் அவர்களின் அகத்திலிருந்து.



தங்களைப் பற்றி?

பொன் விளையும் பூமியாம் மனம் விரும்பும் மாதோட்டத்திலே காத்தான்குளம் வட்டக்கண்டல் தான் எனது சொந்த இடம் ஆரம்பக்கல்வியை 
மன்/கருங்கண்டல் றோ.த.க.பாடசாலையிலும் சாதாரண தரம் வரை மன்/பத்திமா மத்தியமகாவித்தியாலத்திலும் கற்றேன். தற்போது தோட்டவெளி மன்னாரில் வசித்து வருகின்றேன் .எனது தாயும் மனைவியோடும்.




தங்களின் இந்நிலைக்கான (ஊனமுற்றவராக) காரணம் ?

வீட்டுச்சூழல் பொருளாதாரம்இஅதுவும் என்னுடைய தேவையை நானே நிறைவேற்ற வேண்டும். என்று கருதி வயரிங்வேலைக்கு சென்றேன். அன்று தான் 2002ம்ஆண்டு கார்த்திகை மாதம்12ம் திகதி என்வாழ்வையே சூனியமாக்கிய இந்த விபத்து நடந்தது. மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்தேன.; என்னுடைய முள்ளந்தண்டு இடத்தில் (வு-11-நுடநஎn) என்னும் முள்ளந்தண்டில் வு-11வது எலும்பு உடைந்து போனது. அதன் காரணமாக நெஞ்சுக்கு கீழ் எந்தவித உணர்வும் அற்றவனாய் ஊனமுற்றவனாய் வாழ்ந்து வருகின்றேன்.




தங்களின் நிலைகண்டு யாரும் உதவி செய்ய முன்வரவில்லையா? 

யாருமே முன்வரவில்லை எனது மூத்தசகோதரி தான் எல்லாவிதமான உதவியையும் செய்தார். உற்றதுணையாக இருந்தார். அப்போது எங்கள் வீட்டில் வறுமை தாண்டவம் ஆடிய காலப்பகுதி மிகவும் துன்பமான சூழல் அச்சூழலிலும் என் தம்பி எழுந்து நடக்க வேண்டும் என்ற பேராசை கொண்டவளாய் தன்னிடம் இருந்த தாலிக்கொடியையும்இ நகைகளையும் விற்று வந்தப்பணத்தில் என்னை மன்னார் வைத்தியசாலைஇ அநுராதபுர வைத்தியசாலைஇ பின்பு கொழும்பு வைத்தியசாலையில்இ இலங்கையிலே எலும்பு முறிவு சிறந்த நிபுணர் என்று சொல்லக்கூடிய வசந்த பெரோ எனும் மருத்துவர் தான் என்னைப் பார்த்ததும் நான் ஒரு இயக்கப்போராளி என எண்ணம் கொண்டார். நான் எனது பாடசாலை அடையாள அட்டை பல ஆதாரங்களைக் காட்டியும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. நான் தமிழன் என்ற காரணத்தினால் புறக்கணிக்கப்பட்டேன். .தான் செய்யாவிட்டாலும் மற்ற எவரும் சிகிச்சை செய்து விடக்கூடாது. என்கிற எண்ணத்தின் விளைவாக ஒருமாதமஇ; இரண்டுஇமூன்று மாதங்களை கடத்திய பின் நான் உமக்கு சிகிச்சையளிக்க மாட்டேன். என்பதை தெளிவுபடுத்தினாh.; அதன் பின்பு தான் இந்திய மருத்துவமனையில் அப்பல்லோவில் இந்திய மருத்துவரான குமாரவேல் நிபுணர் பரிசோதித்துவிட்டு எலும்புகள்இ எல்லாம் முற்றி நன்றாக வளர்ந்து விட்டது. காலதாமாகிவிட்டது இனிச்சிகிச்சை செய்தால் இரண்டு கைகளும் செயல் இழக்க நேரிடும் என்றார். பின்பு நவலோக்க சிகிச்சைகள் போன்ற மூலமும் மாறி மாறி செய்ததில் பத்து இலட்சம்இ பணம் தான் வீணாதே தவிர எனக்கு விமோனசம் கிடைக்க வில்லை.




மேலதிக முயற்சிகள் ஏதும் செய்யவில்லையா?

