Slider

காணொளிகள்

மன்னார் செய்திகள்

விம்பம்

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

பல்சுவை

School events

மருத்துவம்

புகைப்படத்தளம்

கட்டுரைகள்

சினிமா

-

மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலை இல்லா பட்டதாரிகளின் போராட்டத்தில் குதிப்பு-(படங்கள் )

மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றிணைந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னாரில் கனவயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.

மன்னார் மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் குறித்த கவனவயீர்ப்பு பேரணி இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமான குறித்த பேரணி பிரதான வீதியூடாக சென்று மன்னார் மாவட்டச் செயலகத்தை னெ;றடைந்தது.

-இதன் போது பேரணியில் கலந்து நூற்றிற்கும் மேற்பட்ட கொண்ட பட்டதாரிகள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு பேரணியில் கலந்து கொண்டனர்.

-பின்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடிய பட்டதாரிகள் பல்வேறு கோரிக்கைகளை கோசங்கலாக வெளிப்படுத்தினர்.

-பட்டதாரிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

-பின்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் பட்டதாரிகள் கதமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோருக்கும் மகஜர் கையளிக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் 350 ற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பட்டப்படிப்பை நிறைவு செய்த நிலையில் வேலைவாய்ப்பு இல்லாம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வில்பத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் முசலி மக்களுக்கு பாரிய பாதிப்பு-இரத்துச் செய்யுமாறு அமைச்சர் றிஸாட் பதியுதீன் ஜனாதிபதியிடம் அவசரக் கோரிக்கை.

வில்பத்துத் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல், முசலிப் பிரதேச மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் அதனை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

-இவ்விடையம் தொடர்பாக ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

-குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,

கால் நூற்றாண்டு கால அகதி வாழ்வில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து விட்டு, மீண்டும் கஸ்டங்களின் மத்தியிலே தமது பூர்வீகக் காணிகளில் குடியேறியிருக்கும் முசலிப் பிரதேச மக்களுக்கு புதிய வர்த்தமானி அறிவித்தலால் அவர்களது சுயாதீனமான இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த மக்களுக்குச் சொந்தமான விவசாயக் காணிகளும், மேய்ச்சல் தரை நிலங்களும், குடியிருப்புக்காணிகளில் ஒரு பகுதியும் பாதுகாக்கப்பட்ட வனத்துக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளமை பிழையானது.

கடந்த அரசாங்கத்தின் இனவாத நடவடிக்கையினாலேயே தங்களின் தலைமையிலான புதிய அரசாங்கத்தை கொண்டுவருவதற்கு முஸ்லிம்கள் முழுப்பங்களிப்பையும் நல்கினர்..

ஆட்சி மாற்றத்தை வேண்டி தங்களது உயிரையும் துச்சமென மதித்து எதையுமே பொருட்படுத்தாது முன்னின்று உழைத்த இந்த முஸ்லிம் சமூகத்தை இனவாதிகள் தொடர்ந்தும் கொடுமைப்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது.

முஸ்லிம் சமூகத்தை காடழிக்கும் சமூகமாகக் காட்டி இனவாதிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பிழையான நடவடிக்கைகளுக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் அரசாங்கத்தின் இந்த வர்த்தமானிப் பிரகடனத்தை நாம் பார்க்கின்றோம். அதுவும் தாங்கள் ரஷ்யாவில் இருக்கும் போது இந்த வர்த்தமானிப் பிரகடனம் வெளியிடப்பட்டமை எமக்குக் கவலை தருகின்றது.

வில்பத்து இயற்கை சரணாலயத்தில் ஓர் அங்குல நிலத்தையேனும் அபகரிக்காத முஸ்லிம் சமூகத்தின் மீது அபாண்டமான பழிகளை சுமத்தி வரும் இனவாதிகளுக்கு புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் தீனி கிடைத்துள்ளது என்பதையும் தங்களின் மேலான கவனத்தில் கொள்ள வேண்டும்.என அமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதே வேளை புதிய வர்த்தமானி அறிவித்தலால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் தெரிவித்த அமைச்சர் றிஸாட் பதிளுதீன் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்து வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்ய உதவ வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

- மன்னார் நிருபர்-
(28-03-2017)

மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள படையினர் மக்களுக்கு பதில் கூறாமல் வருடக்கணக்கில் நில பிரச்சினையை இழுத்தடிக்க முடியாது-சுரேஸ் பிரேமச்சந்திரன்.படம்

மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள படையினர் மக்களுக்கு பதில் கூறாமல் வருடக்கணக்கில் மக்களின் நில பிரச்சினையை இழுத்தடிக்க முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது பூர்வீக நிலங்களை கடற்படையினரிடம் இருந்து மீட்பதற்காக முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை 6 ஆவது நாளாகவும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.

குறித்த மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் முள்ளிக்குளம் பகுதிக்கு இன்று செவ்வாய்க்கிழமை நேரில் சென்று போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார்.

