Slider

காணொளிகள்

மன்னார் செய்திகள்

விம்பம்

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

பல்சுவை

School events

மருத்துவம்

புகைப்படத்தளம்

கட்டுரைகள்

சினிமா

-

வடமாகாண விளையாட்டு விழாவில் மன்னார் மாவட்டம் சாதனையில்.....படங்கள் இணைப்பு


வட மாகாண விளையாட்டு விழா 2017,தடகளப்போட்டிகள் யாழ்ப்பாண துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது. முதல் நாள் நிகழ்வில் ஆண்களுக்கான 200மீற்றர் ஓட்ட்ப்போட்டியில் 200M 1ST, 2ND,3RD மூன்று பதக்கங்களும்  மன்னாருக்கே....

  மன்னார் மாவட்டம் 2 சாதனைகள்.
 TWO RECORD BREAK 200 M போட்டியில் பிறேம் தாஸ் 22.1 செக்கன்களில் ஓடி சாதனை.
ஆண்களுக்கான 800M  ஓட்டப்போட்டியில் 1ம் 2ம் இடங்களையும் பெற்றுக்கொண்டதோடு
முதலாம் இடத்தினை கிளஸ்ரன் 1.59.7 செக்கனிலும்
பெண்களுக்கான 200M ஓட்டப்போட்டியில் 1ம் இடத்தினை அபியும் பெற்றுக்கொண்டனர்.
பெண்களுக்கான 4X100 relay அஞ்சலோட்டத்தில் புதிய சாதனை 54.3செக்கனிலும்
ஆண்களுக்கான 4X100 relay அஞ்சலோட்டத்தில் 44.13 செக்கனிலும் சாதனையுடன் கிண்ணமும் பெற்றுக்கொண்டனர் 
Relay Champion Mannar District.


 முழுமையா விபரங்களை விரைவில்......
 
மன்னார் கீரி சுற்றுலா கடற்கரை கல் ஆசனங்களும் மின்குமிழ்களும் உடைப்பு.....????


மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட கீரி கடற்கரை பகுதியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட 'கீரி சுற்றுலா கடற்கரை' வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களினால்  02-05-2017 அன்று செவ்வாய்க்கிழமை  காலை  வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

-முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை நிதியில் 3.51 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட குறித்த 'கீரி சுற்றுலா கடற்கரை' மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் தலைமையில் இவ்வாறு திறந்து வைக்கப்பட்டு இன்றுடன் 25நாட்கள் தான் ஆகின்றது.

 அதற்குள் கல்லாசனங்களும் மின்குமிழ்களும் உடைக்கப்பட்டுள்ளதானது. மிகவும் கேவலமான செயலாகும்  ஏன்  எனில் மன்னாரின் ஒவ்வொருவரும் மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தியின் பங்காளர்கள் தான் அக்கறையுள்ளவர்கள் தான் அப்படி இருக்க யார்....??? இப்படியான கேவலமான செயலில் ஈடுபடுகின்றார்கள்.
  • இவர்களின் நோக்கம் தான் என்ன...???
  • ஏன் இப்படி செய்கின்றார்கள்.....???
யாராக இருந்தாலும் அபிவிருத்தியின் முன்னேற்றத்தின் விரும்புபவர்களாக இருக்க வேண்டுமே தவிர இப்படியான செயல்கலிள் ஈடுபடவேண்டாம். இப்போதுதான் மன்னார் அபிவிருத்தியில் முன்னேறிக்கொண்டு இருக்கின்றது.
அதையும் ஒரு சிலரின் தவறான எண்ணத்தினால் பார்வையினால் இவ்வாறு நடைபெறுகின்றது.

யாராக இருந்தாலும் கொஞ்சம் சிந்தியுங்கள்.......
மன்னார் மண்ணின் வளர்ச்சிக்காக......

