Slider

காணொளிகள்

மன்னார் செய்திகள்

விம்பம்

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

பல்சுவை

School events

மருத்துவம்

புகைப்படத்தளம்

கட்டுரைகள்

சினிமா

-

தமிழ் எண்களை இன்றும் நாணயத்தாள்களில் அச்சிட்டு வரும் உலகிலேயே ஒரே நாடு!!


தமிழ் எண்களை நாணயத்தாள்களில் அச்சிட்டு தமிழின் சிறப்பை எடுத்துக்காட்டும் நாடு உலகத்திலேயே ஒன்று தான்.

ஒவ்வொரு மொழியும் தனக்கே உரிய வரி வடிவ எண்களைக் கொண்டுள்ளன ஆனாலும் இலக்கங்களையே அதிகமாக பாவனையில் கொண்டுள்ளன.

எனினும் ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள மிகச்சிறிய நாடான மொரிசியஸ் இன்றும் தன் நாட்டு நாணயத்தாள்களில் தமிழ் எண்களை அச்சிட்டு வருகின்றது.

உலகில் இந்த நாட்டு நாணயத்தாள்களில் மட்டுமே தமிழ் எழுத்துக்களும் எண்களும் அச்சிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மொரிசியசில் ஏறக்குறைய 55 000 தமிழர்கள் வாழ்கின்றதாக கூறப்படுகின்றது. தமிழர்கள் இந்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

மேலும் தமிழர்கள் பலர் அமைச்சர்களாகவும் நீதிமான்களாகவும் பதவி வகித்துள்ளனர். சில பள்ளிகளில் தமிழ் மொழி பாடமாகக் கற்பிக்கப்படுகிறது.


இந்த நாட்டின் பணத்தில் தமிழ் எழுத்துக்கள் மற்றும் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சில மொழிகளில் மட்டுமே வரி வடிவ எண்கள் இன்றுவரை பாவனையில் இருக்கின்றன. அப்படியாக தமிழ் மொழியின் எண்கள் இன்று வரை உலகின் எங்கோ ஓர் இடத்திலாவது பாவனையில் இருக்கின்றது என்பது சிறப்பானதாகும்.
 
உலகிலேயே கவர்ச்சியான பாட்டி இவர் தான்: வயது என்ன தெரியுமா?


உலகிலேயே கவர்ச்சியான பாட்டி எனக் கருதப்படும் பெண் ஒருவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

செர்பியா நாட்டை சேர்ந்த Zaklina என்ற பெண்ணிற்கு 47 வயதாகிறது. இவருக்கு 28 வயதில் ஒரு மகளும், இரண்டு பேத்திகளும்(படத்தில் உள்ள குழந்தைகள்) உள்ளனர்.

உடல் அழகை பராமரிப்பதில் அதீத ஆர்வம் உடைய இவர் ஒவ்வொரு நாளும் தன்னுடைய கவர்ச்சியை காட்டும் வகையில் வித விதமான உடைகளை உடுத்திய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதுமட்டுமில்லாமல், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், போலந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்வதால் இந்த நாடுகளில் பின்பற்றப்படும் உடை அலங்காரங்களை இவரும் பின்பற்றி தனது அழகை வெளிப்படுத்துகிறார்.

சமூக வலைத்தளமான டுவிட்டரில் இவரை தற்போது 1,57,000 பேர் பின் தொடர்கின்றனர்.

இவர் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படத்திற்கு அவர்களது நண்பர்கள் விமர்சனம் எழுதி அவரை உலகளவில் பிரபலமான அழகியாக வெளிக்காட்டி வருகின்றனர்.

இது குறித்து அவர் பேசியபோது, ’அழகு மற்றும் கவர்ச்சி என்பது பெண்களிடம் எந்த வயதிலும் நீடித்திருக்கும். இதற்கு நமது உடலை சரியாக பராமரிக்க வேண்டும்.

உடலமைப்பிற்கு ஏற்வாறு ஆடைகளை தெரிவு செய்ய வேண்டும். இவ்வாறு பின்பற்றி வந்தால் எந்த வயதிலும் கவர்ச்சியாக ஜொலிக்கலாம்’ என உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

உலகிலேயே அதிவேக கின்னஸ் சாதனை படைத்த பொலிஸ் கார்!


டுபாய் பொலிஸாரால் பயன்படுத்தும் “புகாட்டி வேரன்” கார் உலகிலேயே அதிவேக பொலிஸ் கார் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

மணிக்கு 407 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் இந்த கார் 60 மைல் வேகத்தை 0.25 விநாடிகளில் கடந்துவிடும்.

இதற்கு முன்னர் அதிவேக பொலிஸ் காரினை வைத்திருந்த பெருமையினை இத்தாலிய பொலிஸார் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகமே போற்றும் விஞ்ஞானியான இந்த சாதனை தமிழர் பற்றி தெரியுமா?


மயில்சாமி அண்ணாதுரை - இஸ்ரோவின் தலைவராக தற்போது பதவி வகித்து வருகிறார்.

கடந்த மாதம் இஸ்ரோ 104 செயற்கை கோள்களை விண்வெளிதளமான ஸ்ரீஹரிக்கோட்டாவில் தொடங்கியது.

கடந்த 2008ல் சந்திரனுக்கு சந்திராயான் 1 ராக்கெட் அனுப்பப்பட்டது. பின்னர் 2013ல் செவ்வாய்க்கு மங்கல்யான் அனுப்பப்பட்டது.

இந்த மூன்றும் விண்வெளி துறையில் மிக பெரிய சாதனையாக கருதப்படும் வேளையில் இம்மூன்றின் வெற்றியிலும் முக்கிய பங்காற்றியவர் தான் மயில்சாமி அண்ணாதுரை.

இன்று உலகம் போற்றும் விஞ்ஞானியாக விளங்கும் 58 வயதான மயில்சாமி அண்ணாதுரை இந்த இடத்துக்கு சாதரணமாக வந்து விடவில்லை.

அண்ணாதுரை கோயம்பத்தூரில் உள்ள கோத்தவடி என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தார். இவர் தந்தை மாதம் 120 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் ஆசிரியராக இருந்தார்.

அண்ணாதுரையுடன் சேர்த்து அவர் தந்தைக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள். இவர் தான் அதில் மூத்தவர்.

ஆசிரியர் பணியில் வரும் சம்பளம் பத்தாததால் அண்ணாதுரையின் தந்தை துணி தைக்கும் தொழில் இடையில் செய்து வந்தார். அதில் மாதம் 100 ரூபாய் வருமானம் வந்தது.

பள்ளிக்கூடம் முடிந்து வரும் வீட்டுக்கு வரும் அண்ணாதுரை தந்தையின் தையல் தொழிலுக்கு உதவிகளையும் செய்து வந்தார்.

இந்த ஏழ்மையிலும், அண்ணாதுரை படிப்பில் கெட்டிகாரராக விளங்கினார். எல்லா வகுப்பிலும் முதல் மாணவனாக வந்த அவர் பத்தாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவனாய் தேர்ச்சி பெற்றார்.

பின்னர் PUC படிப்பிலும் கல்லூரியிலேயே முதல் மாணவராய் வந்தார். பின்னர் அரசு கல்லூரியில் பி.இயும், PhD படிப்பை அண்ணா பல்கலைகழகத்திலும் அவர் முடித்தார்.

பின்னர் தனக்கு விருப்பமான விண்வெளி துறையை தேர்ந்தெடுத்து உலகம் போற்றும் விஞ்ஞானியாக இன்று திகழ்கிறார்.

அண்ணாதுரை பகவத்கீதையில் சொல்லப்பட்ட ஒரு வாக்கியத்தை தான் வேதவாக்காக பின்பற்றுகிறார்.

உங்கள் கடமையை தொடர்ந்து செய்யுங்கள், வெகுமதி தானாக வரும்!

உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்த ஒரு தமிழன்!


2017ஆம் ஆண்டுக்கான உலக அளவில் இருக்கும் கோடீஸ்வரர்களின் பெயர் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஒரே ஒரு தமிழர் இடம்பெற்றுள்ளார்.

அவர்தான் 102ஆவது இடத்தைப் பிடித்த ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் சிவ நாடார். இவரது சொத்து மதிப்பு 12.3 பில்லியன் டொலர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவ நாடார் தனது பள்ளிப்படிப்பு முழுக்க முழுக்க தமிழிலேயே படித்தார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் உயர் படிப்பை மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் முடித்தார்.

