Slider

காணொளிகள்

மன்னார் செய்திகள்

விம்பம்

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

பல்சுவை

School events

மருத்துவம்

புகைப்படத்தளம்

கட்டுரைகள்

சினிமா

-

போர்க் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குங்கள்! யஸ்மின் சூகா வலியுறுத்தல்...


போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றவாளிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது, மாறாக அவர்களைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஹெய்ட்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைப் படையினர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிடம் குறித்த விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ள அவர்,

ஜகத் டயஸின் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஹெய்ட்டியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் வரையில் ஹெய்ட்டியில் இலங்கைப் படையினர் நிறுத்தப்படக் கூடாது.

ஜகத் டயஸ் தலைமை தாங்கிய 57வது படைப்பிரிவினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியமை பற்றிய பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன எனவும் அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


முஸ்லிம்களின் புனித நோன்பு நாளை ஆரம்பம்....


முஸ்லிம்களின் புனித நோன்பு மாதம் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் நிகழ்வும், ரமழான் மாத நோன்பு ஆரம்பம் குறித்து தீர்மானிப்பதற்காகவும் பிறைக்குழு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடியிருந்தது.

இந்நிலையில் நாட்டின் பல இடங்களில் இன்று மாலை ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதாக ஆதாரபூர்வமான தகவல் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று அதிகாலை முதல் நோன்பு உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்படும் என்று பிறைக்குழு தீர்மானித்திருப்பதாக பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஏழ்மையில் வாடும் மக்களின் பட்டினித் துயரை அனுபவத்தின் ஊடாக உணரச் செய்து அதன் மூலம் அம்மக்களுக்கு உதவும் மனோபாவத்தை வசதி படைத்தவர்கள் மத்தியில் உருவாக்குவதே புனித நோன்பின் நோக்கம் என்று இஸ்லாமிய போதனைகள் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

அதற்காக இன்று தொடக்கம் எதிர்வரும் ஒருமாத காலம் வரையில் இஸ்லாமிய மதத்தவர்கள் பகல் நேரங்களில் சொட்டு நீர் கூட அருந்தாத நிலையில் புனித நோன்பை அனுஷ்டிப்பதுடன் , மாத இறுதியில் தம்மிடம் சேகரிப்பில் இருக்கும் நகை, பணம், சொத்துக்கள் என்பவற்றின் பெறுமதியில் இரண்டரை வீதத்தை ஏழை மக்களுக்காக ஸகாத் எனும் தானம் செய்யும் கிரியையிலும் ஈடுபடுவர்.

வவுனியா இலுப்பைக்குளம் பாடசாலை மாணவர்கள் பெற்றோர் ஆர்ப்பாட்டம்....


வவுனியா செட்டிகுளம் இலுப்பைக்குளம் அடைக்கல அன்னை வித்தியாலய மாணவர்கள் மற்றும் பெற்றோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டு ஒன்று முதல் சாதரணதரம் வரையுள்ள இப்பாடசாலையில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரியே மாணவர்களும் பெற்றோரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 8 மணிக்கு பாடசாலையின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கல்வி நிலை பாதிக்கப்படுவதாகவும் சாதாரணதரப்பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் ஆசியார் வளம் இன்றி கற்றல் செயற்பாட்டை முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்ததுடன் உலகம் தொழில் நுட்ப வளர்ச்சி அடைந்த நிலையில் தொழில்நுட்பம் தொடர்பான எவ்வித கல்வியும் இன்றி தாம் உள்ளதாகவம் மாணவர்கள் தெரிவித்ததுடன் தமக்கான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.

இதேவேளை தமது பிள்ளைகளின் கல்வி மிகவும் மோசமாக பாதிக்கப்படுவதாக பெற்றோர் கருத்து தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு செட்டிகுளம் கோட்டக்கல்வி அதிகாரி வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.

எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிடாத நிலையில் வட மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கலந்துரையடியிருந்தார்.

இந் நிலையில் தமக்கான நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை பொராட்டம் தொடரும் என தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று போராட்டத்தினை நிறுத்திக்கொண்டதுடன்  மீண்டும்இன்று தமது போராட்டத்தை காலை08மணிக்குஆரம்பித்துள்ளனர்.வவுனியாவில் கடையுடைத்து கொள்ளை: சிறுவன் கைது....


