Slider

காணொளிகள்

மன்னார் செய்திகள்

விம்பம்

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

பல்சுவை

School events

மருத்துவம்

புகைப்படத்தளம்

கட்டுரைகள்

சினிமா

-

விம்பம் இப்பகுதியில் மன்னாரின் பெருமை தேசிய விருது பெற்ற M.A.M.சன்ஹர்......

 கலைஞனின் அகம் கணனியில் முகம் இப்பகுதியில் விம்பம் ஊடாக நம்மோடு பேசவருகின்றார். சிற்பி கைப்பணி ஆசிரியர் கைப்பணியில் தேசிய விருது பெற்ற எம்.ஏ.எம்.சன்ஹர் அவர்களின் அகத்தில் இருந்து.
தங்களை பற்றி-நான் மூர்வீதி உப்புக்குளத்தில் எனது மனைவி சஹாப்தீன் பாத்திமா பாயிஸா குடும்பத்தினருடன் வசித்து வருகின்றேன் மன்.அல் அஷ்ஹர் தேசிய பாடசாலையின் பழைய மாணவன்.

முதல் முறையே தேசிய விருது கிடைக்கும் போது மனநிலை எப்படி இருந்தது….
தேசிய விருது பெறவேண்டும் என்று ஆசை இருந்தாலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை ஆனால் எதிர்பாராமல் கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சியே அதை வார்த்தைகளால் சொல்லி விடமுடியாது. இந்த தேசிய விருதின் மூலம் இன்னும் என்னை முழுமையாக போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறனும் என்ற புதிய ஆர்வமும் ஆவலும் ஏற்பட்டுள்ளது.

சிற்பி கொண்டு கைப்பணி செய்யும் எண்ணம் எவ்வாறு உருவானது….
நான் ஆரம்பம் முதலே காதலர் தினம் பிறந்த நாள் தந்தையர் தினம் ஆசிரியர் தினம் போன்ற விசேட தினங்களுக்கு பரிசாக கொடுக்கின்ற நினைவுச்சின்னங்களை செய்து கடைகளுக்கும் ஓடர்க்கும் கொடுப்பது வழக்கம் அப்படியான தருணத்தில் தான் ஒரு முறை எனது பிள்ளைகள் விதவிதமான சிற்பிகளை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தார்கள் அதைப்பார்த்ததும் எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது அந்த எண்ணம் தான் நான் எதிர்பாராத விதமான நல்ல உருவங்கள் வந்தது அப்படியே செய்து எனது வீட்டில் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.

எப்படி போட்டிகளில் கலந்து கொள்ள முடிந்தது….
இவ்வாறு எனது படைப்பாற்றலை செய்து கொண்டு இருக்கும் தருணத்தில்தான் ஒரு முறை கச்சேரியில் அருங்கலைகள் பேரவையின் பணிபுரியும் திருமகள் அவர்களின் வழிகாட்டலில் சிற்பிகைப்பணி தொடர்பான அனைத்து விடையங்களையும் போட்டிகளில் கலந்து கொள்ளும் விதம் என்பனவற்றை தெளிவு படுத்தி என்னை போட்டிகளில் கலந்து கொள்ள செய்தார் அவரின் வழிகாட்டல் தான் எனது வெற்றிக்கான முதல் படியாக இருக்கின்றது.

உங்களுடைய சிற்பி வேலைப்பாட்டிற்கும் நினைவுச்சின்னங்கள் செய்வதற்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன….. 
நினைவுச்சின்னங்கள் செய்யும் போது அது சிறிய வருமானத்தினை எனக்கு தந்தாலும் அது குறிப்பிட்ட சீசனுக்ககு மட்டும் தான் ஆனால் இந்த சிற்பி கைப்பணியானது பெரிதாக வருமானம் என்றில்லை அதிக நேரம் செலவிடவேண்டியுள்ளது இருந்தாலும் சமுதாயத்தில் என்னை அடையாளப்படுத்தி உயர்த்தியுள்ளது அதனால் நினைவுச்சின்னங்கள் செய்வதை குறைத்துக்கொண்டு தற்போது நான் சிற்பிகைப்பணியில் அதிக நேரத்தினை செலவிடுகின்றேன் இது எனக்கு சமுதாயத்தில் அடையாளமும் தேசிய அங்கீகாரமும் அதனால் கௌரவமுமாய் உள்ளது மகிழ்ச்சி.

