Slider

காணொளிகள்

மன்னார் செய்திகள்

விம்பம்

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

பல்சுவை

School events

கட்டுரைகள்

சினிமா

-

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயற்படும் கூட்டமைப்பு! தமிழர்களுக்கான அபிவிருத்திகள் தடைப்படுவதாக குற்றச்சாட்டு...


தமிழ் மக்களுக்கு கிடைக்கின்ற நல்லத்திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தட்டிக்கழிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

இன்றைய தினம் அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

எதிர்ப்பு மற்றும் இணக்க அரசியல் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாதவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இருக்கின்றனர்.

தமிழ் மக்களை பொருளாதார விருத்தியுடன் வாழவிடக்கூடாது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

தாம் மத்திய அரசாங்கத்துடன் இணக்க அரசியல் ஈடுபட்டிருந்த போது மகாவலி கங்கை மற்றும் களுகங்கையின் நீரை வடக்கிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை முன்னெடுத்திருந்தோம்.

அத்துடன், இரணைமடு குளத்தின் நீரை தேக்கி வைத்து விவசாயத்திற்கு வழங்குவதற்கும், மேலதிகமான நீரை யாழ்ப்பாணத்திற்கு குடி நீராக வழங்குவதற்கும் திட்டமிட்டிருந்தோம்.

எனினும், மாகாவலி நீரை வடக்கிற்கு கொண்டு வந்தால் அதனோடு இணைந்து சிங்கள மக்களும் வந்து விடுவார்கள் என தெரிவித்து அந்த திட்டத்திற்கு கூட்டமைப்பினர் தடை ஏற்படுத்தியிருந்தனர்.

இவ்வாறு அமையப்பெறுகின்ற நல்லத்திட்டங்களை இல்லாமல் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நாடகம் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு பயனற்றதாகவே அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்த்தேசத்தின் இருப்பிற்கு முதுகெலும்பாக இருப்பது கல்வியே! சிறீதரன்....


தமிழ்த்தேசத்தின் இருப்பிற்கு முதுகெலும்பாக இருப்பது கல்வியே என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இளைஞர் திறன்விருத்தி அமையத்தின் ஏற்பாட்டில் பச்சிலைப்பள்ளி பிரதேசசபை மணடபத்தில் இன்று நடைபெற்ற கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வில் பிரதமவிருந்தினராக கலந்துக் கொண்டபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

குறித்த நிகழ்வு, கனடா வாழ் தேவராஜ் குடும்பம், நிறோலேணர்ஸ் ஆகியோர்களினதும் இன்னும் சில சமூக ஆர்வலர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றுள்ளது.

இதன்போது தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,

பிள்ளைகளின் கல்வியிலே அதிக அக்கறை கொண்டு இந்த மண்ணிலே வாழ்கின்ற பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி நம்பிக்கையின் அடிப்படையில் இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்திருப்பது ஒரு பல்வேறுபட்ட பரிமாணங்களில் நல்லதொரு அத்தியாயமாக நான் கருதுகிறேன்.

உலகத்திலே எந்தவொரு நாடு அபிவிருத்தி அடையவேண்டுமானாலும் எந்த இனமும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதற்கும் கல்வி முக்கியமானது.

கல்லியைப்பெறமுடியாத சமூகம் இந்தப்பூமிப்பந்திலே சரியான அடையாளத்தைப்பெற முடியாது.

நூங்கள் நல்ல மனிதர்களாக எங்களுடைய தேசியத்தை நேசிப்பவர்களாக தமிழர்களாக இந்த மண்ணிலே வாழவேண்டும் என்றால் அதற்கு முதகெலம்பாக இருப்பது கல்வி அதை உணர்ந்தமையால்த்தான் புலம் பெயர் உறவுகளும் இங்குள்ள வசதிபடைத்தவர்களும் இவ்வாறான பணிகளைச் செய்கிறார்கள்.