ஏன் இல்லை எனக்கு எழுந்து நடப்பேன் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. எனது வாழ்க்கை படுத்தபடுக்கையில் தான் என்று முடிவிற்கு வந்தேன். மலம்இசலம் எல்லாம் படுத்தபடுக்கையில் தான் இவ்வாறான துன்பத்தை எனது குடும்பத்திற்கு கொடுப்பதா என்று பல தடவைகள் தற்கொலைக்கு முயற்சி செய்தேன். தடுத்துவிட்டாள் எனது சகோதரியும் சகோதரர்களும.; எனது மூத்தசகோதரி மட்டும் மீண்டும் தன்னமிக்கையோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள யூதாசகி ஆலயத்திற்கு படுத்தபடுக்கையாகவே என்னை குருவானவர் போல் றொபின்சன் அவர்களிடம் அழைத்து சென்றார். அங்கு சில மாதங்கள் தங்கி செப தப முயற்சிகளில் ஈடுபட்டதின் பலனாக படுத்தபடுக்கையாக இருந்த நான் எழுந்திருக்கும் அளவிற்கு வல்லமை பெற்றேன். இறைவல்லமையினால் என்னாலும் பல வேலைகளை செய்ய முடிந்தது. எல்லாம் எனது சகோதரியின் நம்பிக்கை என்னை நலமடைச் செய்தது.




கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணம் பற்றி?

பதினொட்டு வயதிலேயே விபத்துக்காரணமாக படுத்தபடுக்கையாகி விட்டேன். எனது தனிமை துன்பச்சூழல் வாழ்க்கையில் வெறுப்பு மன கொதிப்பு அத்தனை வலிகளையும் போக்கவே நான் எழுதினேன். அதுவும் நான் முதல் எழுதியது எனக்கான மரண அறிவித்தல் தான் பின்பு இரண்டாவதாக எனக்கான கண்ணீ அஞ்சலி தான் இயலாமையும் இதயவலிகளும் கவிதைகளாக ஊற்றெடுக்க ஆரம்பித்தது.




உங்கள் வலியின் ஊற்றான கவிதைக்கு களம் அமைத்து தந்த ஊடாகம் பற்றி?

நல்லதொரு கேள்வி நிச்சயமாக அவ்வாறு வலியோடு பிரசவித்த கவிக்குழந்தைகளை சுமந்தவர்கள் மித்திரன் இவீரகேசரி இதினமுரசு போன்ற பத்திரிக்கைகளில் பெனில் என்ற பெயரிலும் மன்னா கத்தோலிக்க பத்திரிகையிலும்இ ஆக்கங்களை எமுதினேன் சிறகுடைந்த இளம் சிட்டு எனும் பெயிரில் ஏன் என்றால் சிட்டுக்குருவிக்கு சிறகுகள் உடைந்து விட்டால் அதன் வாழ்க்கை எப்படி இருக்குமோ அதே போல் தான் என் நிலையும் பதினெட்டு வயது இளம் வாலிபான எனது வாழ்வும் அது தானே. அதுபோல சூரியன் பண்பலையில் அதிகாலை 3-5 மணிவரை ஒலிபரப்பாகும் ரிங்காரம் நிகழ்ச்சி கேட்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. காரணம் எனக்கு தூக்கம் என்பதே இல்லை. இருண்ட வாழ்வில் பகல் ஏது. ரிங்காரம் நிகழ்ச்சியில் எனது கவிதைகளை சொன்N;னன் மரணம் இதற்கொலைஇ சாவு முடியாமைஇ இயலாமை போன்ற தலைப்புக்களில் கவிதை செல்லி வந்த பொழுது சூரியன் வானொலி அறிவிப்பாளர் தான் சொல்லுகின்ற தலைப்பிற்கே கவிதை சொல்ல வேண்டும். .அதுவும் பிறரின் வாழ்வை மேம்படுத்த வேண்டுமே தவிர அவர்களின் வாழ்வை மீண்டும் தாழ்வு நிலைக்கு கொண்டு சொல்ல கூடாது. அந்தச் செல்லின் வினைவாகவே என்னிடம் இருந்து காத்திரமான படைப்பாக எனது கவிதை எழுதவும் அத்தருணத்திலே என்னை மாற்றிக் கொண்டேன்.

அப்போது......


முறிந்தது.....
முள்ளத்தண்டு மட்டும் தானே என்
உள்ளம் இல்லையே
உடல் தானே உணர்வற்று கிடக்கிறது
உணர்வுகள் இல்லயே
குருதி என்னுள் உறையும் போதும்
உறுதி என்னுள் நிலைத்திருக்கும்
நான் ஊனமில்லை என்று உரைக்க...............