உங்களது துறையில் அடுத்த கட்டம் என்றால்…
எனது துறையில் நிறைய திட்டங்கள் உள்ளது அதற்கு என்னிடம் வசதியும் பொருளாதாரமும் இல்லை அதனால் எனது திறமையை வெளிக்கொணரமுடிய வில்லை எனது இல்லத்திற்கு அருகில் விடுதிகள் உள்ளது அங்கு தங்கும் சில வெளிநாட்டுக்காரர்கள் என்னிடம் வந்து எனது கைப்பணிப்பொருட்களை பார்வையிட்டு அவற்றினை வாங்குவதற்கு தயங்குகின்றார்கள் ஏன் என்றால் அவற்றினை தங்களுடைய நாட்டிற்கு கொண்டு செல்ல முடியாது காரணம் இந்த கைப்பணிப்பொருட்களை கொண்டு செல்வதற்கான பைக்கிங் பார்சல் வசதிகள் இல்லை அதே வேளை இயந்திரத்தின் மூலம் தரமான
cutting fitting modaling போன்றவற்றினை செய்ய முடியாது உள்ளது.எனக்கு பொருளாதார வசதி அமையுமானால் எனது திறமையின் வெளிப்பாடான சிற்பி கைப்பணிப்பொருட்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதே எனது இலக்காகும்.

தங்களது இவ்வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் எனும் போது…
முதன் முதலில் எனது சஹாப்தீன் பாத்திமா பாயிஸா மனைவியைத்தான் சொல்ல வேண்டும் ஏன் என்றால் சிற்பிகைப்பணியில் நான் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது என்னை தொந்தரவு செய்வதில்லை அத்தோடு எனது மனைவியும் கடந்த வருடம் வடமாகாண ரீதியில் கைப்பணிக்காக சிறப்பு விருதினை பெற்றுள்ளார் அதனால் இருவரது கலையார்வமும ஒன்றாக இருப்பதினால் பிரச்சினை இல்லை அத்தோடு மன்னார் மாவட்டத்தின் கைப்பணிக்கு பொறுப்பான திருவாளர் மரியநாயகம் அவர்களும் அருங்கலைகள் பேரவை திருமகள் அவர்களும் எனது சகோதரன் திரு.நளர் அத்தோடு எனது நண்பர்கள் அயலவர்கள் அனைவரையும் நினைவில் கொள்கின்றேன்.

ஒரு உருவத்தினை செய்து கொள்வதற்கு எத்தனை மணித்தியாளங்கள் எடுக்கும்….
ஒரு உருவத்தினை செய்வதற்கு முன்பு அந்த உருவம் செய்வதற்கான அனைத்துப்பொருட்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்புதான நாம் செய்து கொள்ளப்போகும் உருவத்தினை கற்பனையில் எண்ணிக்கொண்டு வேலையில் இறங்க வேண்டியதுதான் குறைந்தது ஒரு உருவத்தினை செய்து முடிக்க 3-4 மணித்தியாளங்கள் தேவைப்படும். முதல் தடவை ஒரு உருவத்தினை உருவாக்க தேவைப்படுகின்ற நேரம் அதே உருவத்தினை மீண்டும் செய்வதற்கு குறைவாகத்தான் தேவைப்படும்.

கைப்பணி ஆசிரியராக தெரிவாகியுள்ளீர்கள் இப்பயிற்சியை எத்தனை மாதத்திற்குள் முடிக்கலாம் எனக்கருதுகின்றீர்கள்
ஒருவருடக்கற்கை நெறியாகத்தான் பாடம் உள்ளது அவர்களின் பாடவரைபின்படி 06மாதம் பயிற்சியும் செயல்முறையுமாக அமைகின்றது.
சிற்பி சேகரிப்பு
சிற்பி துப்பரவு மற்றும் பாதுகாப்பு
அத்தோடு 1நாளைக்கு குறைந்தது 2-3 உருவங்கள் செய்து கொடுக்கவேண்டும் பயிற்சியளிக்கவேண்டும்
நான் இதுவரை சுமார் 60 உருவங்கள் வரை செய்து வைத்துள்ளேன். ஏன்னைப்பொறுத்தமட்டில் ஆர்வமானவர்கள் என்றால் குறைந்தது 03 மாதங்கள் போதுமானது அதேவேளை அதற்கு தேவையான பொருட்களை தேடிப்பெற்றுக்கொள்வது அவர்களின் கைகளில் உள்ளது.