இந்த நிகழ்வு இளைஞர்திறன் விருத்தி அமையத்தின் தலைவர் சுரேன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை, அரியரத்தினம், பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலாளர் ஜெயராணி, பச்சிலைப்பள்ளி பிரதேசவைத்திய அதிகாரி சுகந்தன், எனப்பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்: ஆசிய விளையாட்டு போட்டியிலிருந்து கிரிக்கெட் நீக்கம்


இந்தோனிசியாவில் 2018-ஆம் ஆண்டு நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியிலிருந்து கிரிக்கெட் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2018-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனிஷியாவில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தோனேசிய ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்காக போட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் 2018-ஆம் ஆண்டிற்கான ஆசியப்போட்டியில் 493 விளையாட்டுகள் இருந்தது, தற்போது 431 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதில் கிரிக்கெட், ஸ்கேட் போர்டிங், சர்பிங் போன்ற விளையாட்டுகளும் நீக்கப்பட்டுள்ளன. ஆசியப் போட்டிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் நிகழ்ச்சியின் செலவுகளை கணிசமாகக் குறைக்கும் என துறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

உலகில் ஓர் அதிசயம்....நிலங்களை பிரசவிக்கும் கடல்....


பல்வேறு காரணங்களினால் நிலங்கள் கடல் நீரினால் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. எனினும், அதற்கு நேர்மாறாக கடலில் இருந்து நிலங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

சுவிடன் மற்றும் பின்லாந்துக்கு இடைப்பட்ட பொத்னியா வளைகுடா பகுதியில் இந்த நிகழ்வு ஆண்டு தோறும் இடம்பெறுகின்றது. குறித்த பகுதியில் அதிகளவான தீவுகள் காணப்படுகின்றன.

இந்நிலையில், ஆண்டு தோறும் 10 மி.மீ அளவிலான நிலப்பகுதி கடலில் இருந்து வெளிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த செயற்பாட்டை அறிவியல் ரீதியில் "Rapid Glacio - Isostatic Uplift" என கூறுவார்கள்.


குறித்த பகுதில் இறுதியாக முடிந்த "பனி காலத்தின்" (ice age) போது பாரிய பனி மலை ஒன்று இருந்ததாக சொல்லப்படுகின்றது. எனினும். அதிக சுமை காரணமாக அந்த பனி மலை கடலுக்குள் மூழ்கிப் போனது.

காலப்போக்கில் அந்த பனி மலை உருகி பாரம் குறைந்த நிலையில், மூழ்கிய நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கடலை விட்டு வெளிவரத் தொடங்கியுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு ஒரு சதுர கிலோ மீற்றர் பரப்பளவான நிலம் வெளிவருகின்றது.

இது 150 கால்ப்பந்து மைதானத்திற்கு ஒப்பானது என சொல்லப்படுகின்றது. இதன் காரணமாக ஆண்டு தோறும் குறித்த பகுதியானது வரை படத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் படகு மூலம் பயணம் செய்த நிலையில் தற்போது கால்நடையாக பயணம் செய்கின்றனர்.

அத்துடன், கடலில் இருந்து வெளிவரும் நிலப்பகுதியானது சிறிது காலத்திலேயே புல் முளைத்து, பின்னர் செடி கொடிகள், மற்றும் மரங்களும் வளரத்தொடங்குகின்றன.


முன்னொரு காலத்தில் குறித்த பகுதி முழுவதும் பனி காலங்களில் உறைந்து காணப்பட்டதாகவும், காலப் போக்கில் பருவ நிலை மாற்றம் காரணமாகவும், அதிகரித்த கப்பல் போக்குவரத்து காரணமாகவும், கடல் உறைந்து போவது நின்று போய்விட்டது.

இதனையடுத்து தீவிற்கு தீவு அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் படகு மூலம் பயணம் மேற்கொண்டனர். எனினும், தற்போது நடந்தே பயணம் மேற்கொள்கின்றனர்.

காரணம் அந்த பகுதியில் புதிதாக தோன்றிய நிலப்பகுதி, தீவுகளை ஒன்றாக இணைந்து விட்டது. இந்த நிலை இப்படியே நீடித்தால் இன்னும் 2500 ஆண்டுகளில் கடல் நடுவே இயற்கை பாலமாக குறித்த தீவுகள் மாறிவிடும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இயேசு வாழ்ந்த வீடு கண்டுபிடிப்பு!!!