வவுனியா - மகாறம்பைக் குளத்தில் கடையுடைத்து திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த திருட்டுச் சம்பவம் நேற்று மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள கடையின் பிற்பகுதி கதவினை உடைத்து சுமார் 24,000 பெறுமதியான கமரா, 18,000 பெறுமதியான தொலைபேசி மற்றும் மீள்நிரப்பு அட்டைகள் என்பன களவாடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், வவுனியா சாந்தசோலையினை சேர்ந்த பத்மநாதன் கேசர (வயது 17) என்ற சிறுவனை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் குறித்த சிறுவனை ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


வவுனியாவில் வடமாகாண முதலமைச்சரால் நினைவு முற்றம் திறந்து வைப்பு...


வவுனியா, புதுக்குளம் பகுதியில் நினைவு முற்றம் எனும் மண்டபம் திறந்து வைக்கப்பட்டதுடன், முதியோர் இல்லமொன்றிட்கான அடிக்கல்லும் நாட்டி வைக்கப்படப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வுகள் நேற்று நடைபெற்றதுடன், இதில் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் கலந்து கொண்டு மண்டபத்தை திறந்து வைத்ததுடன், அடிக்கலையும் நாட்டி வைத்தார்.

பேராசிரியர் முருகர் குணசிங்கத்தினால் நிருவப்பட்டுள்ள இந்த நினைவு முற்றம் மண்டபமானது புதுக்குளம் கிராமத்தில் இறந்தவர்களை நினைவு கூறும் முகமாக அவர்களது படங்கள் தாங்கி அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தனராக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கலந்து கொண்டதுடன், கிராம மக்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இடம்பெற்ற வடமாகாண பெண்கள் சாரணிய வருடாந்த பொது கூட்டம்...


வடமாகாண பெண்கள் சாரணிய வருடாந்த பொது கூட்டம் நேற்று(20) வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்டு உரைநிகழ்த்திய வவுனியா வலயக் கல்வி பணிப்பாளர் எம்.ராதாகிருஸ்ணன், நல்ல தலைமைத்துவத்தை ஆண்களும், பெண்களும் இணைந்து கல்வி கற்கும் போது உருவாக்க முடியும்.

அத்துடன் அந்த கலாசாரம் இன்று மாற்றமடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது கல்லூரியின் அதிபர் பாக்கியநாதன் கமலேஸ்வரி, வலயக்கல்வி பணிப்பாளர் எம்.இராதாகிருஸ்ணன், பெண்கள் சாரணிய சங்கத்தலைவி அணோஜா பெர்னாண்டோ , பெண்கள் சாரணிய பிரதம ஆணையாளர் யஸ்மின் ரகீம், பெண்கள் சாரணிய பிரதி ஆணையாளர் விசாக்கா திலகரட்ண மற்றும் சாரணிய மாணவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இதேவேளை, இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை....


வவுனியா ஈரட்டைபெரியகுளம் பகுதியில் நேற்று (19) இரவு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கலுகுண்ணாமடு பகுதியில் வசித்து வரும் மகிபலகே சுதேஸ் கஞ்சனே மகிபல என்ற நபரே அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


வவுனியாவில் வடமாகாண சுகாதார அமைச்சரால் சிறுவர் பாதுகாப்பு இல்லம் திறந்து வைப்பு...


வவுனியாவில் சிறுவர் பாதுகாப்பு இல்லம்(நந்தவனம்) வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த திறந்து வைப்பு நிகழ்வு இன்று காலை இடம்பெற்றதுடன், இதன்போது வைரவப்புளியங்குளத்தில் உள்ள சிறுவர் பாதுகாப்பு இல்லமே திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வடமாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் விஸ்வரூபன், மாவட்ட சிரேஸ்ட நன்னடத்தை உத்தியோகத்தர் மனோகரராஜா, வடமாகாண சுகாதார அமைச்சரின் செயலாளர் சத்தியசீலன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், வடமாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் பா.சிந்துஜன், வவுனியாவை சேர்ந்த சிறுவர் இல்லங்களின் பொறுப்பாளர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Photos