நீங்கள் இதுவரை செய்த உருவத்தில் கடினமான உருவம் என்றால் எதைக்கூறுவிர்கள்…..
காட்டுக்கோழி உருவம் ஒன்றை செய்வதற்காக அதுவும் கடந்த வருடம் நடைபெற்ற 2016ம் ஆண்டிற்கான தேசியப்போட்டிக்காக காட்டக்கோழி உருவத்தினை செய்வதற்காக பெரும் சிரமப்பட்டேன் போட்டி விதி உருவம் முற்றுமுழுதாக சிற்பியால் செய்யப்படவேண்டும் என்பதே அதற்காக மன்னாரி;ல் உள்ள அனைத்து கடலுக்கும் சென்று தேடினேன் நான் தேடிய கோழிக்கான இறகு கறுப்பு சிற்பி கிடைக்கவில்லை மிகவும் குழப்பத்தில் இருந்த போது தான் வேறு தேவைக்காக அருவியாறு சென்ற போது அங்கு நான் தேடிய கறுப்பு சிற்பியை கண்டு எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

 அந்தக்காட்டுக்கோழி உருவத்தினை முழுமையாக செய்து விடலாம் போட்டிக்கு அனுப்பலாம் என்று அவ்வாறே போட்டிக்கு காட்டுக்கோழி உருவத்தினை செய்து கொண்டு போகும் போது ஏற்பட்ட சிறுவெடிப்பு காரணமாக போட்டியில் இருந்து காட்டுக்கோழி உருவம் நீக்கப்பட்டது கவலையாக இருந்தாலும் எனது இன்னொரு உருவம் தான் தேசிய அளவில் தேர்வாகியது. மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..

தாங்கள் பெற்ற விருதுகள் பற்றி---
பெரிதாக விருதுகள் பெறவில்லை இருந்தாலும் பெற்ற விருதுகள் பெருமையானவை


 • Provincial Industrial Exhibition 1st place Pair of Dove Seasells-2016
 • Presidiential Handicrafts Awards "Shilpa Abimani-2016"-(Sea Sells Related)

கலைஞர்களை கண்டுகொள்வதில்லை என்பது பற்றி….
உண்மைதான் மன்னார் மாவட்டத்தினைப்பொறுத்தமட்டில் என்னை மட்டுமல்ல என்னைப்போன்ற கலைஞர்களை யாரும் கண்டு கொள்வதில்லை கௌரவப்படுத்துவதும் இல்லை இது எங்களைப்போன்றவர்களுக்கு மிகவும் கவலையான விடையம் தான் ஏன் இவ்வாறு செய்கின்றார்கள் என்று தெரியவில்லை எனக்கு இப்போது 42 வயதாகிவிட்டது.
தேசிய ரீதியில் எனக்கு முதலிடம் கிடைத்தது அதற்கான கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்கள் அங்கு சென்றிருந்தேன் அங்கு நான் நிற்கையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது இதே விடையம் எனது ஊரில் எனது மன்னார் மண்ணில் எமது மக்களுக்கு முன்னால் செய்திருந்தால் அந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகும் அத்தோடு 2016ம் ஆண்டு சிற்பி கைப்பணிக்கான 1ம் 2ம் இடங்களும் பன்னவேலைக்கான இடங்களும் கிடைத்துள்ளது ஆனால் இதுவரை மன்னார் மண்ணில் நாங்கள் கௌரவிக்கப்படவில்லை மனவேதனைக்குரியதே…மனதில் கொள்வார்களா சம்மந்தப்பட்ட அதிகாரிகள்.

தங்களுக்கு மறக்கமுடியாத விடையம் என்றால்…

கடந்த வருடம் 2016ம் ஆண்டு சிற்பிகைப்பணிப்போட்டியில் வடமாகாணத்தில் எனது படைப்பு முதலாம் இடத்தினைப்பெற்றுள்ளது. அதற்கான சான்றிதழ் வைபவம் வவுனியாவில் நடைபெற்றது நானும் எனது தந்தை சகோதரர்கள் சென்றிருந்தோம் ஒவ்வொரு துறையிலும் முதலிடங்கள் 2ம் 3ம் இடங்களைப்பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கியவர்கள் எனக்கும் என்னைப்போன்றவர்களுக்கு சான்றிதழ்கள் கிடைக்கப்பெறாதவர்கள் வந்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்படுகின்றது. எனக்கு பொறுப்பாய் வந்த மரியநாயகம் சேர் அவர்கள் நேரடியாக மேடைக்கு சென்று முரண்பட்ட பின்புதான் என்னையும் இன்னும் சிலரையும் பெயர் செல்லி அழைத்தார்கள் அந்த விடையம் எனக்கு மிகவும் மனவருத்தத்தினையும் கவலையினையும் தந்தது. ஏன் இவ்வாறு செய்கின்றார்கள் மன்னார் மாவட்டம் என்பதற்காகவா…?