முதல் நூற்றாண்டில் மேரி மற்றும் ஜோசப்பின் மகன் யேசு கிறிஸ்து வாழ்ந்த வீட்டை பிரிட்டிஷ் தொல்பொருள் ஆய்வாளர்கள் வடக்கு இஸ்ரேலில் நாசரேத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

அங்கு ஒரு சர்ச் இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது. மேலும் அதற்கும் கீழே, சிறிய வீடு ஒன்று இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.யேசு அங்குதான் வளர்ந்து இருக்க வேண்டும் என இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்து குறித்து இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர் டாக்டர் கென் டார்க் கூறியதாவது:-

மேரி மற்றும் ஜோசப் நாசரேத்தில், வாழ்ந்ததை நம்புகிறேன். தூதர் கபிரியேல் மரியாளிடம் நீ தேவனுடைய குமாரனை பெறுவாய் என வெளிபடுத்தினார். அந்த குழந்தைக்கு யேசு என பெயரிட்டனர். யேசு சிறு வயதில் வாழ்ந்த இந்த வீடு நாசரேத்து சிஸ்டர் கான்வென்ட் சாலையை அடுத்து உள்ள சர்ச் அருகே கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கண்டு பிடிப்பின் மூலம் ஏசுகிறிஸ்து காலத்தின் பல அறிய உண்மைகள் வெளி வரும். நாகரீகம்,கலாச்சாரம்,வாழ்க்கை முறை அனைத்தும் உலகிற்கு தெரிய வரும் என்கிறார்கள்.

முருங்கனில் மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி- 2017 விபரங்கள்(Photos)

முருங்கன் பொதுசன சேவை விளையாட்டு கழகத்தினால் AKR & SONS அனுசரணையுடன் மன்னார் மாவட்ட உதைப்பத்தாட்ட லீக்கின் ஆதரவுடன் நடாத்தப்படும் மன்னார் மாவட்ட கழகங்கள் கலந்து கொள்ளும் அணிக்கு 9 பேர் கொண்ட மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 21,22,23 - April- 2017 அன்று நடைபெறவுள்ளது 

பிரித்தானியாவில் அமுலுக்கு வருகிறது புதிய சட்டம்


பிரித்தானிய நாட்டில் குறிப்பிட்ட வேகத்தை கடந்து வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் சாலை விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, வரையறுக்கப்பட்ட வேகத்தை தாண்டி வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது போக்குவரத்து அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து கடந்தாண்டு அரசு நடத்திய ஆலோசனைக்கு பிறகு அதிவேகமாக வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களுக்கு 1,000 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

எனினும், இந்த விதிமுறைகளை வாகன ஓட்டுனர்கள் மீறுவதால் அபராத தொகையை அதிகரிக்க அரசு பரிசீலனை செய்து வந்துள்ளது.

இந்நிலையில், நீதிமன்றத்தின் ஒப்புதலின் அடிப்படையில் தற்போது அதிவேகமாக வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை தற்போது இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், அரசு வரையறை செய்துள்ள வேகத்தை தாண்டி வாகனங்கள் ஓட்டும் ஒவ்வொரு ஓட்டுனர்களுக்கும் 2,500 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படும்.

இந்த புதிய போக்குவரத்து விதிமுறையானது எதிர்வரும் ஏப்ரல் 24-ம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மடு வலயத்தின் 2016ம் ஆண்டிற்கான க.பொ.த சாதரண தரப்பரிட்சை முடிவுகள் ஒரேபார்வையில்....

மடு வலையத்தின் 2016ம் ஆண்டிற்கான க.பொ.த சாதரண தரப்பரிட்சை முடிவுகள் ஒரேபார்வையில்....

மடுவலையத்தின் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட முதல் பத்து மாணவமாணவர்கள்.....

பாடசாலைகள்                                           மாணவர்கள் பெயர்       பெறுபேறுகள்
  • மன்.ஆண்டாண்குளம்.றோ.க.த.க பா       S.K. சைனிக்கா              7A.B.C
  • மன்.ஆண்டாண்குளம்.றோ.க.த.க பா      T.C.தேனுஜன்                 6A.B,C
  • மன்.ஆண்டாண்குளம்.றோ.க.த.க பா       S.B.J.றொஜாந்தன்         5A.3B S
  • மன்.ஆண்டாண்குளம்.றோ.க.த.க பா      M.ஜதுசா                          5A.3B.S
  • மன்.கருங்கண்டல்.றோ.க.த.க.வி             L.மரியம்                          5A.2B.C
  • மன்.அடம்பன் ம,வி                                          A.அரவிந்தன்                5A.B.2C.S
  • மன்.வட்டக்கண்டல் அ.த.க.பா                     N.அஸ்கா                      6A.2B.C
  • மன்.வட்டக்கண்டல் அ.த.க.பா                    A.றீடஸ் சந்துரு         7A.B.C
  • மன்.தச்சனாமருதமடு அ.த.க.பா                 M.சிவனேஸ்வரி       6A.2C
  • மன்.கட்டையடம்பன்.றோ.க.த.பா              I.பரியந்தி                     5A.2B.2C
 Qualified AL - 2016                   
              

