அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சாந்திபுரத்தில் இடி மின்னல் தாக்கம்

 மன்னார் சாந்திபுரம் கிராமத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தினால் 5 வீடுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், 5 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன், கூரையின் பகுதிகள் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்துள்ளன.


மேலும், வீடுகளிலிருந்த மின்சார உபகரணங்களும் செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் குறித்த குடும்பங்களின் வீடுகள் மற்றும் உடைமைகளுக்குப் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.


இச்சம்பவத்தைத் தொடர்ந்து அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் சாந்திபுரம் கிராம சேவை உத்தியோகத்தர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட வீடுகளைப் பார்வையிட்டுள்ளனர்.


நள்ளிரவில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தினால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சேத விபரங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.












மன்னார் சாந்திபுரத்தில் இடி மின்னல் தாக்கம் Reviewed by Vijithan on October 26, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.