மன்னார் மக்களின் பிரதிநிதியாக மன்னார் மாவட்டத்தின் செயல்பாட்டினை உடனுக்குடன் வெளிக்கொணரும் நியூமன்னார் இணையம் பற்றி…
உண்மையில் மகத்தானசேவை ஏன் என்றால் எமது மன்னார் மண்ணில் நல்ல வளமான கலைஞர்கள் இலைமறை காயாக உள்ளார்கள் அவர்களை இனம்கண்டு வெளிக்கொணரும் அரிய பணியை செய்கின்றீர்கள் அவ்வாறே என்னையும் நான் தேசிய ரீதியில் சில்பா கைப்பணி விருது-2016 பெற்றுள்ளேன் இந்த விடையம் எனது குடு;ம்பத்திற்கும் எனது ஊரில் சிலருக்கும் தான் தெரியும் தாங்கள் வீடு தேடிவந்து என்னை பேட்டி கண்டு நியூமன்னார் இணையத்தின் மூலம் வெளிக்கொணர்வதால் மன்னார் மாவட்டம் போல எல்லமாவட்டங்களுக்கும் இடங்களுக்கும் தெரியப்போகின்றது எனது திறமையும் மன்னார் மாவட்டத்தின் பெருமையும் வெளிக்கொணர்வதற்கும் நானும் எனது குடும்பம் சார்பாகவும் கலைஞர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்ளுகின்றேன் தொடரட்டும் உங்கள் பணி இடைவிடாது சேவை இம்மன்னாருக்கு தேவை….

நியூமன்னார் இணையத்திற்காக-வை.கஜேந்திரன்
மன்னார் இணையத்தின் விம்பம் பகுதியில்.... இளம் வீராங்கனை செல்வி மேரி ஜான்சி…..

முடியும் என்றால் முயற்சி செய்.....;
முடியவில்லையேல் பயிற்சி செய்......தாரகமந்திர
த்தோடு
ஓட்டத்தில் மாவட்டத்திலும் மாகாணத்திலும் புதிய சாதனைகள் படைத்து தேசிய அளவில் 04ம் இடத்தினையும் பிடித்துள்ள இளம் வீராங்கனை செல்வி மேரி ஜான்சி…..

தங்களைப்பற்றி- எனது பெயர் மேரி ஜான்சி சொந்த இடம் ஒல்லித்தாழ்வு அடம்பன் நான் எனது கல்வியினை அடம்பன் மத்திய மகாவித்தியாலயத்தில் சாதாரண தரம் கல்வி கற்று வருகின்றேன். எனது தந்தை அந்தோனிப்பிள்ளை மகிந்தன் அம்மா ம.எலன்றொக்ஸ் மேரி சகோதர சகோதரிகளுடன் மாந்தை மேற்கு அடம்பன் கிராமத்தில் வசித்து வருகின்றோம்.

முதன் முதலில் எப்போது---
 எமது பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டியில் 10ம் தரத்தில் பயிலும் போது 2015ம் ஆண்டு மரதன் ஓட்டப்போட்டியில் தான் ஓடினேன் முதலிடமும் பிடித்தேன.


உங்களிடம் ஓடும் திறமை இருக்கிறது என்று கண்டபிடித்தவர் யார்

எனது அப்பா தான் நான் எதிர்பார்க்கவே இல்லை என்னால் ஓட முடியும் என்று அப்படி இருந்தும் ஓடினேன் முதலாமிடம் கிடைத்தது அதன் தொடர்ச்சியாக பல போட்டிகளில் கலந்து வெற்றி பெறவில்லை அதனால் கழகங்களுக்காக ஓட ஆரம்பித்தேன். அதில் எனது திறமைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்தது.

பயிற்சியினை எவ்வாறு பெற்றுக்கொள்கின்றீர்கள்---
பயிற்சி எனும் போது எனது தந்தையைத்தான் சொல்வேன் எனது தந்தை கடற்தொழில் செய்பவர் அதிகாலை 05 மணிக்கு தொழிலக்கு செல்லபவர் எனது பயிற்சிக்காக அதிகாலை 04 மணிக்கெல்லாம் என்னுடன் பயிற்சிக்கு வருவார.; பெரும்பாலும் வீதிகளில் தான் பயிற்சி எடுப்பேன் தன்னை வருத்தி தந்தையும் என்னோடு கூட ஓடுவார் தனக்குத் தெரிந்த படி பயிற்சி கொடுப்பார். கிறவுண்டில் குறைந்தது 10-20  றவுண் ஓடுவேன் அந்தப்பயிற்சியோடு தான் மாவட்டம் மாகாணம் தேசியளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டு அதிக 1ம் 2ம் இடங்களையும்; 3ம் இடங்களைப்பெற்றுக்கொண்டுள்ளேன்.