இதன் போது ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான சி. பாஸ்கரா, மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ்,நானாட்டான் பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் றீகன் ஆகியோர் சென்றிருந்தனர்.

இதன் போது மக்களுடன் கலந்துரையாடும் போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களில் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டும்.அதற்கு எங்களினால் முடிந்த முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றோம்.

மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள படையினர் மக்களுக்கு பதில் கூறாமல் வருடக்கணக்கில் மக்களின் நில பிரச்சினையை இழுத்தடிக்க முடியாது.

-மக்களின் தொடர் போராட்டங்களின் மத்தியிலே கேப்பாப்புலவு பகுதியில் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றது.
மக்கள் தமது நிலங்களை மீட்க போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

அந்த வகையிலே முள்ளிக்குளம் மக்கள் தமது காணிகள் விடுவிக்கப்படும் வரை போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
காணிகளை விடுவிப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம் என அவர் தெரிவித்தார்.

தமது நிலங்களை மீட்க முள்ளிக்குளம் மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை 6 ஆவது நாளாகவும் தொடர்ந்து செல்கின்றது.

மக்கள் கூடாரங்களை அமைத்து அவ்விடத்திலேயே உணவையும் சமைத்து உண்டு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

-தமது நிலம் மீட்கப்படும் வரை தமது உரிமைப்போராட்டம் தொடரும் எனவும் எங்களின் போராட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள்,மாகாண அமைச்சர்கள், உள்ளிட்டோர் பூரண ஒத்துழைப்பை வழங்கி எமது பூர்வீக நிலமான 7 தலைமுறைகளைக்கொண்ட முள்ளிக்குளம் பூர்விக கிராமத்தை மீட்டுத்தர அனைவரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர்
(28-03-2017)


ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான மாவட்ட அலுவலகம் வெள்ளியன்று மன்னார் நகரில் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைப்பு-(படம்)

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் 68 வது பிறந்த தினமான கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான மாவட்ட அலுவலகம் மன்னார் நகரில் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஏ. சமீயூ முகம்மது பஸ்மி தலைமையில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதனின் இணைப்புச் செயலாளர் Nஐ. பிறைம்லஸ் கொஸ்ரா பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த மாவட்ட அலுவலகத்தினை திறந்து வைத்தார்.
மேற்படி வைபவத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் மன்னார் தொகுதி அதிகார சபை நிர்வாகிகள்,கட்சிக்கிளைகளின் தலைவர்கள், இளைஞர் அமைப்பு மற்றும் பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் சுமார் 40 வருடங்களுக்கு பின்னர் நிகழ்ந்த குறித்த திறப்பு விழா வைபவத்தில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்துவத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(28-03-2017)வில்பத்து வர்த்தகமானி அறிவித்தல் ரத்துச்செய்ய வேண்டும்! மரிச்சிக்கட்டி,பாலைக்குழி, கரடிக்குழி மக்கள் போராட்டம்!

மன்னார் முசலி பிரதேசத்தில் உள்ள அதிகமான பூர்வீக இடங்களை வில்பத்து வன பகுதிக்கான எல்லையாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன புதிய வர்த்தகமானியில் கையொப்பம் ஈட்டதை தொடர்ந்து வர்த்தகமானி அறிவித்தலை உடனடியாக ஜனாதிபதி ரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று மாலை மரிச்சிகட்டி,பாலைக்குழி மற்றும் கரடிக்குழி மக்கள் போராட்டத்தை ஆரம்பித்து உள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தார்கள்.


மேலும் தெரிவிக்கையில் ;
பல வருடகாலமாக நாங்கள் வாழ்ந்த காணிகளை வில்பத்து பிரதேசமாக பிரகடனப்படுத்தியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் ஓரு போதும் எங்கள் தாய மண்ணை விட்டு வெளியேற மாட்டோம் என்றும் நேற்று கூட அதிமேதகு ஜனாதிபதிக்கு எங்கள் கோரிக்கையினை முசலி பிரதேசத்தில் உள்ள அனைத்து சமுக மட்ட அமைப்புக்கள் ஊடாக எங்கள் பிரச்சினையினை கூட அனுப்பி இருக்கின்றோம்.
கடந்த ஆட்சி காலத்தில் எங்களுக்கு அணியாயம் இடம்பெற்றதாக தெரிவித்து தான் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கினோம் ஆனால் இந்த அரசாங்கம் எங்களுக்கு நல்லதை செய்யாமல் எங்கள் உறவுகள் பரம்பரையாக வாழ்ந்த காணியினை கொள்ளை அடிக்கும் சுழ்ச்சி வேலைகளை செய்து உள்ளார்கள்.

எங்கள் போராட்டத்திற்கு கட்சி அரசியலுக்கு அப்பால் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம். என தெரிவித்தார்கள்.


மன்னாரில் 6வது நாளாகவும் தொடரும் நில மீட்பு போராட்டம்.....


மன்னாரில் தமது பூர்வீக நிலங்களை கடற்படையினரிடம் இருந்து மீட்ப்பதற்காக மக்கள் மேற்கொண்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 6வது நாளாகவும் தொடர்கிறது.