இதன்பிறகு கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் படித்து, ஆராய்ச்சி மேற்கொண்டு, டாக்டர் பட்டமும் பெற்றார்.

டி.சி.எம். நிறுவனத்தில் மிகக் கடுமையாக வேலை பார்த்து, அடுத்த சில ஆண்டுகளிலேயே இந்திய அளவில் புகழ்பெற்றார்.

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்தவர், சொந்தமாக பிஸினஸ் செய்ய வேண்டும் என்கிற ஆசையில் டி.சி.எம். நிறுவனத்தை விட்டு விலகினார். அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த ஐந்து பேரை தன்னுடன் இணைத்துக் கொண்டார்.

1983இல் ராஜீவ் காந்தி பிரதமரான பிறகு கம்ப்யூட்டர் தொடர்பான உதிரிபாகங்களை இறக்குமதி செய்யும் வகையில் சட்டதிட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பெர்சனல் கம்ப்யூட்டரை வடிவமைத்து விற்கத் தொடங்கினார். ‘பிசிபீ’ (சுறுசுறுப்பான தேனி) என்று தனது கம்ப்யூட்டருக்குப் பெயர் வைத்தார். கம்ப்யூட்டர் விற்பனை இந்தியாவில் சூடு பிடிக்கவே, 1987-ல் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் விற்பனை நூறு கோடி ரூபாயைத் தொட்டது.

1991இல் நரசிம்மராவ் பிரதமரானபிறகு தாராளமயமாக்கல் கொள்கை வரவே, வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டாகச் சேர்ந்து செயல்படத் தொடங்கும் வாய்ப்பு ஹெச்.சி.எல். நிறுவனத்திற்கு கிடைத்தது.

அமெரிக்காவின் ஹெச்.பி. நிறுவனத்துடன் இணைந்து புதிய கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் இறங்கியது.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வளர்ச்சியால் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் வருமானம் பல ஆயிரம் கோடி ரூபாயைத் தொட்டதோடு, நாற்பது துணை நிறுவனங்கள் கொண்ட அமைப்பாகவும் மாறியது.

இந்த நாற்பது நிறுவனங்களையும் ஒன்றிணைத்து, ஐந்து முக்கிய நிறுவனங்களாக மாற்றினார் சிவ நாடார்.

2004இல் ஐந்து நிறுவனங்களாக இருந்த நிறுவனத்தை ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ், ஹெச்.சி.எல். இன்ஃபோசிஸ்டம்ஸ் என இரு பெரும் நிறுவனங்களாக மாற்றினார்.

இன்றைக்கு ஹெச்.சி.எல். நிறுவனம் இந்திய ஐ.டி. நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாக இருக்கிறது.
மலேசிய வாழ் தமிழரும், பெரும் செல்வந்தருமான ஆனந்த கிருஷ்ணன், போர்ப்ஸ் செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் இடம் பிடித்திருக்கிறார்.2,043 பெரும் கோடீஸ்வர்களில் 219 வது இடத்தை பிடித்துள்ளார். இவரின் சொத்தின் மதிப்பு $6.5 பில்லியன்கள்.

ஆனந்த கிருஷ்ணனின் தகவல் தொலைத்தொடர்பு நிறுவனமான மேக்சிஸ் மற்றும் எண்ணெய் வயல் சேவைகளை வழங்கும் பூமி அர்மாடாவின் பங்குகள் வீழ்ச்சியடைந்ததை அடுத்து, மலேசியாவின் இரண்டாவது செல்வந்தர் என்ற இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு வந்துவிட்டார்.

16.2% மேக்சிஸ் பங்கு விற்பனையில் குழப்பம் இருப்பதாக செளதி தொலைதொடர்பு நிறுவனம் கூறுகிறது. ஆனந்த கிருஷ்ணன், ஹாவர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்.பி.ஏ படித்தவர். தாய்லாந்தில் வசித்து வரும் அவரது ஒரே மகன் புத்த மதத் துறவியாக மாறிவிட்டார்.

இதேவேளையில், 27.6பில்லியன் டாலர்களாக இருந்த சொத்துக்கள் 72.8பில்லியன் டாலர்களாக அதிகரித்து அமேசான் நிறுவனர் மூன்றாம் இடத்தில் உள்ளார்.முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்ப் ஐந்தாவது இடத்திலும், ஆரக்கல் துணை நிறுவனர் லார்ரி எல்லிசன் ஏழாவது இடத்திலும் உள்ளனர்

இந்த ஆண்டு பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை சர்வதேச அளவில் 2,043 ஆக உயர்ந்துள்ளது.இந்த பட்டியல் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த அளவு எண்ணிக்கை உயர்ந்துள்ளது 31 வருடங்களில் இதுவே முதல்முறையாகும்.

இந்த பட்டியலில் அமெரிக்க பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 565 ஆக உள்ளது இதற்கு காரணம் டிரம்ப் நவம்பர் மாதம் 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

319 எண்ணிக்கையில் சீனா இரண்டாம் இடத்தையும், ஜெர்மனி 114 எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் இடம்பெற்ற பெண்களின் எண்ணிக்கை 202லிருந்து 227 ஆக உயர்ந்துள்ளது, மொத்த பெண்களின் சொத்து மதிப்பு 852.8பில்லியன் டாலர்களாக உள்ளது.

இரண்டாம் வருடமாக லாரியல் அழகு சாதன நிறுவனத்தின் வாரிசு 39.5பில்லியன டாலர்கள் சொத்து மதிப்புடன்,

•கடந்த 23 வருடங்களில் 18வது முறையாக பில்கேட்ஸ் இந்த பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்.

•இந்த வருடம், 195 பேர் புதியதாக இடம் பிடித்துள்ளனர் குறிப்பாக சீன பெருநிலப்பரப்பிலிருந்து அதிகம் பேர் இடம் பிடித்துள்ளனர்.

•20 வயதாகும் அலெக்சாண்டரா ஆண்டர்சன் இந்த பட்டியலில் இடம் பிடித்த இளம் வயது நபர் ஆவார்.

•சுய முயற்சியில், பணக்காரராக, "ஸ்டிரைப்" என்ற இணைய வழி பணம் செலுத்தும் வலைத்தளத்தை நிறுவிய 26 வயது ஜான் கோலிசன் இடம் பெற்றுள்ளார்.

•இந்த பட்டியலில், சுய முயற்சியில் பணக்காரர்களில் புதிதாக வந்த பெண் தாய்-லி ஆவார். குழந்தையாக இருக்கும் போது அமெரிக்காவில் குடிபெயர்ந்து தற்போது எஸ் எஸ் ஐ என்னும் நிறுவனத்தை அவர் நடத்திக் கொண்டிருக்கிறார்.

- Vikatan-

700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவரின் முகம் மீண்டும் வடிவமைப்பு : ஆராய்ச்சியாளர்கள் சாதனை


பிரித்தானியாவில் 700 ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்தவரின் முகத்தை நவீன தொழில்நுட்பம் மூலம் ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் உருவாக்கியுள்ளனர்.

பிரித்தானியாவில் உள்ள Cambridge நகரில் ஒரு புகழ்பெற்ற மருத்துவமனை உள்ளது.

இதன் பின்புறம் உள்ள கல்லறையில் 13ஆம் நூற்றாண்டில், அதாவது 700 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட ஒருவரின் எலும்புகூட்டை விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்தனர்.

அதற்கு அவர்கள் Context 958 என பெயரிட்டுள்ளனர். Context 958ன் எலும்பை வைத்து முக புனரமைப்பு தொழில்நுட்ப உதவியுடன் ஆராய்ச்சியாளர்கள் முதத்தை வடிவமைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து Cambridge பல்கலைகழக பேராசிரியர் John Robb கூறுகையில், Context 958 நபரின் முகத்தை வெற்றிகரமாக வடிவமைத்துள்ளோம்.

அவர் தனது 40 வயதில் மரணமடைந்துள்ளார்.

அவர் எலும்புகள் வலுவாக உள்ளன. அவர் நன்றாக உழைப்பவராக இருக்க வேண்டும். உடல் நிலை கோளாறு காரணமாக Context 958 இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தங்கள் ஆராய்ச்சி தொடரும் எனவும் John தெரிவித்துள்ளார்.