ஓட்த்தில் உங்களின் பங்கு---
400-800-1500-5000-10000 நான் ஓடுவேன் பலபதக்கங்களும் சான்றிதழ்களும் பெற்றுள்ளேன் மாகாணமட்டத்தில் புதிய சாதனைகளும் நிலை நாட்டியுள்ளேன்.

தேசியளவில் சாதனை என்பது பற்றி---
400-800-1500-5000-10000 ஓட்டப்பந்தையங்கள் ஓடியுள்ளேன் சாதித்துள்ளேன் தேசிய அளவில் 04ம் இடத்தினைப்பெற்றுள்ளேன் என்னால் சாதிக்க முடியும்  ஆனால் அதற்கான வளம் தான் இல்லை ஒழுங்;கான பயிற்சியாளர் இல்லை முறையான பயிற்சி இல்லை பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் இல்லை
Running Shoeரூபா-35000 நல்ல மைதானம் இல்லை இதனால் தான் எனது சாதனைப்பயணம் மெதுவாக நகர்கின்றது. இதுவரை எனக்கு எந்த விதமான உதவிகளோ… சிறந்த பயிற்சிகளோ… கிடைக்கவில்லை அவ்வாறான பயிற்சிகள் கிடைத்தால் என்னால் சர்வதேச அளவில் சாதிக்க முடியும் என்பது உண்மை .

எனது தந்தையின் பயிற்சியில்தான் நான் இவ்வளவு முன்னேறியுள்ளேன் ஆனால் எனது தந்தை தரும் பயிற்சி சிறந்தது தான் இருந்தாலும் சர்வதேச அளவில் சாதிக்க வேண்டுமானால் சில நுணுக்கமான பயிற்சிகள் செயல் முறைகள் பயிற்சி பெறவேண்டும் அல்லவா எனது தந்தை தனக்கு தெரிந்த வற்றை கற்றுத்தருவதோடு அதையே தொடர்ச்சியாக செய்யமுடியாது ஏன் என்றால் எனது குடும்பம் மிகவும் பொருளாதாரத்தில் பிரச்சினையாகவுள்ள குடும்பம் எனது தந்தை கடற்தொழிலுக்குப்போனால் தான் எமது அன்றாட வாழ்வு போகும் அப்படியிருக்கும் போது எவ்வாறு தந்தையால் எனக்கு தொடர்சிசயான பயிச்சியை தரமுடியும் என்னால் தான் என்ன செய்ய முடியும்.

தங்களது பயிற்சிக்கு தேவையானவை---
எனது பயிற்சிக்கு சிறந்த 400மீட்டர் பரப்புடைய மைதானம் தேவை அத்தோடு திறமையான பயிற்றுனர் பாதணிகள் தேவையாகவுள்ளது இதுவரை எனக்கு எதுவுமே முழுமையாக கிடைக்கவில்லை என்ன செய்வது.

உங்களுக்கு ஆதரவு தருகின்றார்களா---
ஐயோ… அதுதான் இல்லை நான் பெரிய மைதனத்தில் ஏனைய வீரர்களுடன் ஓடிக்கொண்டு இருக்கும் போதும் முதலாம் இடத்தினை பெறுகின்றபோதும் ஒரே ஒரு கையோசைதான் கேட்கும் அது எனது தந்தையின் குரலும் கைதட்டலும் தான் அந்த மைதானத்தில் எனக்காக கைதட்டக்கூட யாரும் இருப்பதில்லை எப்படியிருக்கும் சிந்தித்துப்பாருங்கள்….அவ்வாறான தருணங்களில் தந்தையின் ஆறுதலும் ஏனைய வீராங்கனைகளின் வாழ்த்தும் எனக்கு சந்தோசத்தினைத்தரும் ஆனாலும் எனது மன்னார் மாவட்ட மக்கள் என்னை வாழ்த்துவது போல வருமா… யாரும் கண்டுகொள்வதே இல்லை…

வெளிமாவட்டங்களுக்கு செல்லும் போது உங்களின் பயணங்கள் பற்றி---
நானும் ஏனைய வீராங்கனைகள் பயிற்சி ஆசிரியர்கள் தான் செல்வோம் வீராங்கனைகளுக்கு தனியாக இடம் ஒதுக்கி கொடுப்பார்கள் ஆனாலும் அங்கு நான் 5000மீட்டர் 10000மீட்டர் ஓட்டம் ஓடுவதற்கு நானே என்னை தயார்படுத்திக்கொண்டு ஓடுவேன் ஓடி மிகுந்த களைப்புடன் வரும் போது எமக்கு தண்ணீர் தரக்கூட யாரும் இருக்கமாட்டார்கள் மயக்கத்துடன் இருந்துவிட்டு நானாகவே எழுந்து கொள்வேன் ஆனால் ஏனையமாவட்டங்களில் இருந்து வீராங்கனைகளோடு மேலதிகமாக உதவிக்காக சகவீராங்கனைகள் அல்லது பெண் ஆசிரியர்களை அழைத்து வருவார்கள் அதுமட்டுமல்ல கைதட்டி உற்சாகப்படத்துவதற்கே ஒரு குழு வரும் எமது மன்னார் மாவட்டத்தில் தான் இவ்வாறான எந்த விடையமும் இல்லை கவலைக்குரியது தான்….