துன்ப வாழ்வில் இருந்து மீட்கப்பட்டபோது எழுதிய முதல் கவிதை இது எனது வலியை விட்டு நான் வாழும் சமூதாயத்தை நோக்கினேன். காதல்இ சமூதாயம்இ அறிவியல்இ ஆன்மீகம்இ போன்ற தலைப்புக்களில் எழுதத் தொடங்கினேன் .தொடர்ச்சியாக சூரியன் வனொலியில் 8 வருடங்காளாக ரிங்காரம் நிகழ்ச்சியில் கவிதை சொல்லி வருகிறேன். அதன் தொடர்ச்சியாகவே எனது கவிதையாற்றல் வளர்ச்சி கண்டது. என் சிந்தனையில் ஏன் நான் வனொலியில் செல்லிய கவிதைகளையும் பத்திரிக்கையில் வந்த கவிதைகளையும் என்னிடம் கைவசம் இருந்த கவிதைகளையும் ஒரு தொகுப்பாக வெளியிட வேண்டும் என்ற ஆசை பிறந்தது. ஆனாலும் எனது நிலையும் பொருளாதார சூழல் இரண்டையும் நினைத்து கலங்கினேன். தினம் தினம் எனது ஆசையினை மன்னா பத்திரிக்கை ஆசியியரும்இ மன்னார் தமிழ்ச்சங்க தலைவருமான அருட்பணி தமிழ் நேசன் அடிகளாரிடம் சொன்னேன். நான் உங்கள் வெளியீட்டிற்கான அனைத்து உதவிகளையும் செய்கிறேன். ஆனால் ஏற்படுகின்ற பணச் செலவினை பார்த்துக்கொள்ளுங்கள் என்றார் .என் ஆசை நிறைவேறாத என்ற ஏக்கமே மிஞ்சியது.




உங்கள் கவிதை தொகுதி வெளிட வேண்டும் என்ற ஆசை எவ்வாறு நிறைவேறியது?

நெடுந்தீவு முகிலனின் ''கடவுளின் சலனத்தை கலைக்கும் மணியோசை'' என்ற நூல் வெளியிடு விழாவிற்கு என்னையும் அழைத்து இருந்தார்கள.; அவ்விழா தான் என்னை பிறருக்கு அடையாளம் காட்டியது. வானொலியில் கவிதை சொல்லியபோது எனது குரல் மட்டும் தானே முகம் தெரியாது மன்னார் பெனில் என்று பத்திரிக்கையில் எழுதியதால். தெரியும் என்னை யார் என்று இவர்தான் மன்னார் பெனில் என்று அறிமுகப்படுத்தியதோடு நில்லாமல் பொன்னாடை போர்த்தி கொளரவித்து என்னையும் சிற்றுரை ஆற்றுமாறு பணித்தார்கள். நான் எனது சிற்றுரையில் நானும் ஒரு கவிதை நூலை வெளியிட விரும்புகிறேன். என்ற எண்ணத்தையும் எனது நிலைமையினையும் வெளிப்படுத்தினேன்.




உங்கள் முதலாவது நூல் வெளியீடு பற்றி ?

தாயானவள் கருவை பத்துமாதம் சுமந்து அதற்கு மேலும் குழந்தை பிறக்கவில்லை என்றால் அவள் படுகின்ற வேதனை எப்படி இருக்கும். அது போல் தான் நான் இருக்கிறேன் என்ற எனது சிற்றுரையின் பிரதிபலிப்பாக புத்தக வெளியிட்டிற்கான நிதியுதவியினை மன்னார் வத்தகரான அல்போன்ஸ் சம்மாட்டியர் அவர்களும் சில அமைப்புகளும் அருட்திரு தமிழ் நேசன் அடியளாரின் துணையோடும் எனது முயற்சியாலும் எனது முதலாவது கன்னிப் படைப்பான ''வலியின் விம்பங்கள்'' கவிதைத்தொகுதி 7.10.2012 புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியில் மன்னார் மாவட்ட ஆயர் தலமையில் பெரியோர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக வெளியீடுகண்டது.




உங்கள் இரண்டாவது படைப்பு பற்றி ?

எனது இரண்டாவது படைப்பாக வெளிவர இருப்பது ''வார்ப்புக்கள்'' எனும் தலைப்பில் என் சார்ந்த கவிதைகளை எழுதாமல் பிறரின் வலிகளை துன்பங்களை என்னுடைய சிந்தனையில் உள்வாங்கி ஆழ்ந்து சிந்தித்து இரைமீட்டி இதுவரை எழுதாத வகையில் குறியீட்டு கவிதைகளாக எழுதி வருகின்றேன். மிகவிரைவில் அது நூலக உருப்பெறும் என்ற நம்பிக்கையோடு பொருளாதார நிலையை எண்ணிப் பார்க்கிறேன்.