துபாயில் ஒரு பர்கரின் விலை 6.54 லட்சம்....


உலக பணக்கார நாடுகளில் ஒன்றான துபாயில் உலகிலேயே அதிக மதிப்புடைய 7 அடுக்குடைய பர்கர் தயாரிக்கப்பட்டுள்ளது.

Dubai lifestyle magazine Villa 88 என்ற இதழின் நிறுவனர் Asma Al Fahim என்பவர், புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த பர்கரை தனது ராயல் குடும்பத்தினருடன் சேர்ந்து தயாரித்துள்ளார்.

துபாயில் உள்ள Dubai Mall's Galeries Lafayette எனும் மாலில், இந்த பர்க்கர் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இதன் விலை 6.54 லட்சம் ஆகும். இதற்கு முன்னர் $7,000 தொகையில் பர்க்கர் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே மிக விலையுயர்ந்த சீஸ், மற்றும் குங்குமப்பூ சேர்த்து மொத்தம் 7 அடுக்குகளில் இந்த பர்கர் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பர்கர் ஏலத்தில் விடப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வருவாயை, புற்றுநோய் விழிப்புணர்வுக்கு பயன்படுத்தவிருப்பதாக Asma Al Fahim தெரிவித்துள்ளார்.


தூங்கினால் சம்பளம் ரூ.9 லட்சம்! எந்த நாட்டில் தெரியுமா?


பிரபல ஊட்டச்சத்து நிறுவனம் ஒன்று தூங்கும் வேலைக்கு 9 லட்சம் சம்பளம் வழங்குவது இணையத்தில் பயங்கர பிரபலமடைந்து வருகிறது.

சீனாவின் நாவ் பாய்ஜின் என்ற உடல்நல ஊட்டச்சத்து நிறுவனமே இந்த அரிய வாய்ப்பை வழங்குகின்றது.

இந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நிறுவனத்தின் பொருட்களைச் சோதிக்கத் துணைபுரிவார்கள்.

நிறுவனம் தயாரிக்கும் புதிய ஊட்டச்சத்துப் பொருளை உட்கொண்டு, அது தூக்கத்தின் தரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை சோதிக்க வேண்டும்.

பின்னர், அது குறித்த அறிக்கையை நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது, குறித்த வேலை இணையத்தில் பிரபலமடைந்து வருகிறது.


உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடுகள் எவை தெரியுமா?


பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடாக நார்வே தெரிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் புதிய அறிக்கை வெளியாகியுள்ளது.

உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை தக்கவைக்க டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிஸ் ஆகிய நாடுகளுக்கிடையே கடும் போட்டி நிலவியுள்ளது.

ஆனால் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த வல்லுநர்கள் உலகின் மிக மகிழ்ச்சியான நாடாக நோர்வேயை தெரிவு செய்துள்ளனர்.

குறித்த பட்டியலில் முதல் 10 இடத்தில் கூட பிரித்தானியாவல் எட்டமுடியவில்லை என கூறும் வல்லுநர்கள், அயர்லாந்துக்கு அடுத்ததாக 19-வது இடத்தில் பிரித்தானியா இருப்பதாக பட்டியலிட்டுள்ளனர்.

நாட்டு மக்கள் மீது அக்கறை, போதிய சுதந்திரம், பெருந்தன்மை, நேர்மை, சுகாதாரம், தனிமனித வருமானம் மற்றும் நல்லாட்சி உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் மன்றம் 2017 ஆம் ஆண்டிற்கான மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க குடிமக்கள் தனி மனிதருக்கு உதவும் விடயத்தில் 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரையான காலகட்டத்தில் மிகவும் பின்தங்கியே காணப்பட்டதாக ஆய்வறிக்கை கூறுகின்றது. ஆனால் கனடியர்கள் விடயத்தில் உதவும் மனப்பான்மை மிக அதிகம் எனவும் தெரிய வந்துள்ளது.


குறித்த ஆய்வை மேற்கொண்ட அமைப்பானது ஒவ்வொரு நாட்டிலும் உள்ள 1000 மக்களை சந்தித்து முக்கியமான கேள்வி ஒன்றை முன்வைத்தனர்.

அது, ’ஏணி ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், அதில் பூஜியம் முதல் 10 வரையான படிக்கட்டுகள் உள்ளன.

ஏணியின் உச்சத்தில் இருப்பவை வாழ்க்கையின் மிக உயரிய நிலையில் இருப்பதை காட்டுகிறது. ஆனால் ஏணியின் அடிமட்டம் என்பது வாழ்க்கையின் மிகவும் துயரமான நிலையை காட்டுகிறது. தற்போது நீங்கள் இந்த ஏணியில் எந்த நிலையில் இருக்குன்றீர்கள்.’

குறித்த கேள்விக்கு பதிலளித்த நார்வே நாட்டினர் 7.54 எனவும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மக்கள் 2.69 எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மீது அணுகுண்டு தாக்குதல் நடந்தால்?


அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எதிர்கொள்வது எப்படி என விஞ்ஞானிகள் குழு அளித்த விளக்கம் வைரலாகியுள்ளது.

உலக நாடுகள் பலவும் போர் சூழலை எதிர்கொள்ள போராடி வருகின்றது. வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு அண்டை நாடுகளை பதற்றமான சூழலிலிலேயே வைத்துள்ளது.

இதை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பான் நாடு சமீபத்தில் போர் ஒத்திகை ஒன்றை பொதுமக்களுக்கு நடத்திக் காட்டியது.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார் நகரம் மீது அணுகுண்டு வீசப்பட்டால் அரசும் பொதுமக்களும் அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற ஒரு திட்டத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் குழு ஒன்று வெளியிட்டுள்ளது.

குறித்த திட்டத்தை வடிவமைப்பதற்காக 450,000 டொலர்கள் செலவு செய்து 3 முழு ஆண்டுகள் கடுமையாக உழைத்துள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள் குழு ஒன்று. மட்டுமின்றி இதற்கென 2 கோடி உருவகங்களை தத்ரூபமாக கணணியில் உருவாக்கியுள்ளனர். ஒவ்வொரு உருவகவும் தனிமனிதனை குறிப்பதாகும்.

மேலும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் உள்ளிட்ட தகவல்களை அமெரிக்கா முழுவதில் இருந்து திரட்டி இந்த விசேட திட்டத்திற்காக பயன்படுத்தியுள்ளனர்.

முக்கிய கட்டமாக, அணுகுண்டு மாதிரியாக ஹிரோஷிமா நாகசாக்கியில் வீசப்பட்ட அதே அளவு கொண்ட அணுகுண்டை இந்த திட்டத்திற்காகவும் வடிவமைத்துள்ளனர்.


பெரும்பாலான உருவங்களுக்கு குறித்த தாக்குதல் நேர்ந்தால் தப்பித்துக்கொள்வது எவ்வாறு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது, உணவு தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை எவ்வாறு கொண்டு சேர்ப்பது, நண்பர்கள் உறவினர்களிடம் எவ்வாறு தகவலை பகிர்ந்து கொள்வது என மிக நுணுக்கமாக ஆராய்ந்து குறித்த திட்டத்திற்காக பயன்படுத்தியுள்ளனர்.

மட்டுமின்றி அனுகுண்டு தாக்குதல் நடந்தால் நியூயார்க் நகரத்தில் இருந்து எவ்வாறு தப்பிச்செல்வது, அதற்கான போக்குவரத்து வசதிகளை எவ்வாறு உருவாக்குவது என மிகவும் திட்டமிட்டு வடிவமைத்து வருவதாக விஞ்ஞானிகள் குழுவில் உறுப்பினர்களான வில்லியம்ஸ் மற்றும் கென்னடி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தற்போது 3 ஆண்டுகளுக்கான நிதி உதவி மட்டுமே திரட்டப்பட்டுள்ளது என கூறும் விஞ்ஞானிகள் இந்த திட்டம் முழுமை அடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார்.

24,000 பெண்கள் ஒரே நேரத்தில் தீக்குளித்து தற்கொலை! எங்கே தெரியுமா?


