ஹோமாகம பிரதேசத்தில் நீர் வெறுப்பு நோயால் 15 மான்கள் உயிரிழந்தன
இதன்போதே உயிரிழந்த மான்களுக்கு நீர்வெறுப்பு நோய் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் பொது சுகாதார மிருக வைத்திய சேவை பணிப்பாளர் வைத்தியர் எல்.டி. கித்சிறி தெரிவித்துள்ளார்.
கடந்த 13 மற்றும் 14ஆம் திகதிகளில் ஹோமாகம பிரதேசத்தில் 15 மான்கள் உயிரிழந்ததாகவும் இதனையடுத்தே இரண்டு மான்களின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஹோமாகம பிரதேசத்தில் நீர்வெறுப்பு நோய் இருப்பது உறுதியாகியுள்ளதால் அந்தப் பிரதேசம் மற்றும் கொழும்பிலுள்ள நாய்களுக்கு ஊசி மருந்து ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் எல்.டி. கித்சிறி கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹோமாகம பிரதேசத்தில் நீர் வெறுப்பு நோயால் 15 மான்கள் உயிரிழந்தன
Reviewed by Author
on
August 18, 2022
Rating:

No comments:
Post a Comment