உங்கள் வாழ்வின் வாழ்க்கை துணை  பற்றி ?

எனக்கு வாழ்க்கையே கேள்விக்குறியாகத்தான் இருந்தது எனது வாழ்வு'' வட்டம் இவ்வளவு தான் என்று வாழ்ந்து வந்தேன். எவ்விதமான பிடிமானமும் இல்லை லைப்பே இல்லை என்று இருந்த எனக்கு நல்லதொரு ''வைப்'' கிடைத்தது''. என்வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது காரணம் செடியொன்று வளர வேண்டுமென்றால் அதற்கு உறுதுணையாக மரமோஇதடியோ தேவை அம்மா எனது அக்காவிற்கு பிறகு எல்லாமாக இருப்பவள் கடவுள் தந்த அருள் கொடை. என் மனைவி என்றே சொல்வேன் உன்னதமான உறவு என் வாழ்வின் எதிரொலி எதிர்காலமே என் மனைவி ''லீனா'' தான்.




உங்கள் இருவருக்குமான முதல் சந்திப்பு எவ்வாறான சூழ்நிலையில் அமைந்தது?

எனது மனையின் நண்பி சுபா என்பவர் எனக்கும் நண்பியாக இருந்தார். என் நிலை பற்றியும் என்னுடைய நிலை பற்றியும் என்னுடைய தொலைபேசி இலக்கத்தைப் பெற்று சுமார் ஒன்றாரை வருடங்களாக தொலைபேசியிலே எமது அன்பு பரிமாற்றமும்; ஆறுதல் வார்த்தைகளும் என்னை வளப்படுத்தியது. அத்தருணத்தில் நான் மன்னார் வைத்தியசாலையில் மீண்டும் சிகிச்சை பெற்று வந்தேன். அன்று என்னை நேரில் பார்க்க வருவதாகவும் சொன்னார் நானும் அன்று மிகவும் ஆவலுடன் இருந்தேன். நான் இவரின் குரலுக்கு உருவம் கொடுத்து மிகவும் திறமையான பெண்ணக இருப்பார் என்றிருந்தேன.; இருவரும் வந்தார்கள் என் எண்ணத்தில் நின்றவளே எதிரில் வந்து நின்றாள். கண்டவுடன் எனக்குள் ஒரு புத்துணர்ச்சி எனக்கு வாழ்க்கை மீது ஒரு பிடிப்பு நாம் இருவரும் வாழலாம் இவர் என்னை கடைசி வரை வைத்து காப்பாற்றுவார். என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. கதைத்தோம்இ பேசினோம் இருமனமும் இணைந்து கொள்ள திருமணமும் நடந்தது.




மற்றவர்களைப் போல் உங்கள் திருமணமும் நடந்ததா?

ஆம் நிச்சயமாக நான் ஒரு போதும் என்னை ஊனமுற்றவன் என்று நினைத்ததில்லை. இது எனக்கான எண்ணம் ஆனால் திருமணம் எனும் போது பல விடையங்களை பார்க்கவேண்டும் பல சமய சம்பிரதாய முறைகளை கடைபிடிக்க வேண்டும். .முதல் கட்டமாக என்னுடைய மனைவியின் பெற்றோர் சம்மதிக்கவில்லை காரணம் யார்தான் நெஞ்சுக்கு கீழ் உணர்வற்ற ஒருவனை ஊனமுற்றவனை திருமணம் செய்து வைப்பார்களா? என் மனைவி என்னை பற்றி தெளிவாக புரிந்து கொண்டவள் இஅறிந்து கொண்டவள் ஆதாலால் சகலவிதமான சமூதாயம் சூழல் பிரச்சனைகளை முறையான வழியில் நேர்த்தியான யோசனையில் தீர்த்து மன்னார் மாவட்ட அதி வந்தனைக்குரிய ஆயர் முன்னிலையில் திருமணம் நிறைவேறியது.




இவரை முதல் முதலில் பார்க்கும் போது அனுதாபமா அன்பின் பிரதிபலிப்பா தோன்றியது மனதில்?