தேசிய ரீதியில் 04ம் இடத்தினைப்பெற்றுள்ளீர்கள் உங்களது பயிற்றுநர்கள் பற்றி---
எனது பயிற்றுநர்கள் எனக்கு முழுமையாக பயிற்சியளிப்பது குறைவாகவுள்ளது அவர்களுக்கு என்ன பிரச்சினையோ அவர்களை குறை சொல்லவில்லை ஆனால் எனக்கு பயிற்சி முழுமையாக கிடைக்கவில்லை என்பதை உணருகின்றேன். திறமையான பயிற்சி எனக்கு கிடைக்குமானால் தேசியரீதியில் 01ம் இடத்தினைப்பிடிப்பேன் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

தங்களின் மகளுக்கு பயிற்சியளிப்பது பற்றி தந்தையிடம்---
எனது மகளுக்கு பயிற்சி என்பது விளையாட்டு அதிகாரிகளான அஸ்கர் மற்றும் சைமன் வழங்குகின்றார்கள் அதுதிருப்திகரமாக இல்லை ஏன் என்றால் போட்டிகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்தான் சொல்வார்கள் போட்டிக்கு தயாராகும் படி இரண்டு நாட்களில் தயாராகி ஒருபோதும் முதலாம் இடத்தினைப்பெறமுடியாது.

 சாதாரணமாக கோட்டத்தில் ஓடுவதென்றாலே 01மாதம் பயிற்சி எடுக்கவேண்டும் அதே மாவட்டத்திற்கு என்றால் அந்த 01மாதமும் கடும் பயிற்சி எடுக்கவேண்டும் அதுபோல தேசிய ரீதியில் முதல் நிலையினைப்பெறுவது என்றால் எனக்கு தெரிந்த வரையில் குறைந்தது 3-6மாதங்கள் கடும் பயிற்சி எடுக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் போது தற்போது உள்ள விளையாட்டு அதிகாரிகள் வெறும் இரண்டு நாட்களில் பயிற்சிக்கு தயாராகச்சொல்வார்கள் அதுவும் சில மணித்தியாளங்கள் தான் ஆனால் எனது மகளுக்கு நான் எனக்கு தெரிந்த வகையில் அதிகாலை 04மணிக்கு கரடுமுரடான பாதையிலும் வீதியிலும் தினமும் பயிற்சியளித்து வருகின்றேன் அதனால் எனது மகள் எந்த நேரத்திலும் தயார் நிலையில் தான் இருக்கின்றாள் அப்படியாக இருக்கும் மகளை இவர்கள் இரண்டு நாளில் தயாராக இருக்கச்சொல்லிவிட்டு எந்தப்பயிற்சியும் முறையாக வழங்காமல் அவள் முதல் நிலையினை பெறும் போது தமது பெயர்களை போட்டுக்கொள்கின்றார்களே தவிர நல்ல திறமையாக பயிற்சி அளிக்கமுன்வருவதில்லை என்பது மனவேதனையளிக்கின்றது
எனது மகளுக்கு தரமான பயிற்சி கிடைக்குமானால் தேசியத்தில் முதலாம் இடமும் பெறுவாள் சர்வதேசத்திற்கும் செல்வாள் எனக்கு நம்பிக்கையுண்டு.

உங்கள் மகள் மீது உள்ள நம்பிக்கையானது---
எனது மகளில் எனக்கு முழுமையாக நம்பிக்கையுள்ளது நான் முதலில் அவளிடம் கோட்டமட்டத்தில்1500-5000-10000 மீட்டர் ஓட்ங்களில் முதல் இடத்தினை பெறவேண்டும் என்று சொல்லித்தான் பயிற்சியளித்தேன். அதுபோல் முதல் இடங்களைப்பபெற்றாள் அதுபோல மாவட்ட மட்டத்திலும் முதல் இடங்களைப்பெற்றால் தற்போது எனதும் எனது மகளினதும் இலக்கு தேசியரீதியில் முதல் இடங்களைப்பெறவேண்டும் என்பதே அதுவும் எனது மகளாள் சாதிக்கமுடியும் எனக்கு நம்பிக்கையுள்ளது அவளிடம் அதற்கான பயிற்சியும் முயற்சியும் உள்ளது நிச்சயம் சாதிப்பாள்…