தன்னுடைய பழமையான அடையாளங்களையும், பொக்கிஷங்களையும் போற்றி பாதுகாப்பதில் இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களை காட்டிலும் ராஜஸ்தான் ஒருபடி மேலே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இம்மாநிலத்தின் பெரும்பகுதி பாலைவன பிரதேசமாக இருந்தாலும் ராஜாக்கள் காலத்தில் மிகவும் செல்வசெழிப்பு மிக்க இடமாக ராஜஸ்தான் இருந்திருக்கிறது.

அந்த செல்வம் வரலாற்று காலம் நெடுகவும் ராஜஸ்தான் ஏராளமான படையெடுப்புகளுக்கு ஆளாகவும் காரணமாக அமைந்திருக்கிறது. வீரம் பொருந்திய ரஜபுத்திர வீரர்களாலும், மார்வார் வீரர்களாலும் ஆட்சி செய்யப்பட்ட ராஜஸ்தானில் வாழ்ந்த மக்கள் எக்காரணம் கொண்டும் போரில் எதிரிகளின் கைகளில் சிக்கி மானமிழக்க கூடாது என்பதை கொள்கையாக கொண்டிருந்திருக்கின்றனர்.

இவ்வளவு வீரம் கொண்ட அந்த ஊர் மக்கள் தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம். அப்படி 24000 பேரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்துகொள்ள என்ன கொடுமை நடந்திருக்கும்? அந்த கொடூர சம்பவம் நிகழ்ந்த இடத்தை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

தகிக்கும் 'தார்' பாலைவனத்தின் நடுவே கம்பீரமாக அமைந்திருக்கிறது ஜைசால்மர் கோட்டை. உலகின் மிகப்பெரிய கோட்டை வளாகமான இது 2013ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் உலக புராதன சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு மத்திய அரசினால் பரமாரிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 900 வருடங்கள் பழமையான இக்கோட்டையின் மதில்களுக்கு பின்னால் எண்ணற்ற வரலாற்று சம்பவங்கள் புதைந்திருக்கின்றன.

ரஜபுத்திர அரசர் ராவல் ஜைசால் என்பவரால் 1156ஆம் ஆண்டு இக்கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. ஜைசால் மன்னரின் பெயராலேயே இது ஜைசால்மர் கோட்டை என்று விளக்கப்படுகிறது. பெரும் படையெடுப்புகளையும் எதிர்கொள்ளும் வகையில் மூன்றடுக்கு சுவர்களால் இக்கோட்டை கட்டப்பட்டிருக்கிறது.

ஜெய்சால்மர் நகரின் இதய பகுதியில் அமைந்திருக்கும் இக்கோட்டையானது வரலாற்று காலம் நெடுகிலும் எண்ணற்ற போர்களையும், முற்றுகைகளையும் சந்தித்திருக்கிறது. அதிலும் 1294ஆம் ஆண்டு துருக்கியை சேர்ந்த கில்ஜி வம்சத்தின் இரண்டாவது அரசனான அலாவுதீன் கில்ஜியால் மேற்கொள்ளப்பட்ட முற்றுகை தாக்குதலின் முடிவு நம் நெஞ்சை பதற வைக்கும்.

கில்ஜியின் சொந்த நாடான துருக்கியில் இருந்து ராஜஸ்தான் வழியாக 3000க்கும் மேற்ப்பட்ட குதிரைகளில் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்ட பொருட்களை ஜைசால்மர் ராஜ்யத்தை சேர்ந்த பட்டி இனத்தவர்கள் கொள்ளையடித்துவிடுகின்றனர் . இதனை கேள்வியுற்று வெகுண்டெழுந்த அலாவுதீன் கில்ஜி ஜைசால்மர் நகரின் மீது படையெடுத்து செல்கிறார்.

அலாவுதீன் கில்ஜியின் படைகள் இந்த ஜைசால்மர் கோட்டையை கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் முற்றுகையிட்டு போர் புரிகின்றன. இந்த எட்டு வருடங்களும் போருக்கு காரணமாக அமைந்த பட்டி வம்சத்தினரே கில்ஜியின் படைகளுக்கு எதிராக வீரம் செரிக்க போர் புரிந்திருக்கின்றனர். பின்னர் ஒருகட்டத்தில் கோட்டையினுள் சேமிக்கப்பட்டிருந்த உணவு தீர்ந்துபோகிறது.அதே காலகட்டத்தில் ஜைசால்மரின் அரசர் ஜெத்சியும் மரணமடைகிறார். இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட கிஜ்லி தனது படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததோடு மட்டுமில்லாமல் வெளியிலிருந்து கோட்டைக்கு உணவு கொண்டு செல்லப்படும் எல்லா பாதைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார்.

உணவு பற்றாக்குறை, அரசரின் இழப்பு ஆகிய காரணங்களினால் ஒரு கட்டத்தில் தோல்வி உறுதி என்பதை உணர்ந்த கோட்டையினுள் இருந்த பட்டி வம்ச பெண்கள் 'ஜௌஹர்' என்ற சடங்கை மேற்கொள்ள துணிகின்றனர். போரில் தோல்வி உறுதியான பின்பு எதிரி படை வீரர்களின் கைகளில் சிக்கி தங்களின் மானத்தை இழக்காமல் இருக்க ரஜபுத்திர அரசியும், பெண்களும் தங்களை தாங்களே நெருப்பிட்டு உயிர் மாய்த்துக்கொள்ளும் சடங்கே ஜௌஹர் ஆகும் .

கில்ஜி படைவீரர்கள் கோட்டையை கைப்பற்றிவிடுவார்கள் என்ற நிலை வந்ததும் இக்கோட்டையினுள் இருந்த 24,000 ரஜபுத்திர பெண்களும் தங்களை தாங்களே தீயிட்டு மாய்த்துக் கொள்கின்றனர். தீக்குளிக்க விரும்பாதவர்கள் தங்கள் கணவனின் கைகளால் சிரங்களை கொய்து கொண்டனர்.

இது நடந்தவுடன் கோட்டையை பாதுகாத்து வந்த 3800 பட்டி வீரர்களும் கோட்டையின் கதவுகளை திறந்து எதிரியுடன் நேருக்கு நேராக சமர் செய்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். பின்னர் சில வருடங்கள் கழித்து மீண்டும் இக்கோட்டையை பட்டி வம்சத்தினர் கைப்பற்றியிருக்கின்றனர்.

அன்றிலிருந்து இன்றுவரை இக்கோட்டையினுள் பட்டி வம்சத்தினர் பரம்பரை பரம்பரையாக ஏராளமான அளவில் வசித்து வருகின்றனர். இன்று ராஜஸ்தானின் மிகமுக்கியமான சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றாக இந்த ஜைசால்மர் கோட்டை திகழ்கிறது. மஞ்சள் நிறமுள்ள மணல் கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கும் இந்த கோட்டை சூரிய அஸ்தமனத்தின் போது தங்க நிறத்தில் ஒளிர்வதால் 'தங்க கோட்டை' என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த கோட்டையினுள்ளே ஜைசால்மர் அரச பரம்பரையினர் வாழும் 'ராயல் பேலஸ், லக்ஷ்மிநாதர் ஆலயம், அக்காலத்தில் வணிகர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட ஹவேளிக்கள் போன்றவை இருக்கின்றன.

இன்று ஒவ்வொருநாளும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இக்கோட்டையை சுற்றிப்பார்க்க வருகை தருகின்றனர். இந்த கோட்டையினுள்ளே இருக்கும் உணவகங்களில் அதி சுவையான பாரம்பரிய ராஜஸ்தானிய உணவுகள் கிடைக்கின்றன.
 

நான்கு வயது குழந்தையின் கண்ணை பிடுங்கி எறிந்த கொடூர தாய்: அதிர்ச்சி தரும் காரணம்


ஜிம்பாப்வேயில் நான்கு வயது குழந்தையின் கண்ணை பிடுங்கிய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜிம்பாப்வேயின் மாஸ்வின்கோ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் இரண்டாவதாக பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்த நபருக்கு நான்கு வயதில் குழந்தை ஒருவர் உள்ளார்.

இதை இரண்டாவதாக திருமணம் செய்த பெண் தான் கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பெண் திடீரென்று அக்குழந்தையின் கண்களை தாக்கி பிடுங்கியுள்ளார். இதனால் அக்குழந்தை இரத்தம் வழிந்த நிலையில் வலி தாங்கமுடியாமல் கதறியுள்ளார்.