என்னுடைய பெயர் ''லீனா'' ஒட்டிசுட்டான் எனது சொந்த இடம் எனது நண்பியின் மூலம் இவரை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன். .எனக்கு இரக்க உணர்வு மேலிட்டது நானும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டதால் அந்த வலியும் வேதனையும் எனக்கு தெரியும். இறுதி யுத்தத்தின் கொடூர வடுக்கள் என் நெஞ்சில் இன்னும் இருக்கின்றது. இவரை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்பட்டது. இவரைப்பார்ப்பதற்காக மன்னார் வைத்தியசாலைக்கு வந்தேன.; இவரைப்பார்த்த போது இன்னும் என்மனம் இரங்கியது இவர் என்னோடு பேசினார் நானும் அம்மாவும் தனியாகத்தான் இருக்கிறோம். எங்களுக்கு உதவியாக யாருமில்லை என்றார். நான் இவரை காலம் முழுக்க வைத்து பார்க்கவேண்டும் என்று உறுதி கொண்டேன் சும்மா இவரை கவனிக்க முடியாது சமூதாயம் வேறமாதிரி கதைக்கும் எனவே இவரை முறைப்படி பதிவுத்திருமணம் செய்து என் கணவரை பாதுகாத்து வருகின்றேன்.




உங்கள் வீட்டில் இத்திருமணத்தை நிச்சயமாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் எவ்வாறு திருமணத்திற்கு சம்மதம் பெற்றீர்கள்?

எங்கள் வீட்டில் எனக்கு 05 சகோதர சகோதரிகள் இருக்கின்றார்கள்.ஒருவருக்கும் பெரிதாக விருப்பமில்லை கல்யாண நாள்வரை கூட யாவருக்கும் விருப்பமில்லை நான் தான் சொன்னேன் நீங்கள் எனக்கு கல்யாணம் செய்து வைக்கும் மாப்பிள்ளை எனக்கு ஒரு பிள்ளையோடு விட்டு விட்டுப் போனாலோ அல்லது எனக்கு பிறந்த பிள்ளை இப்படியான ஊனமுள்ள நிலையில் இருந்தாலோ நான்தானே வளர்க்கவேண்டும். தாங்க வேண்டும் அதேபோல் தான் இவரை என்னுடைய குழந்தையாகவே நான் பார்க்கிறேன். என்று பல முறை செல்லியே திருமணத்திற்கு சம்மதம் வாங்கினேன் இப்பவும் அம்மா அழுவதுண்டு என்னை நினைத்து பெற்றமனம் தானே.



ஆணும் சரி பெண்ணும் சரி தற்கால சூழ்நிலையில் ஆடம்பர சொகுசு வாழ்க்கையினையே விரும்புகிறார்கள் ஆனால் நீங்கள் வாழ்வின் நிஐமாக முன்மாதியான பெண்மணியாக திகழ்கிறீர்கள் இவரைப்பிற்றிய எதிர்காலக்கனவு ?

இவர் படிப்படியாக சுகமாகி வரவேண்டும் எழுந்து நடக்க வேண்டும் என்ற பேராசையெல்லாம் கிடையாது. இருந்து வண்ணமே எல்லா வேலையும் செய்வார் பெரிய புண்ணும் தற்போது மாறிக் கொண்டு வருகிறது. இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளவேண்டும.; எல்லாவற்றுக்கும் மேல இறைவன் உள்ளான.; அவன் பார்த்துக்கொள்வான். நான் எனது குழந்தையும் கணவருமான என்னவரை கடைசிவரை பாதுகாப்பேன்.




உங்கள் வாழ்வுக்கு கை தந்தவர்கள் பற்றி?

யாரும் இதுவரை கை தரவில்லை கையேந்தவும் விருப்பமில்லை. எங்களைப் போன்ற அங்கவீனர்களுக்கு பல விசேடத் தேவைகள் உள்ளன.காற்றுஇ மெத்தைஇ தண்ணீர்இ மெத்தைஇ மிகவும் முக்கியமாக கொமட்பாத்ரூம் அவசியத்தேவையாகவுள்ளுது. யார் கட்டித்தருவார்கள் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்புடனே பலருடன் பல அமைப்புகளிடம் கேட்டுக் பலனில்லை நம்பிக்கை மட்டும் குறையவில்லை நூல்வெளியிட்டின் மூலம் கிடைத்த சிறு தொகையில் 10 கோழிகளை வளர்த்து வருகிறேன்.




இரண்டு கால்களும் செயலற்று இருக்கும் வேளையில் இரண்டு கரங்களோடு ''மூன்றாவது கையாக'' படுக்கையின் மேல் தொங்கும் கயிறை குறிப்பிடுகிறார்'



'

தங்கள் மனைவி பற்றி ?