குறித்த போராட்டத்தினை முசலி பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட மள்ளிக்குளம் கிராம மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும், மாவட்டத்தில் உள்ள அரச உயர் அதிகாரிகள் தமது போராட்டம் தொடர்பில் எவ்வித அக்கரையும் இன்றி அசமந்த போக்குடன் செயற்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


குறித்த போராட்டத்திற்கு பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், அருட்தந்தையர்கள், மீனவ அமைப்புக்களின் பிரதி நிதிகள், தொண்டு அமைப்புக்களின் பிரதி நிதிகள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் நேற்றைய தினம் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சூசை உட்பட அருட்தந்தையர்கள் நேரடியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்துள்ளனர்.
எனினும் தமது போராட்டம் குறித்து மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்த முள்ளிக்குளம் மக்கள் இன்னும் எத்தனை நாட்களாக இருந்தாலும் தமது நிலம் மீட்க்கப்படும் வரை போராட்டம் தொடரும் என அந்த மக்கள் தெரிவித்தனர்.

க.பொ.சா தர பரீட்சைகள் முடிவுகள் வெளியாகின ....


2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபில்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, www.dornets.lk என்ற பரீட்சை திணைக்களத்தின் இணைத்தளத்தில் பரீட்சை முடிவுகளை அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கொழும்பு பிரதேச பாடசாலைகளின் பரீட்சை முடிவுகளை இன்று வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனைய பாடசாலைகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிய மற்றும் பழைய பாடதிட்டங்களுக்கு அமைய கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சுமார் 7 லட்சம் மாணவர்கள் வரை தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பரீட்சை முடிவுகளை தெரிந்துகொள்ள http://www.doenets.lk/exam/ இங்கே அழுத்தவும்

தமிழர் தாயகப்பிரதேசங்கள் எங்கும் நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் ஒரே பார்வையில் -.27-03-2017.

மன்னார் 
மன்னார் முள்ளிக்குள மக்களால்  நில மீட்புக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 5வது நாளாக இன்றும் அமைதியான முறையில் தொடர்கிறது.

கிளிநொச்சி
 கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்று 36 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

கிளிநொச்சியில் காணி உரிமம் கோரி பன்னங்கண்டி  பகுதி மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் ஆறாவது  நாளாகவும் இன்று தொடர்கிறது.

வவுனியா 
 வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 32ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

முல்லைத்தீவு 
கேப்பாப்புலவு மக்கள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்றுடன் 27 ஆவது நாளை எட்டியுள்ளது.

வேலைகோரும்பட்டதாரிகளின் போராட்டம்
திருகோணமலை -இன்றுடன் 27ம்  நாள்
அம்பாறை- இன்றுடன் 29ம்  நாள்
மட்டக்களப்பு -இன்றுடன் 35ம்  நாள்
யாழ்பாணம்-இன்றுடன் 29ம்,நாள்

இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு புதிய முகாமையாளராக கணகலிங்கம் காண்டிபன் நியமனம்-(படங்கள் )

இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு புதிய முகாமையாளராக கனகலிங்கம் காண்டிபன் நியமனம்

இலங்கை அரச போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலையில் கடமையாற்றிய கணகலிங்கம் காண்டிபன்  மன்னார் சாலையின் புதிய முகாமையாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மன்னார் சாலையின் புதிய முகாமையாளராக நியமிக்கப்பட்ட கணகலிங்கம் காண்டிபன் இன்று (27) திங்கட்கிழமை காலை 9 மணியளவில் மன்னார்-தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலையில் கையொப்பமிட்டு தமது பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

புதிய முகாமையாளரை சாலை பணியாளர்கள் வைபவ ரீதியாக வரவேற்றனர்.இதன் போது சர்வமத தலைவர்கள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த நிலையில் மன்னார் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த ஏ.ஜே.லெம்பேட் கிளிநொச்சி முகாமையாளராகவும்,ஏற்கனவே மன்னார் முகாமையாளராக கடமையாற்றிய முஹமட் சாஹீர் வவுனியா முகாமையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.-மன்னார் நிருபர்-


(27-3-2017)

மன்னார் பேசாலைக்கிராமத்தில் சர்வதேச பெண்கள் தினத்தினை சிறப்பிக்கும் வகையில்....

சர்வதேச பெண்கள் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் காட்டாஸ்பத்திரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை 26-03-2017 மாதர் அபிவிருத்தி அமைப்பின் தலைவி திருமதி யசோதா அவர்களின் தலைமையில் கிராமத்தின் பல அமைப்புக்களின் பங்களிப்புடன்  பெண்களின் திறமைகளையும் ஆக்கத்தினையும் ஆளுமையினையும் வெளிக்கொணரும் வகையில் பெண்களுக்கான பல நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

பெண்களுக்கான சிறப்பு நிகழ்வாக இடம்பெற்றதால் மிகவும் மகிழ்ச்சியுடன் பங்குபற்றினர். பரிசுப்பொதிகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Photos