No. SchoolName              N-Applied   N-Sat   Qualified-AL  Qua-AL (%) "Qua AL -3c2s  Qua-AL %
1   ADAMPAN M.M.V        63              63          17                   26.98%             34               53.97%
2   PERIYAMADHU M.V.    19             18            6                    33.33%              7               38.89%
3   ANDANKULAM R.C.T.M.S.34      33          14                   42.42%             19               57.58%
4   ILLUPPAIKADAVAI M.V.    26        25          6                    24.00%             10                40.00% 
5   KARUNKANDAL R.C.T.M.V.22    21          11                    52.38%             19                 90.48%
6  PARAPPANKANDAL R.C.T.M.S.8         8    1                      12.50%              5                  62.50%
7    VADDAKANDAL G.T.M.S.    38       38   12                         31.58%            17                  44.74%
8    THUYAJOSEPH VAZ M.V.    18    16           7                         43.75%          11                   68.75%
9    THEVENPIDDY R.C.T.M.S.    24    23        6                          26.09%            9                   39.13%
Manthai West Division - Sub Total        252    245    80                     32.65%          131                 53.47%
10    KAKKAIYANKULAM MUS M.V.    16    15    3                  20.00%               6                 40.00%
11    PERIYAKUNCHUKULAM R.C.T.M.S.    17    17    7             41.18%             9                 52.94%
12    SINNAVALAYANKADDU G.T.M.S.    8    8    1                     12.50%               1               12.50%
13    SINNAPANDIVIRICHCHAN G.T.M.S.    7    7    3                 42.86%              4               57.14%
14    PERIYAPANDIVIRICHCHAN M.V.    16    16    12                  75.00%           14               87.50%
15    THADCHANAMARUTHAMADHU MV    21    20    7             35.00%           12               60.00%
16    KADDAIYADAMPAN R.C.T.M.S.    26    24    6                       25.00%           12              50.00%
Madhu Division - Sub Total        111    107    39                                    36.45%           58              54.21%
Madhu Zone Total        363    352    119                                                33.81%         189             53.69%

சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மாணவமாணவிகளையும் கற்பித்த ஆசிரியர்கள் அதிபர்கள் பெற்றோர்கள் பாடசாலைச்சமூகம் அனைவரையும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.
தகவல்-மடு கல்வி வலயம்
தொகுப்பு-வை.கஜேந்திரன்-தமிழ் - சிங்கள மீனவர்கள் கொக்கிளாயில் முறுகல்நிலை,,,,


முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் சிங்கள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் நேற்றுக் காலை முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டது. முகத்துவாரம் பகுதியை அண்டிய கடலில் மீன்பிடிப்பதற்கான கரைவலைப்பாடு தொடர்பிலான அளவீட்டின் போதே, இந்த அமைதியின்மை ஏற்பட்டது.

கடந்தகாலங்களில் நடைபெற்ற யுத்தத்தினால் கொக்கிளாய் பகுதியில் பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவந்த தமிழ் மீனவர்கள் இடம்பெயர்நத நிலையில், தமிழர்களின் கரைவலைப்பாடுகளை நீர்கொழும்பு, சிலாபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்துவந்த சிங்கள மீனவர்கள், ஆக்கிரமித்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் இப்பகுதியில் அடிக்கடி இருதரப்பினருக்குமிடையில் முறுகல் நிலைமை தோன்றுவது வழக்கம். மீள்குடியேற்றத்தின் பின்னர் தமக்கான கரைவலைப்பாடு உரிமையைப் பெற்றுத் தருமாறு கோரி, தமிழ் மீனவர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் மட்டத்தில் தீர்வுகள் வழங்கப்படாத நிலையில், இதுதொடர்பான விடயம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டிருந்தது.