மன்னார் மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் தங்கும் விடுதிகள் திறந்துவைப்பு-(படம்)
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 21 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மன்னார் மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர் விடுதியும், தொழில் நுற்ப  உத்தியோகத்தர்களுக்கான தனிநபர் விடுதிகளுமாக மூன்று தங்கும் விடுதிகள் நேற்று வெள்ளிக்கிழமை(26) மதியம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இதன் போது அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் டி.சிவராஜலிங்கம் , வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் ஏ.நீக்கிலாப்பிள்ளை ,சிரேஸ்ட சட்டத்தரணி இ.கயஸ் பெல்டானோ , மோட்டார் போக்குவரத்து திணைக்கள மாகாண பணிப்பாளர் கே.பிரபாகர மூர்த்தி , வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர்கள், மன்னார் மாவட்ட நிறைவேற்றுப் பொறியியலாளர், மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சீரற்ற காலநிலை ; மக்களே அவதானம்..! 91 பேர் பலி , 110 பேர் காணவில்லை : மரணமானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்

நாட்டில் நிலவி வரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளதுடன் 110 பேர் வரையில் காணாமல்போயுள்ளதாகவும் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் இதுவரை 16 ஆயிரத்து 759 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 285 குடும்பங்களைச் சேர்ந்த 2042 பேர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.

இயற்கை அனர்த்தத்தில் 17 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 482 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

குறிப்பாக இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே மரணமானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மண்சரிவுகளில் சிக்கி காணாமல் போன நபர்களை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார், இராணுவத்தினர் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மன்னார் பொது மாயனத்திற்கு பின் பகுதியில் கொட்டப்படுகின்ற கழிவுப்பொருட்கள் எரியூட்டப்படுகின்றமையினால் அப்பகுதி மக்கள் தொடர் பாதிப்பு-படம்


மன்னார் நகர சபையினால் மன்னார் பகுதியில் சேகரிக்கப்படுகின்ற கழிவுப்பொருட்கள் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள மன்னார் பொது மாயனத்திற்கு பின் பகுதியில் கொட்டப்பட்டு எரியூட்டப்படுகின்றமையினால் அப்பகுதியில் உள்ள மக்கள் தொடர்ச்சியாக பாதீக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பொது மாயனத்திற்கு பின் பகுதியில் கொட்டப்பட்ட கழிவுப்பொருட்கள் இன்று(25) வியாழக்கிழமை காலை எறியூட்டப்பட்டமையினால் அப்பகுதி பாரிய புகை மண்டலமாக காணப்பட்டதோடு,அப்பகுதியில் உள்ள சுமார் 40 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல்வேறு அசெகரியங்களுக்கும் முகம் கொடுத்தனர்.

-இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை ஒன்று திறண்ட அப்பகுதி மக்கள் குப்பை எறியூட்டப்பட்ட இடத்திற்குச் சென்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிஸார் மற்றும் மன்னார் நகர சபை அதிகாரிகள் அந்த மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

-பின்னார் பௌஸர் மூலம் நீர் கொண்டுவரப்பட்டு தீ அனைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

-எனினும் தொடர்ச்சியாக பல வருடங்கள் குறித்த பகுதியில் குப்பை எறியூட்டப்படுவதாகவும்,இவ்விடை யம் தொடர்பில் மன்னார் நகர சபை உற்பட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் எவ்வித மாற்று வடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என அந்த மக்கள் விசனம் தெரிவித்தனர்.

-தொடர்ச்சியாக கழிவுப்பொருட்கள் எறியூட்டப்படுகின்றமையினால் இப்பகுதியில் வசிக்கின்ற குழந்தைகள்,வயோதிபர்கள்,கர்ப்பி னித்தாய்மார்கள் என அனைவரும் பாதீக்கப்படுவதாக அந்த மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் உள்ள மக்கள் சுவாச நோய் மற்றும் தோல் நோய்க்கும் உள்ளாகுவதாகவும் கவலை தெரிவித்தனர்.

மன்னார் நகர் பகுதியில் உள்ள கழிவுகளைத்தவிர வைத்தியசாலையில் உள்ள கழிவுப்பொருட்களும் கொட்டப்பட்டு எறியூட்டப்படுவதாகவும்,இதனால் இப்பகுதி மக்கள் சுவாசிப்பதற்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

தற்போது காற்றுக்காலம் என்பதினால் உயிரிழத்த உயிரினங்கள் கொண்டு வந்து குப்பைகளுடன் போடுவதினால் பாரிய துர்நாற்றம் ஏற்படுவதாகவும் அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

-எனவே எதிர் வரும் காலங்களில் இப்பகுதியில் குப்பைகளை கொட்டி எறியூட்டும் நடவடிக்கைகளை நிறுத்த மன்னார் நகர சபை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-இச்சம்பவம் தொடர்பாக மன்னார் நகர சபையின் செயலாளர் பிரிட்டோ லெம்பேட் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது,,,,

-மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பல்வேறு கிராமங்களில் மன்னார் நகர சபையினால் சேகரிக்கப்படுகின்ற கழிவுப்பொருட்கள் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் குப்பை கொட்டுவதற்கு என மன்னார் நகர சபைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பல வருடங்களாக கொட்டப்பட்டு எறியூட்டப்பட்டு வந்தது.

