பரிதி வட்டம் எறிதல் போட்டியில் தமிழ் மாணவன் ஆனந்த் சாதனை
எம்பிலிப்பிட்டி மகாவலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவரும் றிட்ஸ்பறி சேர் ஜோன் டார்பர்ட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த பாலச்சந்திரன் ஆனந்த் 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார்.
இவர் பரிதியை 37.33 மீற்றர் தூரம் எறிந்து புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியைச் சேர்ந்த எம். எச். எஸ். டி திசோரா 2008இல் நிலைநாட்டிய 29.17 மீற்றர் என்ற சாதனையையே ஆனந்த் முறியடித்துள்ளார். இதேவேளை இப் பாடசாலையைச் சேர்ந்த முரளி அபிராம் 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதல் போட்டியில் 36.56 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து திறமானப் பெறுதியைக் கடந்துள்ளார். இப் போட்டிக்கான திறமானப் பெறுதி தூரம் 28.50 மீற்றர்களாகும்.
பரிதி வட்டம் எறிதல் போட்டியில் தமிழ் மாணவன் ஆனந்த் சாதனை
Reviewed by NEWMANNAR
on
November 04, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 04, 2014
Rating:


No comments:
Post a Comment