இதன்படி முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய கரைவலைப்பாட்டை அளவிடும் பணிகள் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த அளவீட்டுப் பணிகளின் போது, கரைத்துறைப்பற்று பிரதேச செயலக காணி பகுதி அதிகாரிகள், முல் லைத்தீவு நீரியல்வளத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் கொழும்பில் இருந்து வந்த நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள், நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்போது, கொழும்பில் இருந்து வந்த நீரியவளத் திணைக்கள அதிகாரிகள், சிங்கள மீனவர்களின் ஆக் கிரமிப்பில் உள்ள முகத்துவாரம் அமைந்துள்ள தலைப்பாடு என்ற பகுதியில் இருந்து 300 மீற்றருக்கு அப்பால் இருந்தே அளவீட் டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்து அளவீட்டு பணிகளை மேற்கொண் டிருந்தனர்.

இதன் காரணமாக அளவீடு இடம்பெறும் பகுதியில் கடமைக்காக பிரசன்னமாகியிருந்த கரைதுறைப்பற்று காணிப்பகுதி அதிகாரிகள் கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் பக்கச்சார்பான வகையில் முகத்துவாரம் அமைந்துள்ள தலைப்பாடு பகுதியை விட்டு அதிலிருந்து 300 மீற்றருக்கு அப்பால் அளவீட்டை ஆரம்பிக்கும் செயற்பாடானது நீதிமன்றின் உத்தரவுக்கு முரணானது என தெரிவித்து வெளிநடப்பு செய்திருந்தனர்.

இந்நிலையில், தமது வசமுள்ள தலைப்பாடு என்ற பகுதியில் இருந்து கரைவலைப் பாட்டுக்கான அளவீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு சிங்கள மீனவர்கள் தமது எதிர்ப்பை தொடர்ந்தும் வெளியிட்டனர். எனினும், தமிழ் மீனவர்கள் தலைப்பாடு என்ற பகுதியில் இருந்தே அளவீடு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

பின்னர் இரு தரப்பினரையும் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளையும் வைத்து பொலிஸாரின் துணையுடன் அளவீட்டுப் பணிகள் இடம்பெற்றது. இருப்பினும் இந்த அளவீட்டுப் பணிகள் தமக்கு திருப்தி அளிக்கவில்லை என தெரிவிக்கும் மீனவர்கள் இதனை நீதிமன்றில் தெரிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இயேசுநாதரை ஒப்பிட்டுப் பேசவில்லை முதலமைச்சர் தன்னிலை விளக்கம்...


இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் சுவாமி பிரேமானந்தரின் வாழ்க்கையையும் எவ்விதத்திலும் தான் ஒப்பிட்டுப் பேசவில்லை எனத் தெரிவித்துள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், இவ்விடயம் தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்துக்களில் அரசியல் கலந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண முதலமைச்சரால் நேற்றையதினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தன்னிலை விளக்க அறிக்கையி லேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் முதலமைச்சர் குறிப்பிடுகையில்,

நான் தினப்புயல் என்ற பத்திரிகைக்குக் கொடுத்த செவ்வி சம்பந்தமாகச் சில தவறான கருத்துக்கள் எழுந்துள்ளன. நான் இயேசு கிறிஸ்து நாதரை அவமதிக்கும் விதத்தில் கருத்துக்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.

முதலில் இணையத் தளத்தில் வந்த செய்தியை யாரும் பார்த்தார்களானால் அதில் வரும் கடைசி சட்டம் (frame) மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவரும். செவ்வி எடுத்தவர் முதல் சட்டங்களில் பேசியவாறு கடைசி சட்டத்தில் பேசவில்லை. அவர் தெளிவாகப் பேச முடியாதவர். மிகவும் பதிவானகுரலில்த் தான் முன்னைய சட்டங்களில் கேள்விகேட்டு வந்தார். என்னிடம் கடைசிசட்டத்தின் நிகழ்வின் போதும் அவ்வாறேபேசினார். ஆனால் வெளிவந்த இணையத்தளச் சட்டத்தில் அவர் மிகத் தெளிவாகப் பேசியுள்ளார். என் முன்னிலையில் அவர் அவ்வாறு பேசவில்லை.

அத்துடன் அவர் கேட்டதாக ஒளிபரப்பாகியிருக்கும் கேள்விக்குநான் தந்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கும் என் பதில்கள் வேண்டுமென்றே ஒலியைக் குறையவைத்து நேயர்களுக்குக் கேட்காதவகையில் தரப்பட்டிருக்கின்றன. அவரின் கேள்விமட்டும் மிகத் தெளிவாகத் தரப்பட்டுள்ளன. சிறுபிள்ளைத்தனம் என்று அவர் கூறியதாகஎனக்கு ஞாபகமில்லை. எது எவ்வாறு இருப்பினும் நடந்தது இதுதான்.