இதை அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பெண்ணை கைது செய்துள்ளனர். மேலும் அப்பெண் இரவு நேரத்தில் படுக்கையை ஈரம் செய்த காரணத்தினாலே இது போன்ற செயலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.

அப்பெண் குழந்தையை தாக்கும் போது, குழந்தையின் தந்தை அருகில் இருந்ததாக கூறப்படுகிறது.மனிதாபிமானம் இன்றி இது போன்ற செயலில் ஒரு தாய் இருக்கும் இடத்தில் ஒரு பெண் செய்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு வயது குழந்தைகள் படுக்கையை ஈரம் செய்வது ஒன்றும் புதிதல்ல, 12ல் 1 குழந்தை படுக்கையை ஈரம் செய்யத்தான் செய்யும் என்று என்ஹச்எஸ் தெரிவித்துள்ளது.

மேலும் அக்குழந்தை ஒரு இடத்தில் இரத்தம் வழிந்த நிலையில் உட்காரவைக்கப்பட்டுள்ளார். அது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச அழகியாக முடிசூடிய திருநங்கை! அழகாய் ஜொலிக்கும் தேவதை....


தாய்லாந்தின் திருநங்கை ஒருவர் தமது சக போட்டியாளர்கள் 27 பேரை வென்று இந்த ஆண்டின் சர்வதேச அழகியாக முடி சூடியுள்ளார்.

உலக அளவில் மிக பிரபலமானதும் திருநங்கைகளுக்காக நடத்தப்படும் மாபெரும் அழகிப் போட்டி தாய்லாந்தின் பட்டாயா நகரில் நடைபெற்றுள்ளது.

இதில் 24 வயதாகும் தாய்லாந்தின் Jiratchaya Sirimongkolnawin என்பவர் சர்வதேச அழகியாக முடி சூடியுள்ளார்.

இறுதிப் போட்டியில் பங்குபெற்ற மொத்தம் 27 திருநங்கை அழகிகளில் இருந்து தாய்லாந்தின் Jiratchaya Sirimongkolnawin வெற்றி பெற்றுள்ளார்.

திருநங்கைகளை போற்றும் வகையில் கடந்த 2004 ஆம் ஆண்டு குறித்த போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அது தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் தாய்லாந்தின் பட்டாயா நகரில் திருநங்கைகளுக்கான மிஸ் சர்வதேச அழகிப் போட்டி நடைபெற்று வருகிறது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் தாய்லாந்து 4 முறை வெற்றிவாகை சூடியுள்ளது. தொடர்ந்து பிலிப்பைன்ஸ் 2 முறையும், வெனிசுலா, பிரேசில், தென் கொரியா, ஜப்பான், மெக்ஸிக்கோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தலா ஒரு முறையும் வென்று சாதித்துள்ளது.

குறித்த போட்டியில் பங்குபெறும் திருநங்கைகள் பிறக்கும்போது கண்டிப்பாக ஆணாக பிறக்க வேண்டும், ஆனால் அவர்கள் ஏதேனும் ஒரு கட்டத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கலாம்.

இந்த ஆண்டின் அழகியாக வெற்றி பெற்றுள்ள Jiratchaya Sirimongkolnawin பல் மருத்துவத்தில் பட்டம் பெற்றவர். தற்போது மொடலாகவும் ஆடை வடிவமைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் சமூக விதிமுறைகளுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு ஜாக்பாட் பரிசுத்தொகை!


சமூக விதிமுறைகளுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு 250,000 டொலர் பரிசுத்தொகையையை அறிவித்துள்ளது அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழகம்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள எம்.ஐ.டி பல்கலைகழகத்தின் சார்பாக, சமூகத்தின் கட்டுப்பாடுகளை மதிக்காமல் அதற்கெதிராக செயல்படுவோருக்கு 250,000 டொலர் (இலங்கை மதிப்பில் ரூ.3,80,62,500) பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகையை, போட்டியில் தனி நபருக்கோ அல்லது ஒரு குழுவாக இயங்கி வெற்றிபெறுபவருக்கோ வழங்கப்படும் எனவும் எம்.ஐ.டி அறிவித்துள்ளது.

இதுகுறித்து எம்.ஐ.டியில் பேராசியராக பணிபுரிந்துவரும் சக்கர்மேன் என்பவர் கூறுகையில், “சமுதாயத்தின் பழமைவாய்ந்த கட்டுப்பாடுகளால் மனிதர்களின் சுதந்திரங்கள் ஒடுக்கப்படுகிறது. குறிப்பாக பெண்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

பாகிஸ்தானை சேர்ந்த சமூக ஆர்வலரான காலிடா புரோகி என்பவர் ஒரு குழுவாக செயல்பட்டு அந்நாட்டின் கிராமப்புறங்களில் நடைபெறும் ஆணவக்கொலைகளுக்கு எதிராகவும் பெண்களின் கல்வி, சுயமரியாதை உள்ளிட்டவைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

அவரின் அயராத முயற்சியில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குறிப்பிட்டளவு சமூக வளர்ச்சியை அடைந்துள்ளனர். இதுபோன்ற சமூக கட்டுப்பாடுகளை உடைத்து ஆக்கப்பூர்வமாக செயல்படுவர்களுக்கு இந்த பரிசுத்தொகை வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும் உலகளவில் சமூகக்கடுப்பாடுகளுக்கு எதிராக போராடப்பட்டு, மக்களின் உரிமையை நிலைநாட்டிய பல்வேறு போராட்ட வரலாறுகளையும் எடுத்துக்காட்டாக கூறிய அவர், அவ்வாறான முயற்சிகளை ஊக்குவிக்கப்படும் வகையில் இந்த பரித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

வரும் யூலை 21 திகதியன்று எம்.ஐ.டி கல்லூரியில் நடைபெறும் ஆண்டு விழாவின்போது வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கு மகாராணியும் ஒப்புதல்....


ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

எனவே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரெக்ஸிட் மசோதா மீதான அடுத்த நிலையை அடைய தெரசா மேக்கு சட்டரீதியாக முழு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுவது குறித்த பொது ஓட்டெடுப்பு கடந்தாண்டு நடந்தது. அதில் 52 சதவீதம் பேர் வெளியேற வேண்டும் என வாக்களித்தனர்.

இதனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக பிரிட்டன் அறிவித்தது. இந்த தீர்மானத்துக்கு எதிராக இருந்த முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார்.

புதிய பிரதமராக தெரசா மே தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதற்கிடையே, ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதற்கு ஒப்புதல் பெறுவதற்கான சட்ட மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது.

இந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக 335 எம்.பி.க்களும், ஆதரவாக 287 எம்.பி.க்களும் வாக்களித்திருந்தனர்.

இந்நிலையில், மக்களின் கருத்துப்படி ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் மசோதாவுக்கு பிரிட்டன் பாராளுமன்றம் கடந்த 14ம் தேதி ஒப்புதல் அளித்தது.

அதனைத்தொடர்ந்து, இந்த மசோதா இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் ஒப்புதலை பெற அனுப்பி வைக்கப்பட்டது. ராணி எலிசபத் இந்த மசோதாவுக்கு கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார்.

அதனைத்தொடர்ந்து, பிரெக்ஸிட் மசோதா சட்ட வடிவம் பெற உள்ளது.

இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுகையில் தர வேண்டிய அல்லது பெற வேண்டிய வர்த்தகம் சார்ந்த இழப்பீட்டு தொகை, ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளில் வசிக்கும் பிரிட்டன் குடிமக்கள் மற்றும் பிரிட்டனில் வாழ்ந்துவரும் ஐரோப்பிய யூனியன் நாட்டினரின் இரட்டை குடியுரிமையின் நிலைப்பாடு தொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்ற தலைவருடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே பேச்சுவார்த்தையின் மூலம் உறுதி செய்வார் என்று கூறப்படுகிறது.

உலக அழிவுக்கு இட்டுச் செல்லும் டாப் 5 விடயங்கள் என்ன தெரியுமா?


