Slider

காணொளிகள்

மன்னார் செய்திகள்

விம்பம்

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

பல்சுவை

School events

கட்டுரைகள்

சினிமா

-

கேப்பாப்பிலவு 111-வது நாளாக போராட்டம்...


கேப்பாப்பிலவு மக்களின் தொடர் போராட்டம் நேற்றுடன் 110 ஆவது நாளை எட்டியுள்ளது.
138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்க
 வலியுறுத்தி மேற்படி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி சொந்த நிலத்திற்கு செல்வதற் கான தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை கேப்பாப்பிலவு இராணுவ தலைமையகத்திற்கு முன்பாக மக்கள் ஆரம்பித்திருந்தனர்.எனினும் எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படாத நிலையில் மூன்று மாதங்களை கட ந்தும் தொடர் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந் தன் கொடுத்த வாக்குறுதியின்  கால எல்லையும்  கடந்துள்ள நிலையில் இதுவரை எந்த வொரு ஆக்கபூர்வமான தீர்வும் முன்வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சரின் ஆதரவாளர் சாந்தி சிறீஸ்கந்தராசாவை சந்திக்க முயற்சி! கணவர் எதிர்ப்பு...


வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரின் ஆதரவாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் அவ்விடத்திற்கு வந்த வடமாகாண முதலமைச்சரின் ஆதரவாளர்கள் போராட்டத்தின் ஈடுபட்டவர்களுடன் சமரசத்தில் ஈடுபட்டனர்.

இதனால் குறித்த இடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பொலிஸாரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் ஆதரவாளர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசாவிடம் கதைப்பதற்கு சுகாதார அமைச்சரின் ஆதரவாளர்களின் இடத்திற்கு சென்றுள்ளார்.


இதன்போது அவ்விடத்தில் குழப்ப நிலை ஏற்ப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசாவிடம் கதைக்க முடியாது எனவும் அவர் எனது மனைவி நான் அவரிடம் கதைக்க அனுமதிக்க மாட்டேன் எனவும் அவரின் கணவர் தெரிவித்துள்ளார். இதன்பின்பு முதலமைச்சரின் ஆதரவாளர் பொலிஸாரினால் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசாவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது,

நான் மக்களை சந்திப்பதற்கு தயாராக இருக்கின்றேன். ஆனால் வயதுக்கு மூத்தவர்கள் தந்தைக்கு சமனானவர்கள். அவர்களுக்கு கை நீட்டி அடிப்பதற்கு முற்படுபவர்களுடன் நான் கதைக்க தயாராக இல்லை என தெரிவித்தார்.

முதலமைச்சரை பதவி நீக்க முற்பட்டால் மாகாண சபை முடக்கப்படும்....


வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் முயற்சி செய்யுமாயின் வடக்கு மாகாண சபையை முழுமையாக முடக்குவதற்கு இளைஞர் அணி தயாராக இருப்பதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழரசுக் கட்சி வடக்கின்  ஆளுநரிடம் கையளித்ததை வன்மையாகக் கண்டித்தும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தியும் நேற்று முன்தினம் வட மாகாணம் முழுவதிலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன் அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணி திரண்டு முதலமைச்சர் விக் னேஸ்வரனுக்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலும் தமிழரசுக் கட்சி புதிய முதலமைச்சரை தெரிவு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பதான தகவலை அக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாரிய மக்கள் அணிதிரண்டு கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையை தொடர்ச்சியாக முடக்கவும் தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வட மாகாணத்துக்குச் செல்லும் இடமெங்கும் எதிர்ப்பு ஆர்ப் பாட்டங்களைத் தெரிவித்து சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவேளை இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அகிம்சை வழியில், ஜனநாயக முறையில், பாதுகாப்புச் சட்டங்களை அனுசரித்து நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் குறித்த இளைஞர் அணி மேற் கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது.                                                    

அவசர அவசரமாக கொழும்பு சென்றார் வடக்கு ஆளுநர்!


வட மாகாண சபையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தில் நடுவே ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அவசர அவசரமாக கொழும்புக்கு சென்றுள்ளார்.

முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் பதவி விலக வேண்டுமென 22 பேர் கையொப்பமிட்டு நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை ஆளுநரிடம் கையளித்துள்ளனர்.

