தள்ளாடி இராணுவ முகாமில் இருந்தே தாக்குதலை வழிநடத்தினார் றிசாத் பதியுதீன் – ‘லங்கா நியூஸ்வெப்‘

மன்னார் நீதிவான் நீதிமன்றம் மீதான தாக்குதலை தள்ளாடி இராணுவ முகாமில் இருந்தே சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீன் வழிநடத்தியதாக ‘லங்கா நியூஸ் வெப்‘ தகவல் வெளியிட்டுள்ளது.
மன்னார் விடத்தல்தீவில் உள்ள தமிழ் மீனவர்களின் வீடுகள் மீது கடந்த 16ம் நாள் கற்களை வீசியதான குற்றச்சாட்டில், றிசாத் பதியதீனின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 17ம் நாள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
விடத்தல்தீவில் உள்ள வீடு ஒன்றின் உரிமை தொடர்பாக எழுந்த பிரச்சினையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து கவனிக்க தான் உடனடியாக மன்னாருக்கு செல்ல வேண்டும் என்று றிசாத் பதியுதீன், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் உலங்குவானூர்தி ஒன்றைக் கோரியிருந்தார்.
சிறிலங்கா பாதுகாப்புச் செயலரின் உத்தரவை அடுத்து றிசாத் பதியுதீன் உலங்குவானூர்தி ஒன்றில் தள்ளாடி இராணுவ முகாமுக்கு சென்றார்.
அப்போது மன்னார் நீதிமன்றத்துக்கு வெளியே சுமார் 1000 முஸ்லிம்கள் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் மன்னார் நீதிமன்றத்துக்குள் நுழைவதைத் தடுக்க சிறிலங்கா காவல்துறையினர் தடைகளை ஏற்படுத்த முயன்றனர்.
நீதிமன்றத்துக்கு வெளியே அவர்கள் எதிர்ப்பில் ஈடுபட அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
மன்னார் நீதிமன்றத்தின் மீது கற்கள் வீசப்பட்டபோது அதை சிறிலங்கா காவல்துறையினர் தடுக்க முனையவில்லை.
அதற்குக் காரணம், மன்னார் காவல்நிலைய தலைமையக ஆய்வாளரான துசார தளுவத்த, றிசாத் பதியுதீனின் ஆதரவாளர்கள் மூலம் கண்டிக்கு மீன்களை அனுப்பி வியாபாரம் செய்து வந்ததேயாகும்.
றிசாத் பதியுதீனின் ஆதரவாளர்கள் நீதிமன்றம் மீதும் சிறிலங்கா காவல்துறையினர் மீதும் கற்களை வீசிய போதும், ஆய்வாளர் தளுவத்தவும் காயமடைந்தார்.
இதையடுத்து அவர்கள் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்தச் சம்பவம் இடம்பெற்ற போது தாம் மன்னாரில் இருக்கவில்லை என்று சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறியுள்ளார்.
தான் அரசியலுக்கு வந்த பின்னர் ஒருபோதும் மன்னார் நீதிமன்றத்துக்கே சென்றதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உப்புக்குளம் செல்வதற்காக தாம் உலங்குவானூர்தி மூலம் பிற்பகல் 3.30 மணியளவிலேயே தள்ளாடி இராணுவ முகாமில் தரையிறங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தள்ளாடி இராணுவ முகாமில் இருந்தே தாக்குதலை வழிநடத்தினார் றிசாத் பதியுதீன் – ‘லங்கா நியூஸ்வெப்‘
Reviewed by NEWMANNAR
on
July 22, 2012
Rating:

3 comments:
நீதியும் சட்டமும் ஆ(ர்ப்பா)ட்டத்தை யூடியூபில்
ஆண்டிக்கும் அரசனுக்கும் ஒன்றே.தமிழ் பேசும் இரு குளுக் களிடையில் மோதலை தவிர்க்க தமிழ் பேசும், நம் ஒவ்வொரு வருக்கும் கடப்பாடு உண்டு.அதேபோல் றிஷாட் அவர்களுக் கும் நம்மைவிட பன்மடங்கு உண்டு.நீதி மன்றத்திற்க்கு கல்
எறிந்தவர்கள் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணை பூர்த்தி
ஆகும் முன்பே சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி
விட்டனர்.சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கை மேலிட
த்தில் பெற்றிருந்தால் மக்கள் மத்தியில் கெளரவப்படுத்தப்
பட்டிருப்பீர்கள்.உங்களின் ஆ(ர்ப்பா)ட்டத்தை யூடியூபில் பாருங்கள்.இனமதபேதமற்ற அமைச்சர் றிஷாட் போன்றோர்
ஒவ்வொரு தொகுதியிலும் தேவை.மக்கள் சேவையில்
தோல்வி காணாத வன்னி மைந்தன்.வன்னி மக்கள் நன்மை
கருதி தடை கல்லாக வரும் எதுவும் அவருக்கு மிதிகல்.
http://www.newmannar.com/2012/07/video.html#more இப்படிக்கு
நீதித்துறை அச்சறுத்தும் அளவுக்குக் எவ்வளவு கேவலமான அரசியல்வாதி தன் என்பதை அவரே நீரூபித்து விட்டார். வன்னி எம் பி எல்லாம் வன்னி மைந்தன் ஆக முடியாது விளங்கிக்கொள்ளவும். தேர்தல் நேரம் போரினால் எல்லாத்தையும் இழந்து வந்த மக்களை மிரட்டியே குறிப்பாக எனக்கும் அரசுக்கும் ஆதரவா வாக்களித்தால் மட்டுமே உங்கள் பிள்ளைகளை சிறையில் இருந்து விடுவிப்போம் என்று மிரட்டியவன். இவர் ஒரு இனவாதியே. நீதிபதியையே மிரட்டுபவர் அரசாதிகாரிகளை எப்படியெல்லாம் மிரட்டுவார் தெரியுமா..
றிசாட்டை இனபேதமற்றவன் என்று சொன்னவன் ஒரு மடையன். றிசாட் ஒரு முஸ்லீம் வெறியன். இவன் மன்னாரில் தமிழ் மக்களை ஓரம் கட்டிவிட்டு முஸ்லீம்களையே முதன்மைப்படுத்துகிறான். தகுதியுள்ள தமிழ் அதிகாரிகளை புறந்தள்ளி தகுதியற்றவர்களாயினும் முஸ்லீம் ஆக இருந்தால் பதவிகளில் நியமிக்கின்றான்.மன்னாரில் சகல திணைக்களங்களிலும் உள்ள தமிழ் அதிகாரிகளையும் நீக்கிவிட்டு முஸ்லீம்களையே நியமிக்கின்றான்.
Post a Comment