குப்பைகள் எரியூட்டுவதினால் அப்பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக ஏற்கனவே எங்களுடைய கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் குப்பை கொட்டப்படுகின்றது.ஆனால் எரியூட்டப்படுவதில்லை.

எனினும் இன்றைய தினம் கெட்டப்பட்டிருந்த குப்பைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் பாரிய அசௌகரியத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

குப்பைக்கு தீ வைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை  மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மாற்று இடம் வழங்கப்படும் வரை மன்னாரில் சேகரிக்கப்படுகின்ற கழிவு பொருட்கள் குறித்த இடத்திலேயே கொட்டப்படும்.ஆனால் எரியூட்டப்படாது   என அவர் மேலும் தெரிவித்தார்.

தாயின் பாசத்திற்காக ஏங்கித்தவித்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி- மன்னாரில் சம்பவம்-(ஆதாரம் இணைப்பு)

தாயின் பாசத்திற்காக ஏங்கித்தவித்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி- மன்னாரில் சம்பவம்-(ஆதாரம் இணைப்பு)

-பெற்றோர்களே இது உங்களின் மேலான கவனத்திற்கு...(25-05-2017)

தாயின் நீண்டகால பாசம் இன்றி தொடர்ச்சியாக வேதனைகளை சந்தித்து வந்த மாணவி ஒருவர் மன்னாரில் புகையிரதத்துக்கு முன்னாள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று(24) புதன் கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.

-கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி நேற்று(24) புதன் கிழமை பயணித்த புகையிரதத்தில் பாய்ந்து குறித்த மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

-உயிரிழந்த மாணவி மன்னாரில் உள்ள பிர பல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்கும் தயாளினி என அழைக்கப்படும் சண்முகலிங்கம் மிதுலா என தெரிய வந்தள்ளது.

சம்பவ தினம் அன்று தனது சொந்த இடமான முழங்காவில் பகுதிக்குச் சென்று விட்டு மீண்டும் மன்னார் உப்புக்களம் பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வாடகை வீட்டிற்குச் சென்ற போதே குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.
-குறித்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள போது தனது வேதனைகள் உள்ளடங்கிய கடிதம் ஒன்றை சுமார் 3 பக்கத்தில் எழுதிய நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

-குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,

முழங்காவில் பகுதிக்குச் சேர்ந்த தயாளினி என அழைக்கப்படும் சண்முகலிங்கம் மிதுலா என்ற மாணவி மன்னார் நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்று வருகின்றார்.

-சம்பவ தினமான புதன் கிழமை(24) குறித்த மாணவி முழங்காவிலில் உள்ள தனது கிராமத்தில் இருந்து உடைகள் அடங்கிய பை ஒன்றுடன் மன்னாரில் உள்ள தனது வாடகை வீட்டை பேரூந்தில் வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த மாணவி வங்காலை புகையிரத கடவையில் இருந்து மன்னார் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் கொழும்பில் இருந்து தலை மன்னார் நோக்கி நேற்று(24) புதன் கிழமை மாலை பயணித்த புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

-இதன் போது மாணவியான குறித்த யுவதி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

-குறித்த மாணவியில் உடலம் குறித்த புகையிரதத்திலேயே ஏற்றப்பட்டு மன்னார் சௌத்பார் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதோடு,குறித்த யுவதியின் உடமையும் சோதிக்கப்பட்டது.

-இதன் போது குறித்த யுவதி மணதை வேதனைக்கு உள்ளாக்குகின்ற வகையில் சுமார் 3 பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை தெரிய வருகின்றது.