இதனையடுத்து ஆளுநர், வடமாகாணசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சருக்கு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சிவாஜிலிங்கம் தலைமையிலான 15 பேர் கொண்ட மற்றுமொரு குழுவினர் முதலமைச்சருக்கு ஆதரவாக நேற்று முன்தினம் நம்பிக்கைத் தீர்மானமொன்றை கையளித்துள்ள நிலையிலேயே அவை தொடர்பில் சட்ட ஆலோசனைப் பெறுவதற்காகவே ஆளுநர் இன்று அவசரமாக கொழும்பு வந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வடமாகாண சபையில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் வார இறுதி நாட்களில் ஆளுநர் கொழும்பிலுள்ள அரச தரப்பு அதிகாரிகளுடன் விரிவாக ஆராய்ந்ததன் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமையன்று உத்தியோகப்பூர்வ நடவடிக்கை எடுப்பாரென்றும் ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிவேகத்தில் முல்லைத்தீவிற்கு வந்த விசேட நாளிதழ்: பொதுமக்கள் மத்தியில்; பரபரப்பு!


தமிழரசு கட்சியின் நிலைப்பாட்டை கண்டித்து முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அதரவாக நாளை பூரண கதவடைப்பு என்னும் தலைப்புடன் யாழ்ப்பாணத்தில் வெளியாகிய விசேட நாளிதழ் பிரதிகள் முல்லைத்தீவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விசேட பிரதி இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் வெளியாகிய நிலையில் முல்லைத்தீவிலும் பொதுமக்கள் மத்தியில் அதிகம் பகிரப்படுகின்றதாக தெரிவிக்கப்பகின்றது.

முல்லை காணாமல் ஆக்கப்பட்டோர்; 100-வது நாளாக போராட்டம்...


முல்லைத்தீவு  மாவட்டத்தில்  இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையிலும் மற்றும் ஏனைய வழிகளாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் நேற்று புதன்கிழமை 99 ஆவது நாளைக் கடந்த நிலையில் இன்று  வியாழக்கிழமை 100 ஆவது நாளை  எட்டியுள்ள போதும், தீர்வு எதுவும் கிடைக்காத நிலையில்  தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில்  இராணுவத்திடம்ஒப்படைக்கப்பட்ட நிலையிலும் மற்றும் ஏனைய வழிகளாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து தமக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தீர்வு கிடைக்கும் வரை கவனயீர்ப்பு போராட்டத்தை தொடரப் போவதாக தெரிவித்து.

கடந்த மார்ச் மாதம் 08 ஆம் திகதி புதன்கிழமை காலை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்தின் முன்பாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து தொடர்ந்து முன் னெடுத்து வருகின்றனர்.  இந்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தின் போது மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று புதன்கிழமை 99 ஆவது நாளாகவும் தீர்வு  எதுவும் கிடைக்காத நிலையில் தொடர்ந்து தமது சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்த நிலையில், தீர்வு எதுவும் கிடைக்காத நிலையில்  இன்று வியாழக்கிழமை 100 ஆவது நாளை எட்டியுள்ளது.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த  உறவுகள் கருத்துத் தெரிவிக்கையில், எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று 100 ஆவது நாளை எட்டியுள்ள போதும், தீர்வு எதுவும் கிடைக்காத நிலை காணப்படுகின்றது.

அண்மையில் ஜனாதிபதியை நாங்கள் யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடிய போது,  எமது வலிந்து காணாமல் ஆக்கப்ப ட்ட பிள்ளைகள் தொடர்பில் முப்படையிருக்கும் அறிவித்து தகவல் சேகரித்து முடிவு களை விரைவில் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

எனவே, இதற்கு மதிப்பளித்து இன்று 100 ஆவது நாளை முன்னிட்டு எங்களால் முன்னெடுக்கப்பட  இருந்த விசேட  போராட்ட விஸ்தரிப்புக்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், எமது சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம் என தெரி வித்துள்ளனர்.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் விழா - Photos

கேப்பாபுலவில் பதற்றம்!! பெருமளவில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்


வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தற்காலிகமாக திறக்கப்பட்ட வீதி மீண்டும் மூடப்பட்டுள்ளது.

கேப்பாபுலவு கிராமத்துக்குள் தமது கோவிலை மக்கள் வழிபட சென்றுள்ள நிலையில் மக்களுடன் இணைந்து தென்பகுதி பிக்கு ஒருவரும் தென்பகுதி மக்களும் சென்றுள்ளனர்.

இதனால் பிரதான வீதியை இராணுவத்தினர் மீண்டும் மூடியுள்ளதால் ஒரு குழப்பமான நிலை தோன்றியுள்ளது.

குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் வழிபாட்டிற்கு சென்ற மக்கள் மத்தியில் சற்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தற்போது அந்த இடத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு பிரதேசசெயலர் சென்று இராணுவத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular Posts-Last 30 days