என்வாழ்வின் வழி விழி மொழி எல்லாமே என் மனைவிதான் என்னை விட பலமடங்கு திறமையுள்ளவள். தன்னம்பிக்கை அதிகம் கொண்டவள் நான் பலரிடம் உதவி கேட்டபோது என்னை ஒரு பிச்சைக்காரன் போல் எண்ணீனார்கள். ''இயேசுநாதர் தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்''; என்றார் தட்டினோம் கேட்டோம் அவர்கள் பிச்சைக்காரனாய் பார்க்கிறார்கள். அதனால் தட்டுவதும் இல்லை கேட்பதும் இல்லை என்மனைவி ஆடைத் தொழிற்சாலையிலும் ஆட்டோ ஓட்டியும் என்னையும் என் மருத்துவச் செலவையும் கவணிக்கிறார். எங்களை கண்டு கொள்வார்யாருமில்லை சொந்தமாய் தொழில் செய்ய முதலீடு தேவைகடனடிப்படையில் கூட தருவார்யாருமில்லை.





துன்பத்தின் தொடர்கதையான நீங்கள் அதில் இருந்து பெற்றுக்கொண்டவை கற்றுக்கொண்டவை பற்றி ?

பதின்மூன்று வருடங்களாகிறது படுத்தபடுக்கையாக பட்டதுன்பங்கள் எனக்கு பெரும் முதிர்ச்சியை தந்திருக்கின்றது. எதையும் தாங்கும் இதயமாக உள்ளது. நல்லதொரு அனுபவசாலியாக மாறியிருக்கிறேன். இப்போது வலிகள் எனக்கு வலிகளாகவே தெரிவதில்லை. எனக்கு கற்பனையோஇவர்ணனையோ எழுதவராது ஏன் என்றால் ''வலிகள் தான் வாழ்க்கை உணர்வுதான் கவிதை'' என்பதே எனது வேத வாக்கு............


வலிகளே
வலியைத்தேடி
வலிகளோடும் வாழும்
வாலிபன் - நான்
வலிகளோடு வாழ்ந்தாலும்
வருந்தாமல் வாழ்கிறேன்
வலியே என் வாழ்வானதால்
நிஐமானதை எழுதும் போது உயிரோட்டம் இருக்கும் கற்பனையில்லாமல் வெளிப்பூச்சு இல்லாமல் எழுத வேண்டும் என்பது எனது ஆசையும் ஆவலும்.





 கவிதையும் கவிஞர்களையும் பற்றி?

கவிஞர்கள் என்பவர்கள் ஒரு தலைப்பை கொடுத்தவுடன் கவிதை எழுதுவர்கள். ஆனால் என்னால் அது முடியாது காரணம் நான் அத்தலைப்பிற்குள் ஆழமாக போகவேண்டும். அதை நான் கவிதையாக தெரிவு செய்ய வேண்டும். அதை இரை மீட்டி ஒன்றல்லஇ இரண்டல்ல பலதடவை சரி பார்த்த பின்புதான் ஏற்றுக்கொள்வேன். சிந்தனையிலே கவிதையாக ஏற்றுக்கொள்வதால் உடனடியாக கவிதை எழுதும் ஆற்றல் என கில்லைஇ திறமை பெற்றவனும் இல்லைஇ எப்போது என்னுடைய உள்ளத்தில் நெருடல்கள்இ வலி இதாக்கம்இ ஏற்படுகின்றதே அந்த நேரத்தில் தான் கவிதை எழுதுகிறேன். மற்றும் கவிதை வலியும் வேதனையும் தான் கவிதை எழுதுவன் எல்லாம் கவிஞன் இல்ல கவிதை அவன் வாழ்வாக வேண்டும். கலைஞர்களுக்குள் ஒற்றுமைஇ அன்புஇ பிரமாணிக்கம் இருக்க வேண்டும




கவிதைத்துறையன்றி வேறு துறைகள் ஏதும்?