செவ்விஎடுத்தவர், குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவரை நீங்கள் எப்படி உங்கள் குருவாகஏற்கலாம். நீங்கள் ஒரு நீதியரசர் தற்போது முதலமைச்சர். இது தவறான தல்லவா என்று கேட்டார். அதற்குநான் குற்றவாளி எனக் காணப்பட்டு சிலுவையில் அறைந்த ஒருவரை 2000 வருடமாக மக்கள் தெய்வமாகக் கொண்டாடுகின்றார்கள் அல்லவா என்றேன்.

அதைத்தான் இயேசுவையும் பிரேமானந்த சுவாமியையும் முதலமைச்சர் ஒப்பிட்டு விட்டார் என்றுசிலர் கூறிஎனக் கெதிராக கிறீஸ்தவ சகோதரர்களை ஏற்றிவிடஎத் தனித்துள்ளார்கள்.
இயேசுகிறிஸ்து நாதரின் பரம அபிமானி காலஞ்சென்ற பிரேமானந்த சுவாமி. பல பேச்சுக்களில் இயேசுநாதரின் வாழ்க்கையில் இருந்துமேற்கோள்களை எடுத்துரைப்பார்.

அன்னைவேளாங்கன்னியைப் போய் தரிசித்து வாருங்கள் என்று எனக்கும் என் குடும்பத்தாருக்கும் அறிவுரை வழங்கியவரே அவர்தான். இன்று பல்லாயிரக்கணக்கான மேலை நாட்டுகிறிஸ்தவ அன்பர்கள் அவ ரின் அபிமானிகளாகஉள்ளார்கள்.

அதுபோக 1958ம் ஆண்டிலேயே நான் றோயல் கல்லூரியில் சமயஒப்பீட்டுபரிசு (Comparative Religion) பெற்றவன். பைபிளில் இருந்து Gospel according to St.Mathew என்பதே கிறீஸ்தவம் சம்பந்த மானபாடம். இதேபோல் இஸ்லாம், பௌத்தம் இந்துமதம் போன்றஎல்லா மதங்களிலிருந்தும் பாடவிதானம் தரப்பட்டுஅவற்றில்முதல் இடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படையிலேயே பரிசுபெற்றவன்.

அன்று தொடக்கம் இன்று வரைஎல்லாமதங்களையும் அனுசரித்துப் போற்றிவருபவன். கிறீஸ்தவ நிறு வனங்களுடன் சம்பந்தப்பட்டவன். இயேசு கிறீஸ்துவை இறை தூதனாக ஏற்றுப் பணிந்துவருபவன். வருடாவருடம் St.Antony Feast காலத்தில் சென்று வணங்கி வருபவன். நான் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் சுவாமி பிரேமாநந்தரின் வாழ்க்கையும் எந்தவிதத்திலும் ஒப்பிட்டுபேசவில்லை.

குற்றவாளியொரு வரை எவ்வாறு குருவாக ஏற்கலாம் என்பதற்கு யேசு கிறீஸ்துவை உதாரணமாகக் கூறி னேன். இயேசுநாதரின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் வேறு, சுவாமியின் மீது சுமத்தப்பட்டகுற்றங்கள் வேறு, எவ்வாறு அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்று பலதைப்பற்றியும் பலர் எழுதியுள்ளார்கள்.

இருவரையும் ஒப்பிடமுனைந்தவர்கள் அவர்களே. நான் என்னிடம் கேட்டகேள்விக்கு ஒரு முன்னு தாரணம் கூறினேன் அவ்வளவுதான். அது கிறீஸ்தவ மக்களின் மனங்களை உண்மையில் புண்படுத்திவிட்டதென்றால் அதற்காக நான் மனவருத்தம் அடைகின்றேன். ஆனால் மனவருத்தம் அடையவேண்டியவிதத்தில் எதுவும் சொல்லப்படவில்லை என்பதே என் வாதம். இதில் அரசியல் கலந்திருப்பதாகவே நான் உணர்கின்றேன் என முதலமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.Popular Posts-Last 30 days