உண்மையில் நாம் வசிக்கும் இந்த பூமியை அழிக்க முடியுமா? அப்படி முடியும் என்றால் எவையெல்லாம் பூமிக்கு ஆபத்து உண்டாக்கக் கூடியவை என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

அறிவியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி 4,550,000,000 ஆண்டுகள் பழைய, 5,973,600,000,000,000,000,000 டன் எடை கொண்ட பூமிக்கு பேராபத்து விளைவிக்கக் கூடிய முக்கிய பிரச்னைகளை பட்டியலிட்டுள்ளனர்.

மாறி வரும் பருவநிலை

பூமியின் சராசரி வெப்பநிலை 2 டிகிரி உயர்ந்திருக்கிறது. அதற்கே துருவப் பகுதிகளில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகத் தொடங்கிவிட்டன. மனிதர்கள் இதே வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தால் இன்னும் சில நூற்றாண்டுகளில் அந்த 2 டிகிரி, 4 முதல் 6 டிகிரி ஆகிவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அப்படி ஆனால், அதைப் பூமியால் தாங்க முடியாது. கடல் மட்டம் உயரும். பெங்களூருக்கே கடற்கரை வந்தாலும் வியப்பதற்கில்லை என பகீர் கூட்டுகிறார்கள் விஞ்ஞானிகள். உலகம் முழுவதுமே காடுகள் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அணு ஆயுத போர்

ஹிரோஷிமா, நாகசாகியை மறக்க முடியுமா? இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், ஒட்டு மொத்த உலக மக்கள் தொகையையும் அழிக்க அதிக அளவிலான அணு ஆயுதங்கள் தேவை.

அவ்வளவு ஆயுதம் தற்போது உலகில் இல்லை. ஆனாலும், அணு ஆயுதங்கள் உலகை அழிக்க கூடியவை பட்டியலில் இடம் பிடித்திருப்பது ஏன் தெரியுமா? அணு ஆயுதங்களால் பூமியின் வெப்பநிலை நொடிப்பொழுதில் குறைந்துவிடும்.

மனிதர்களின் உணவுப்பொருட்களை எதுவும் அந்தக் குளிரில் உற்பத்தி ஆகாது. அதன் விளைவாக மனித இனம் அழியலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

சூழியல் பேரழிவு

சூழியல் பேரழிவு என்பது உயிரினங்கள் வாழத்தேவையான சூழ்நிலையை கொஞ்சம் கொஞ்சமாக பூமி இழந்து வருவதுதான். குளோபல் வார்மிங்கில் தொடங்கி இதற்கு பல காரணங்கள் இருக்க கூடும்.

உலக பொருளாதார சரிவு

உலகம் போகும் திசையை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், எதிர்காலத்தில் இப்போது இருக்கும் பொருளாதாரக் கொள்கைகளால் பல நாடுகள் திவால் ஆகலாம் என்கிறார்கள். அதனால், மக்கள் தொகை குறையும். மக்கள் தொகை பெருகவே பெருகாது எனவும் அஞ்சுகிறார்கள். தப்பிப்பிழைக்கும் நாடுகளும் தங்களுக்குள் போரிட்டு மடியலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சிறுகோள்களின் தாக்குதல்

asteroid impact என்பார்கள். கோள்கள் மோதிகொள்வதால் ஏற்படும் பாதிப்புகள். டைனோசர் என்ற இனமே அழிந்து போனதுக்கு அப்போது நடந்த மோதல் தான் காரணம் என விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

எதிர்காலத்தில் அதேபோல் மீண்டும் ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அதனாலும் உலகம் அழியலாம்.

மேல் குறிப்பிட்ட பட்டியலில் எரிமலைகள் தொடங்கி நேனோ டெக்னாலஜி வரை பல விடயங்களைப் பட்டியிலிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இவை எல்லாமே உலகையோ, மனித இனத்தையோ எதிர்காலத்தில் அழிக்கும் தன்மையுடையவை என்கிறார்கள்.
 
ஜெயலலிதாவின் 100 கோடி ரூபாய் அபராதம் கட்டப் போவது யார்?


என் அத்தைக்குச் சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றம் விதித்த 100 கோடி ரூபாய் அபராதத்தை நான் கட்டுவேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதா இறந்து விட்டதால், அவர் தண்டனையில் இருந்து விலக்குப் பெறுகிறார் என்று உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டது! அதனால், அந்த அபராதத் தொகையை அவர் செலுத்தத் தேவையில்லை என்கின்றனர் சிலர்.

இதில் எது உண்மை? 100 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமா, அதை யார் செலுத்த வேண்டும், யாரிடம் செலுத்த வேண்டும், எவ்வளவு நாள்களுக்குள் செலுத்த வேண்டும், அதற்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டனவா? சொத்துகளை எப்போது பறிமுதல் செய்வார்கள்? இவை தொடர்பாக, சட்ட நிபுணர்களிடம் பேசினோம்.

ரூ.100 கோடியே ஒரு லட்சம் அபராதம்!

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை நான்கு ஆண்டுகள் அல்ல. நான்கு ஆண்டுகள் ஆறு மாதங்கள். அதுபோல, ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம், 100 கோடி ரூபாய் அல்ல. ரூ.100 கோடியே ஒரு லட்சம்.

பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள், அதிகார துஷ்பிரயோகம் செய்து வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த குற்றத்துக்காக, முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.

100 கோடி ரூபாய் அபராதத்தைக் கட்டத் தவறினால், ஜெயலலிதா மேலும் ஓராண்டு சிறைத் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும். மேலும், கூட்டுச் சதியில் ஈடுபட்ட குற்றத்துக்காக ஒரு லட்ச ரூபாய் அபராதமும் ஆறு மாத சிறைத்தண்டனையும் வழங்கப்படுகிறது. இந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஆறு மாதங்கள் கூடுதலாகச் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.

சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்ட மற்ற மூன்று பேருக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஓர் ஆண்டு கூடுதலாகச் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.

அதுபோல, இந்த மூன்று பேருக்கும் கூட்டுச்சதியில் ஈடுபட்ட குற்றத்துக்காகத் தனியாக 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால், ஒரு மாத சிறைத்தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றுதான் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி பார்த்தால், ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் 100 கோடியே ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் நீதிபதி குன்ஹா விதித்துள்ளார். அதுபோல சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோருக்கு நான்கு ஆண்டுகள் ஆறு மாதங்கள் சிறையும் 10 கோடியே 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.

இதில் இ்ன்னொரு விஷயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். ‘வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்தது’ என நீதிமன்றம் பறிமுதல் செய்தும், முடக்கியும் வைத்திருக்கும், அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் அனைத்தும் அரசாங்கத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டு விடும். நீதிமன்றம் விதித்திருக்கும் அபராதத் தொகை, இதிலிருந்து எடுக்கப்பட மாட்டாது.

குற்றவாளிகள் நால்வரும், தாங்கள் நியாயமாகச் சம்பாதித்த பணத்திலிருந்தே இந்த அபராதத் தொகையைக் கட்ட வேண்டும். இதற்கும் தீர்ப்பில் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார் குன்ஹா.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து, ஜெயலலிதா, சசிகலா தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், நான்கு பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.


அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமித்தவ ராய், பினாகி சந்திர கோஷ் அடங்கிய அமர்வு, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் குற்றவாளிகள்தான். அதனால், கர்நாடக உயர் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு அளித்த விடுதலையை ரத்து செய்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதிசெய்கிறோம் என்று தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்பில், ஜெயலலிதாதான் மிகப் பிரதானமான குற்றவாளி. ஆனால், வழக்கு நிலுவையில் இருந்த காலத்தில் அவர் இறந்து விட்டதால், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

தண்டனையை நிறைவேற்ற முடியாது எனும்போது அபராதமும் கட்டத் தேவையில்லையா?' இதுபற்றிக் கேட்டோம்.

வழக்கறிஞர் ரமேஷ், சென்னை உயர் நீதிமன்றம் :

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் இரண்டு பகுதிகளை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று, உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கவில்லை. ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவருக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றுதான் குறிப்பிட்டுள்ளது.

அதனால், ஜெயலலிதாவுக்கான தண்டனைகள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன என்றோ, அவை எல்லாம் ரத்தாகிவிட்டன என்றோ அர்த்தம் இல்லை. மேலும், குற்றவாளிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டாவதாக, அபராதத்தைப் பொறுத்த வரை உச்ச நீதிமன்றம் எதுவும் சொல்லவில்லை. ஆனால், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை அப்படியே உறுதி செய்துள்ளது. அதனால், அந்தத் தீர்ப்பு அப்படியே அமுல்படுத்தப்படும். பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், தனது தீர்ப்பை சிறைத் தண்டனை மற்றும் அபராதத்தை மட்டும் குறிப்பிட்டு விட்டு முடித்து விடவில்லை.