தங்களது மகளின் எதிர்காலம் பற்றி---
தற்போது கல்விகற்றுக்கொண்டு இருக்கின்றாள் அந்தக்கல்வியைத்தொடர்ந்து அவள் விரும்புவது போலவே விளையாட்டு அதிகாரியாக உருவாக்குவதோடு தற்போது கழகங்களுக்காக விளையாடியும் வருகின்றாள் இருந்தாலும் எமது மக்களும் கழகமும் எனது மகளுக்கு முழுமையான ஆதரவு பாராட்டு என்பதினை வழங்குவதில்லை அதனால் எனக்கு பின் எனது மகளின் விளையாட்டுத்திறனை மேம்படுத்துகின்ற திறமையை வெளிக்கொணர்கின்ற ஆதரவுதருகின்ற நல்ல கழகத்தில் இணைத்து திறமையான விளையாட்டு வீராங்கனையாக விளையாட்டு அதிகாரியாக உருவாக்கி மன்னார் மாவட்டத்திற்கு சேவைசெய்யவைப்பதே எனது ஆசையாகும்.

தற்போது விளையாட்டுத்துறையில் உள்ள பிரச்சினை என்றால்---
நிறைய பிரச்சினைகள் உள்ளது திறமையானவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை திறமையிருந்தும் ஏதாவது செல்வாக்கு இருக்க வேண்டும். அதேவேளை மொழிப்பிரச்சினையாகவும் மதப்பிரச்சினையும் அதிகாரிகளுக்கிடையே புரிந்துணர்வு இன்மையும் பெரும் இடைஞ்சலாக உள்ளது அத்துடன் கருத்து முரண்பாடு இவைகளாள் விளையாட்டு இன்று விளையாட்டுப்பொருளாகியுள்ளது. தரமானவீராங்கனைகளை இழந்து வருகின்றது இன்றைய விளையாட்டுதுறை என்பது மகவும் கவலைக்குரிய விடையம்தான்….

தாங்கள் இதுவரை பெற்றுக்கொண்ட பதக்;கங்களும் விருதுகளும்….

Provincel Department Of  Education -North Province School Sports Competition-2016

 • 1st place -1500M 5.09.1sec (New Record)Achiement
 • Colour Award 1500M 5.09.1sec
 • 2nd Place 800M -2.36.9sec
 • 2nd place Marathan Race-1.40.38sec

National Youth Sports Festival-2015(Divisinal Event)

 • Young Star 400M 3rd Place
 • New Star 10000M-1st Place
 • New Star 5000M-1st Place
 • New Star 1500M-1st Place
 • New Star  800M- 3rd Place
 • New Star  5000M-1st Place
 • New Star  1500M-1st Place

Ministery Of Education Cultural Affairs Sports-Xlii-2015

 • Athletic-10000M-1st place -57.02.10sec
 • Athletic-15000M- 1st place -5.21.8sec
 • Athletic-10000M- 1st place -49.33.5sec
 • Athletic-5000M-2nd place -21.07.9sec
 • Athletic-10000M- 1st place -43.50.5sec
 • Road walking-6th place 1.15.05.5sec
Ministry Of Education Cultrual Affairs Sports-2015

 • Athletic-800M 1st place -26-07-2015
 • Athletic-5000M-1st place -26-07-2015
 • All Island School Games-2016
 • Half Marathan Ferformance-1.34.44 25-09-2016
 • Excellent Ferformance Colour Night Half Marathan-Athletic-1500M-21-12-2016
Mn.Adampan.MMV Annual Inter House-2016

 • 1500M 1st place
 • 800M   1st place
 • 400M 1st place
 • Long jump 1st place

Mn.Adampan.MMV Annual Inter House-2015

 • 400M  Under15 1stplace
 • Catechetical Examination Certificate-2015
 • St.Joseph’s Catechetical Certificate-2015
 • St.Joseph’s Catechetical Certificate-2013
 • St.Joseph’s Catechetical Certificate-2012
 • St.Joseph’s Catechetical Certificate-2016
 • St.Joseph’s Catechetical Certificate-2014
 • The way to bible society annual essay  competion-24-07-2015
 • We are to vincentian’s 1st&2nd may 2015(Seth Sarana Traning center-madape)
 • மன்.அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தின் நினைவுச்சின்னம்.
இவற்றுடன் இன்னும் சில சான்றிதழ்கள் எனது கைக்கு கிடைக்கவில்லை