குறித்த கடிதத்தில்,,,

-தனக்கு மட்டும் பல்வேறு சோதனைகளும் வேதனைகளும் ஏற்படுவதாகவும்,தனது தாய் தன்னை தனியாக தவிக்க விட்டுள்ளதாகவும்,அம்மா அம்மா என்று தான் வலிந்து சென்றுள்ள போதும் கல் நெஞ்சம் கொண்ட அம்மாவாக அவர் நடந்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

-மேலும் தனக்காக உள்ளவர்களுடன் சண்டையிட்டு தன்னை அவர்களிடம் இருந்து பிரிக்க நினைப்பதாகவும்,தொடர்ந்தும் தனக்கு துறோகம் செய்ய நினைபப்தாகவும் குறித்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

-எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும் தனது வாழ்க்கையில் சந்தோசம் இல்லை எனவும் இதன் காரணமாகவே குறித்த முடிவை எடுத்துளள்தாக தற்கொலை செய்து கொண்டுள்ள மாணவியின் உடமையில் இருந்து மீட்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-தற்போது குறித்த மாணவியின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படடைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வரகின்றனர்.

-குறித்த சம்பவம் மன்னார் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு தற்கொலை செய்து கொண்டுள்ள குறித்த மாணவியின் உடமையில் இருந்து மீட்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் தனது தாயின் பாசத்திற்காக ஏங்கித்தவித்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எழுதப்பட்டுள்ள விடையங்கள் பலரையும் வேதணைக்கு உள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் தட்சணாமருதமடு மகாவித்தியாலயத்தில் ஒரே நாளில் நான்கு திறப்பு விழாக்கள்....படங்கள் இணைப்பு


மன்னார் மாவட்ட மடு கல்வி வலயத்திற்குட்பட்ட தட்சணாமருதமடு மகாவித்தியாலயத்தில் 23-05-2017 செவ்வாய் காலை 11 மணியளவில் இடம்பெற்ற திறப்புவிழாவில் 04 வேறுபட்ட விடயங்கள் திறந்துவைக்கப்பட்டது.

 நிகழ்வில்.....
கெளரவ விருந்தினராக
 தட்சணாமருதமடு ஸ்ரீ முருகன் ஆலய குருக்கள் சிவஸ்ரீ பன்னீர்ச்செல்வம் சர்மா அவர்களும்,
பிரதம விருந்தினராக
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும்,
சிறப்பு விருந்தினர்களாக
மடு கல்வி வலய பணிப்பாளர் டி.ஜோன்குயின்டஸ் அவர்களும், மடு பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.றொகான் குருஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வை கல்லூரியின் அதிபர் ஜெராட் அல்மேடா அவர்கள் தலைமையேற்று நடத்தினார். இவ் நிகழ்வில் தட்சணாமருதமடு மகாவித்தியாலயத்தில் " அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ்" புனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியும், புதிதாக அமைக்கப்பட்ட நீர்த்தாங்கி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான துவிச்சக்கரவண்டி நிறுத்தகம் மற்றும் பாடசாலை பிரதான நுழைவாயில் வளைவு ஆகிய நான்கு பிரதான விடயங்கள் சுமார் 10.05 (பத்து தசம் ஐந்து) மில்லியன் செலவில் அமைக்கப்பட்டு அவை இன்று உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.


நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையில் பாடசாலைகளுக்கு பெளதீக வளங்களை நாம் நிறைவாக செய்து தரும்போது அதன் பலன் அல்லது வெளிப்பாடு மாணவர்களது கல்வியின் வெளிப்பாட்டிலேயே தங்கியிருக்கிறது என்றும், அவ்வாறு அவர்களை ஊக்கப்படுத்தும் நல்லதொரு ஆசிரியர்குழாமை இயக்குகின்ற அதிபரை தாம் பாராட்டுவதாகவும் அந்தவகையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சாதாரண தர பெறுபேறுகள் உயர்வுநிலையை அடைந்துள்ளமை சந்தோஷத்தை தருவதாகவும் தொடர்ந்து இதே வேகத்துடனும் விடா முயற்சியுடனும் மாணவர்சமூகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் அயராது உழைத்து மடு வலயத்தின் கல்வி நிலையை மென்மேலும் உயர்த்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதோடு.
அதிபரது வேண்டுகோளிற்கிணங்க இந்த பாடசாலையின் கேட்ப்போர்கூடத்திற்கான கதிரைத்தொகுதியை இந்த ஆண்டு எனது நிதி ஒதுக்கீட்டில் இருந்து பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதிவழங்கினார்.

நிகழ்வின் நிறைவில் பாடசாலையில் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் புதிய ஆசிரியர் விடுதியையும் அமைச்சர் மற்றும் குழுவினர் பார்வையிட்டனர்.
 


Photos