மாறாக, அபராதத்தைக் கண்டிப்பாக வசூலித்தே ஆக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் நிற்காமல், அந்த அபராதத்தை எப்படி வசூலிக்க வேண்டும் என்ற வழிமுறைகளையும் விளக்கி உள்ளது.

அபராதம் செலுத்தலாமா? அல்லது, செலுத்தாமல் கூடுதலாக சிறைத் தண்டனை அனுபவித்துக் கொள்ளலாமா?’ என்று யோசிப்பதற்கான வாய்ப்பே குற்றவாளிகளுக்கு அளிக்கப்படவில்லை.

அபராதத்தைச் செலுத்தவில்லை என்றால், ஓர் ஆண்டு கூடுதல் சிறை, ஆறு மாதங்கள் சிறை’ என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பது, சட்டத்தில் உள்ள செக்‌ஷன்களின்படி. அது, தீர்ப்பு எழுதும்போது வழக்கமாகக் குறிப்பிடப்படுவது.

அவர் அத்துடன் நிறுத்தியிருந்தால், ‘நாங்கள் அபராதத்தைச் செலுத்த மாட்டோம்.... வேண்டுமானால் கூடுதலாக ஒரு வருடம் தண்டனை அனுபவித்துக் கொள்கிறோம்’ என்று குற்றவாளிகள் சொல்லலாம்.

ஜெயலலிதா சார்பில்கூட, ‘அபராதம் செலுத்த மாட்டோம். உங்களால் முடிந்தால், இறந்து போன ஜெயலலிதாவைக் கூடுதல் காலம் சிறையில் அடைத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லலாம்.ஆனால், நீதிபதி குன்ஹா இதற்கு வாய்ப்பே வைக்கவில்லை.

அவர் தனது தீர்ப்பில், குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளில் உள்ள நிரந்தர வைப்புத் தொகை, சேமிப்புக் கணக்குகளில் உள்ள தொகை முழுவதையும் அபராதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தத் தொகையில் அபராதம் ஈடாகவில்லை என்றால், வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள தங்கம், வைரம், வெள்ளி நகைகளை ரிசர்வ் வங்கி அல்லது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு விற்றோ, அல்லது பொது ஏலத்தில் விற்றோ பணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். வழக்கில் இணைக்கப் பட்டுள்ள நிறுவனங்களான ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், சிக்னோரா பிசினஸ் என்டர்பிரைசஸ், லெக்ஸ் பிராப்பர்டி டெவலப்மென்ட்ஸ், மெடோவ் அக்ரோ பார்ம்ஸ், ரிவர்வே அக்ரோ புராடக்ட்ஸ் மற்றும் இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் அண்டு ஃபார்மசூட்டிகல்ஸ் நிறுவனங்களின் பெயர்களில் உள்ள அசையாச் சொத்துக்கள் அனைத்தையும் அரசாங்கம் பறிமுதல் செய்துகொள்ள வேண்டும். வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையில் வழக்குச் செலவுக்காக கர்நாடக அரசுக்கு ஐந்து கோடி ரூபாயை தமிழக அரசு கொடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இது அப்படியே நிறைவேற்றப்படும். இப்போது சசிகலா, சுதாகரன், இளவரசிகூட தங்கள் கையில் இருந்து அபராதம் செலுத்தத் தேவையில்லை. அதுபோல, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் செலுத்தத் தேவையில்லை. அபராதத்தை அரசாங்கமே எடுத்துக்கொள்ளும்.

ஒருவேளை தீபக்கோ, சசிகலாவோ தங்கள் கையில் இருந்து அபராதம் செலுத்தினாலும், அதனால் எந்தப் பயனும் இல்லை. அதைக் கழித்துக் கொண்டு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள எந்தச் சொத்துகளும் அவர்களுக்குத் திரும்பக் கிடைக்காது.

ஏனென்றால் அபராதத்துக்குப் போக மீதி உள்ள சொத்துக்களை, சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நீதிபதி குன்ஹா சொல்லவில்லை. அபராதம் போக மீதி உள்ளவற்றை அரசாங்கம் பறிமுதல் செய்ய வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்.

கர்நாடக அரசின் சட்டத்துறை அதிகாரி:

அபராதம் நிச்சயமாக வசூல் செய்யப்படும். இதற்காக நாங்கள் ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள் என்று யாரையும் அணுகத் தேவையில்லை. வங்கிகளுக்கு நீதிமன்ற உத்தரவைத் தெரியப்படுத்தி, இவர்கள் பெயரில் உள்ள டெபாசிட் முழுவதையும் எடுத்துக் கொள்ளலாம். நகைகளையும் ஏலம் விடலாம்.

ஒருவேளை, அந்த ஏலத்தில் போதுமான தொகை கிடைக்கவில்லை என்றால், அதன்பிறகு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 421-ன்படி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், ‘குற்றவாளிகளின் சொத்துகளை அடையாளம் கண்டு ஏலம்விடுங்கள்’ என்று மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பும். அதன்படி, அவர் சொத்துகளை அடையாளம் கண்டு ஏலம்விட்டு தொகையை அரசாங்கத்திடம் ஒப்படைப்பார்.

அபராதத் தொகை, பறிமுதல் செய்யப்படும் சொத்துகள் எல்லாம் தமிழக அரசுக்குச் சேரும். அதில் இருந்து வழக்குச் செலவை நாங்கள் பெற்றுக்கொள்வோம். இங்கு நாங்கள் தெளிவுபடுத்த விரும்புவது என்னவென்றால், நாங்கள் வழக்குச் செலவைக் கேட்டு கடிதம் எழுதினோம் என்று செய்திகள் வருகின்றன.

ஆனால், அப்படி நாங்கள் எந்தக் கடிதத்தையும் எழுதவில்லை. ஏனென்றால், குற்றவாளிகள் சீராய்வு மனுத்தாக்கல் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்கு மே 14-ம் தேதி கடைசி நாள். இந்த மூன்று மாத அவகாசத்துக்குள் அவர்கள் சீராய்வு மனுத்தாக்கல் செய்துவிட்டால், இந்த வழக்கு இன்னும் தொடரும்.

அந்தச் சூழ்நிலையில், நாங்கள் அபராதம் குறித்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள முடியாது. ஒருவேளை, 90 நாள்களுக்குள் அவர்கள் சீராய்வு மனுத்தாக்கல் செய்யவில்லை என்றால், அதன்பிறகு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் அபராத வசூல் மற்றும் சொத்துப் பறிமுதல் நடவடிக்கைககள் தொடங்கிவிடும்.

மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா:

அபராதத்தைச் செலுத்துவதா, வேண்டாமா? என்ற கேள்விக்கே இடமில்லை. ஜெயலலிதா இறந்து விட்டதால், அவர் சிறைத்தண்டனையில் இருந்து இயற்கையாக விலக்குப் பெற்றுள்ளார். இறந்த ஒருவரை, சிறையில் அடைப்பது சாத்தியம் இல்லை என்பதால், அவருக்கு அந்த விலக்கு கிடைத்துள்ளது.

அபராதத்துக்கு ஜெயலலிதா விலக்குப் பெற முடியாது. ஏனென்றால், அதை வசூலிக்கும் சாத்தியங்கள் நிரந்தரமானவை. நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில், அதை வசூலிக்கும் முறைகள் என்ன என்பதையும் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். அதன்படி அந்தத் தொகை வசூலிக்கப்படும்.

சுந்தர் பிச்சைமுத்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற அதிகாரி:

பொதுவாகக் குற்றவாளிகள், அபராதத்தைத் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் செலுத்தலாம், இல்லையென்றால் சிறையில் செலுத்தலாம். ஆனால், இங்கு நீதிமன்றம் தெளிவான வசூல் முறைகளைக் கொடுத்துவிட்டது. அது போதவில்லை என்றால்தான், குற்றவாளிகள் தனியாக அபராதத் தொகையைச் செலுத்த வேண்டிவரும். அதுவும்கூட அவர்கள் செலுத்தத் தேவையில்லை. அவர்கள் பெயரில் உள்ள மற்ற சொத்துகளை வருவாய் மீட்புச் சட்டம் மூலம் அரசாங்கமே பறிமுதல் செய்து செலுத்திவிடும்.