மாணவபருவத்திலிருந்து படிப்பில்இ நடிப்பில் பெரிதாக நாட்டமில்லை ஆனால் நாடகத் கதைகள் பல எழுதியுள்ளேன். பீடபணியாளருக்கு நாடகம் பழக்கி மேடையேற்றியுள்ளேன். பல அமைப்புகளுக்கு விழிப்பணர்வு நாடகங்கள் எழுதிக்கொடுத்துள்ளேன். ''சிந்து தேசத்தின் சிற்பி'' எனும் வாசாப்பு நாடகத்தில் சங்கிலி மன்னனின் மந்திரியாக நடித்துள்ளேன்.பல நாடகங்களிலும் நடித்துள்ளேன். அத்தோடு சிறிய கற்பனைஇ கலந்து ''அன்னை இல்லம்இ'' ''திசை மாறிய பறவைகள்இ'' சமூதாய சிந்தனை கதைகள்இ மன்னா பத்திரிக்கைக்கு அனுப்பினேன். ''நேசக்கரம'; என்னும் தலைப்பில் எனக்கு வாழ்வு தந்த எனது மனைவியை பற்றிய கதையை எழுத வேண்டும். என்ற எண்ணம் உள்ளது. அது இன்னும் எழுத்துரு பெறவில்லை. எழுதமால் இருப்பதற்கு காரணம் சிந்தனைத்திறன் வேண்டும். கற்பனைத்திறன் வேண்டும் என்னிடம்; கற்பனைத்திறன் குறைவு என்னுள் வளரவேண்டும் வளர்க்கிறேன்


குறும்படத்தில் ஆற்றல் நடித்தமை பற்றி? 

மன்னார் மண்ணின் பல்துறை வித்தகன் . அ.நிசாந்தன் அவர்கள்pன் இயக்கத்தில் முதல் முறையாக ''வேகம்'' படத்திலும் தற்போது பெயரிடப்படாத தற்கொலை சமூதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக நடித்து கொடுத்துள்ளேன். எனது உண்மை நிலைவரத்தை அப்படியே செய்தேன் அத்திரைப்படம் மிக விரைவில் வெளிவரும்.




உங்களின் நிறைவேறாத கனவு ?

ஆம் நிச்சயமாக உள்ளது ஒரு அறிவிப்பாளனாக வேண்டும். என்ற எண்ணம் நெடுநாளாய் இருந்து கொண்டே இருக்கின்றது. மாணவப்பருவத்திலும் சரி இப்போதும் சரி எங்கள் ஊரில் கலைவிழாஇ ஒளிவிழா மற்றும் பல நிகழ்ச்சிகளிலும் எனது நிகழ்ச்சி தொகுப்பே முதன்மையாக இருக்கும.; தற்போதைய சூழலில் திறமைக்கு முதலிடம் கொடுப்பதில்லை பணம் அழகான தோற்றம் சிபாரிசு என்று பல அம்சங்கள் இருக்கவேண்டும் இவ்வாறு திறமையை மட்டும் வைத்துக்கொண்டு அதுவும் என்னைப் போன்றவர்கள் சொல்லவே தேவையில்லை. திறமைக்கு முதலிடம் கொடுத்து எம்மைப் போன்றவர்களை உற்சாகமூட்டிய நிகழ்ச்சியாக சக்தி வானொலின் மூலம் (கோம் சக்தி ர்ழஅந ளூயமவாi ) ஒரு வருடத்திற்கு முன்பாக மன்னார் மண்ணிலே சிவா பிறதர்ஸ் கொட்டல் மேற்தளத்தில் எல்லோருக்கும் அரைமணி நேரம் நிகழ்ச்சி தொகுப்புக்கு வழங்கி இருந்தார்கள். எனது நேர்த்தியான தொகுப்பைப் பார்த்து 1 மணிநேரம் வழங்கியிருந்தார்கள் அந்த நாளில் எனது குரல் ஒரு மணி நேரம் எல்லோர் இல்லங்களிலும் ஒலித்தது எனது கனவு ஒரளவேனும் நிறைவேறியது.




உங்கள் வாழ்வின் இனிமையான தருணம்?

எனது வாழ்வின் இனிமையான தருணம் என்றால் அது எனது மனைவியுடனான முதல் தொலை பேசியில் பேசியபோதும் முதன்முதலாய் வைத்தியசாலையில் என்னை சந்தித்த போதும் தான் என்வாழ்வை என் எதிர்காலத்தை நேரில் பார்த்தேன் என்றும் பசுமையான நினைவாய் நெஞ்சில்




மிகவும் வருந்தும் சம்பவம் ஏதும்?