வெளிமாவட்டங்களில் ஓடும் போது மனநிலை என்ன---
வெளிமாவட்டங்களில் ஓடும் போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும் ஆனால் எனது தந்தை என்னுடன் இருக்கிறார் என்ற தைரியம் மட்டும்தான் அத்தோடு வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வீரவீராங்கனைகள் எடுக்கும் பயிற்சி ஓடும் முறைகள் வித்தியாசமாய் இருக்கும் எனக்கு அது புதுவகையாகத்தான் தெரிகின்றது. ஏனெனில் எனக்கு எனது தந்தையே பெரும்பாலும் பயிற்சியாளராக இருக்கின்றார் அவர் தனக்கு தெரிந்த பயிற்சிகளை மட்டும் தான் சொல்லித்தருவார் தற்போது உள்ள நுணுக்கங்கள் ஓட்டவிதிகள் மாறி மாறி பயிற்சி எடுக்க வேண்டும் இருந்தாலும் களத்தில் இறங்கிவிட்டால் ஒரே சிந்தனை முதல் நிலையை அடைய வேண்டும் என்பதே அவ்வாறே பல போட்டிகளில் முதல் நிலையினை பெற்றுள்ளேன். இன்னும் பெறுவேன்.
கல்வியில் அடுத்த கட்ட நிலை என்ன---
நன்கு கற்று சிறந்த விளையாட்டுத்துறை அதிகாரியாக வரவேண்டும் என்பதே

உங்களது தாரகமந்திரம் ஏதும்---
இருக்கின்றது…

முடியும் என்றால் முயற்சி செய்
முடியவில்லையேல் பயிற்சி செய்
முடியும் என்ற மனதோடு முயற்சியுடன் செயற்பட்டு எமது இலக்கை அடையவேண்டும் அதுவரை விழிப்புடன் செயற்படவேண்டும் என்பதே

ஒரு வீராங்கனைக்கு இருக்க வேண்டிய தகுதியெனும் போது---
சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் எல்லாவற்றிலும் விட ஒருநிலையான மனமும் திடமான நம்பிக்கையும் முழுமையான பயிற்சியும் இருக்க வேண்டும்.

மன்னார் மக்களின் பிரதிநிதியாக இருந்து செயலாற்றும் நியூமன்னார் இணையம் பற்றி----
உண்மையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்னையும் எனது திறமையினையும் எனது எதிர்கால இலக்கினையும் வெளியில் கொண்டுவந்து இருக்கின்றீர்கள் ஒருசிலருக்கு மட்டும் தெரிந்த நான் இன்று முதல் பலருக்கு தெரிகின்றேன் என்றால் அந்த நல்ல காரியத்தினை செய்திருக்கின்ற நியூமன்னார் நிர்வாகி அவர்களுக்கும் வீட்டிற்கே வந்து கலந்துரையாடி செவ்வி கண்ட வை.கஜேந்திரனாகிய உங்களுக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் என்னைப்போல் இன்னும் இவ்வுலகுக்கு தெரியாமல் இருக்கின்ற அத்தனை கலைஞர்கள் திறமையானவர்கள் வெளிக்கொண்டுவர உங்களது சேவை தொடர வேண்டும். இறைவன் துணைபுரிவாராக…

தந்தையவர்கள்--- கோட்டம் மாவட்டம் மாகாணம் தேசியம் என்று சாதிக்கும் எனது மகளை இதுவரை யாரும் கண்டு கொள்ளவில்லை அப்படியிருந்தும் எமது பிரதேசசெயலாளர் திரு.ஸ்ரீஸ்கந்தக்குமார் அவர்ளினதும் கட்டுப்பாட்டுத்தலைவர் சந்தான் ஐயா அவர்களின் மூலம் அறிந்து நேரில் வந்து செவ்வி கண்டு முதல்தடவையாக வெளியுலகிற்கு கொண்டுவருகின்றீர்கள் உண்மையில் உங்களது சேவையை நான் மனதாரப்பாராட்டுகின்றேன் வரவேற்கின்றேன் எனது மகளைப்போல இன்னும் பலர் எமது மன்னார் மாவட்டத்தில் உள்ளார்கள் அவர்களையும் வெளிக்கொணர்ந்தால் எமது மன்னார் மாவட்டம் விளையாட்டுத்துசையில் இன்னும் பாரிய சாதனைகளைப்படைக்கும் என்பது உண்மை உங்களது சேவை எங்களுக்கும் எமது மன்னாருக்கும் தேவை மீண்டும் மீண்டும் பாராட்டுகின்றேன்
சந்திப்பும் சிந்திப்பும்-வை-கஜேந்திரன்
நியூமன்னார் இணையத்திற்காக........Photos