சரவணன், தி.மு.க சார்பில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்களில் ஒருவர்:

பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, ‘அரசுப் பதவியை வைத்து ஜெயலலிதா சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். அதனால், அந்தச் சொத்துகள் அரசாங்கத்துக்கே போக வேண்டும். அதனால்தான், 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவற்றை குற்றவாளிகள் செலுத்த வேண்டும் என்றே அவர் சொல்லவில்லை. ‘குற்றவாளிகளிடம் இருந்து எடுத்துக்கொள்ளுங்கள்’ என்பதுதான் குன்ஹா தீர்ப்பின் சாரம். அதனால், அரசாங்கமே இதை எடுத்துக்கொள்ளும்.

நல்லம நாயுடு, சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரி:

சொத்துக் குவிப்பு வழக்கில் கொடநாடு எஸ்டேட் உள்ளது. அதுபோல, போயஸ் கார்டன் வீட்டில் கீழ்த்தளம், வழக்கில் இணைக்கப்படவில்லை. ஆனால், அதன்பிறகு கட்டப்பட்ட மேல்தளம் மற்றும் போயஸ் கார்டன் வீட்டின் அருகில் கட்டப்பட்ட இரண்டு மாடிக் கட்டடம் ஆகியவை அந்த வழக்கில் உள்ளன. அதனால், இவற்றை எப்படி ஏலம் விடுவது என்பதை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

ஒருவேளை ஜெயலலிதா குடும்பத்தினரோ, அ.தி.மு.க-வோ அரசாங்கம் நிர்ணயிக்கும் விலையைச் செலுத்தி அதை வாங்கிக் கொள்ளலாம். அல்லது அரசாங்கம் மொத்தமாக ஏலத்தில் விட்டு விட்டு, அதில் ஆரம்ப காலத்தில் இருந்த ஜெயலலிதாவின் வீட்டுக்கான மதிப்பை மட்டும் ஜெயலலிதாவின் வாரிசுகளிடம் ஒப்படைக்கலாம். கொடநாடு உள்ளிட்ட மற்ற சொத்துகள் அரசாங்கத்தால் அப்படியே பறிமுதல் செய்யப்பட்டு விடும். என்றார்

- Vikatan-

7 விநாடிகளில் 98 கோடி கொள்ளை: என்ன நடந்தது தெரியுமா?


ஹாங்காங் நகைக்கடை ஒன்றில் சுமார் 98 கோடி ரூபாய் மதிப்பிலான வைர ‌மோதிரம் ஏழு விநாடிகளில் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாங்காங்கின் சிம் ஷா சூய் என்ற இடத்தில் நடந்த இந்த திருட்டு, அங்குள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

முகமூடி அணிந்த நபர் ஒருவர் அப்பகுதியில் உள்ள தங்க நகைக் கடையில் உள்ள கண்ணாடியை கோடாரியால் உடைத்து இந்த துணீகர சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார்.

அவர் திருடியது ஹாங்காங் டொலரில் 5 மில்லியன் டொலர் (இலங்கை மதிப்பில் ரூ.98 கோடி) மதிப்பிலான வைர மோதிரம் எனத் தெரி‌வந்துள்ளது.

கடை வாயிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு கொள்ளையடித்தவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் அதுவும் அதிக ஜனநடமாட்டம் இருக்கும் பகுதியில் நடந்த இந்த கொள்ளை விசாரணை அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மட்டுமின்றி 2011 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நகைக்கடையில் இதுபோன்ற கொள்ளை சம்பவம் இது முதன் முறை எனவும், குறித்த கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஏற்கெனவே இங்கு வந்து நோட்டமிட்டு சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

அதிக பாதுகாப்பான நகரம் என்று கருதப்படும் ஹாங்காங்கில் நடந்த இந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நாடு முழுவதும் உணவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்: தயாராகும் கல்லறைகள்....


சோமாலியா நாட்டில் மோசமான பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் குழந்தைகள் உணவின்றி உயிருக்கு போராடி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியா கடந்த 2011-ம் ஆண்டு முதல் கடுமையான பஞ்சத்தை சந்தித்து வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தினாலும், சமீபத்தில் நிகழ்ந்த உள்நாட்டு யுத்தம் காரணமாகவும் ஏற்கனவே இருப்பில் இருந்த அனைத்து உணவுகளும் தீர்ந்துள்ளன.


சோமாலியா நாட்டில் தற்போதுள்ள மக்கள் தொகையின் எண்ணிக்கை சுமார் 1 கோடியே 20 லட்சம் ஆகும்.

ஆனால், வேகமாக பரவி வரும் பஞ்சம் காரணமாக சுமார் 70 லட்சம் மக்கள் போதிய உணவு, தண்ணீர் இன்றி அன்றாடம் போராடி வருகின்றன.

இதுமட்டுமில்லாமல், பஞ்சத்தில் சிக்கியுள்ள பச்சிளம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும், உணவு இல்லாத காரணமாகவும் உயிரிழக்கும் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

சில கிராமப்புறங்களில் பசியால் குழந்தைகள் அடிக்கடி உயிரிழப்பதால் சடலங்களை புதைக்க முன் கூட்டியே கல்லறைகளும் எழுப்பப்படுகின்றன என்பது தான் மிகவும் அதிர்ச்சிகரமான செய்தியாகும்.


சோமாலியாவில் கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தில் சிக்கி சுமார் 2,60,000 பேர் உயிரிழந்தனர்.

தற்போது ஏற்பட்டுள்ள பஞ்சத்தை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் உயிரிழப்புகள் மிக மோசமாக நிகழும் என மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சோமாலியா மற்றும் அண்டை நாடுகளான தெற்கு சூடான், ஏமன் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளிலும் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் இதனை தீர்க்க உலக பணக்கார நாடுகளிடம் சுமார் 700 மில்லியன் டொலர் வரை ஐ.நா சபை நிதியுதவி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2020ல் உலகம் என்னவாகும்? தலையாட்டி சித்தர் கூறும் அதிர்ச்சி....


உலகமே அழிந்தாலும் தான் மட்டும் என்றும் மறையாமல், அழியாமல் அனைத்தையும் சாட்சியாய் நோக்கிக் கொண்டிருக்கும் ஒரே சித்தர் ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி என கூறப்படுகிறது.

பிரும்மரிஷி எனும் மலையில் இருக்கும் இவர் பல கல்ப கோடி பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூன்று கடவுள்களை பார்த்த பெருமைக்குரியவராக திகழ்கின்றாராம்.

இந்த மலை திருச்சியில் பெரும் புலியூர் என்ற பெரம்பலூர் அருகில் உள்ள எளம்பலூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு 210 மகா சித்தர்கள் வாசம் செய்வதாக வரலாறு கூறுகின்றது.

பிரும்மரிஷி மலையின் அடிவாரத்தில் காகபுஜண்டர் தலையாட்டி சித்தரின் மகத்தான சக்தி கொண்ட ஜீவ சமாதியில் மிகப் பெரிய கொப்பரையில் நெய் தீபம் ஏற்றி வணங்கப்படுகிறது.

ஒரு கோடி மனித ஜீவ வித்துக்களை பாதுகாக்கும் மாமலையாக இந்த பிரும்மரிஷி மலை விளங்கும் என்று சித்தர் வாக்கில் கூறப்பட்டுள்ளது.

இந்த மலையில் ஜீவ சமாதி கொண்டுள்ள தலையாட்டிச் சித்தர் முக்காலமும் அறிந்தவர். மகா ஞானி தன்னை நாடி வருவோருக்கு அருள் செய்து வருவதாக கூறப்படுகிறது.

புகழ் வாய்ந்த இந்த தலையாட்டி சித்தர், 2020ல் இந்தியா என்னவாகும் என்பது குறித்து பல அதிசயமான தகவல்களை அவர் காலஞானம் எனும் நூலில் கைப்பட எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக இந்தியாவில் சுனாமி வருவதற்கு முன்னால் அது பற்றிய தகவல்கள் அந்நூலில் கூறப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.


Photos