1993 ஆண்டு எனது தந்தை இறந்தபின்பு எங்கள் குடும்பத்தை சுமந்தவள் எனது விபத்தின் பின் என்னைச்சுமந்தவள் நான் உங்களோடு பேசிக்கொண்டிருக்க முழுக்காரணமும் எனது தாயும் தந்தையுமான எனது மூத்த சகோதரிதான் என்னை காப்பாற்ற தனது சொத்துக்கள் சுகம் குடும்பம் வேலை எல்லாவற்றையும் இழந்து என்பணி செய்தவள் எல்லாவற்றையும் மீதும் நம்பிக்கை இழந்தவளாய்.......வெறுமையான வாழ்க்கையில் பொறுமையின்றி தற்கொலை செய்து கொண்டாள் 10.29.2010 எந்தப் பெரிய ஞானியும் சில நொடிகளில் எடுக்கும் முடிவுதானே தற்கொலை .
ஆகாரம் தேவையில்லை
அன்பான ஆறுதல் வர்த்தைகள் இருந்திருந்தால் என் அக்கா............




வலியும் வேதனை சோதனை தோல்வி பாதையை கொண்டிருக்கும் நீங்கள் உங்களைப் பற்றிய கருத்து?

என்னைப்பற்றி செல்லும் போது என்னை திடப்படுத்தியது ஒரு பாடல்வரி தான் அருமையானது ''உனக்கு கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதிதேடு'' நான் முள்;ளந்தண்டு உடைந்து நெஞ்சக்கு கீழ் உணர்வற்ற நிலையில் வாழுகின்ற வாலிபன் கழுத்தில் இருந்து ஒரு சாண் பகுதி வரை தான் எனக்கு தொடுகையுணர்வே இருக்கின்றது. மலம்இசலம் வெளியேறுவதே எனக்கு தெரியாது இந்நிலையிலும் நான் ஆரோக்கியமான மனிதன் என்றே என்னை கருதுகிறேன். இயலாமை என்பது உங்களிடம் இருக்கானால் அப்போது தான் நீங்கள் ஊனமுற்றவர்கள் ஆகின்றீhர்கள்; இயலாமை இருந்தாலும் நீங்கள் வாழ எந்தனிக்கும் போது இறைவன் உங்களுக்கு துணைபுரிவார். நீ ஒரு அடி எடுத்து வை மறு அடி எடுத்து வைக்க உனக்கு பலம் தருவேன் ஆசிர்வாதம் நிச்சயம் கிடைக்கும் இப்போது நான் தற்கொலை செய்ய நினைப்பதில்லை அதிககாலம் வாழ வேண்டும் பிறருக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் வலிகள் ஒருவனை தாழ்த்தி விடுவதில்லை சரியாக சந்தித்தால் அது அவனை உயர்த்தி விடும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை......................





மன்னார் இணையம் வழங்கும் பயன்கள் பற்றி தங்களின்?

நிச்சயமாக ஊடாகம் ஒன்றுதான் ஒருவனை அறிமுகப்படுத்தி வெளிச்சம் போட்டுக்காட்டும் சாதனம் எந்தத்துறையாக இருந்தாலும் எவருக்கும் எதுவுமே தெரியாது ஊடகம் இல்லையென்றால் ஒன்றுதான் என்வனைப்போன்ற கலைஞர்களையும் இன்னும் ஏராளமான கலைஞர்களையும் அவர்களின் என் திறமையினை வெளிக்கொண்டுவர எடுத்திருக்கும் இப்புதுமுயற்சிக்கு எனது பாராட்டுக்களும் ஆசீர் வாதமும். எல்லா இணைபத்தளங்களையும் பார்வையிடுவேன். மன்னாரில் நடக்கின்ற முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் நியூ மன்னார் இணையத்தில் பார்வையிட முடிகின்றது. மன்னாரில் பல அமைப்புக்கள் இருந்தாலும் அவற்றை எல்லாவற்றையும் விட ஒரு கலைஞனின் வீட்டிற்கே சென்று அவனின் உண்மை நிலைவரத்தை உற்று நோக்கி உலகறியச் செய்யும் மாபொரும் உன்னதச் சேவையை பாராட்டியதோடு மட்டும்மல்லாது இறைவனை பிராத்திகின்றேன்.



''தொடரட்டும் சேவை
மலரட்டும் கலைஞன் தேவை''

''வாழ்வா தாரத்திற்கு
வழிதேடிப் போகும் போது
பிச்சை கேட்பதாய்
எச்சில் வெற்றிலையை
சன்மானமாய் வழங்குகிறார்கள்
கனத்த இதயத்தோடு வீட்டுக்கு வந்து
கண்ணீரை மட்டும் இறக்கிவைக்கிறேன்.
நெஞ்சில் சுமையத்தவிர''

உதவும் கரங்கள் இருந்தால் இரங்குங்கள் இவருக்கு......

F.Benildas
A/C-100492109891

N.S.B – தேசிய சேமிப்பு வங்கி
வT.P. 077-9689972
023-3234447











Photos