Slider

காணொளிகள்

மன்னார் செய்திகள்

விம்பம்

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

பல்சுவை

School events

மருத்துவம்

புகைப்படத்தளம்

கட்டுரைகள்

சினிமா

-

சம்பந்தனை கோபமடையச் செய்த அமைச்சர்! சபையில் ரணில் முன்னிலையில் வாக்கு வாதம்....


எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கடும் கோபமடைய வைத்துள்ளார் என சம்பந்தனை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அரசியலமைப்பு மீளமைப்புக்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தான் மேற்படி சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக மேற்கொள்ளப்படும் புதிய அரசியலமைப்பு வரைவில் unitary என்ற ஆங்கிலச் சொல்லுடன், அகீயா என்ற சிங்களப் பதமும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

ஆனால், எதிர்க் கட்சித் தலைவர் சொல்வது போன்று அவ்வாறு அமைப்பது யதார்த்த்தம் அல்ல என்று பதில் அளித்துள்ளார். இந்தப் பதில் சம்பந்தனை கடுமையாக கோபமடைய வைத்தாகவும், இதனால் அமைச்சருக்கும் சம்பந்தனுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சொற்களுக்கு சண்டையிடாமல் இன்றைய கால கட்டத்தில் அரசியலமைப்பு நகர்வினை வெற்றிகரமாக மேற்கொண்டு செல்வதே சிறப்பான செயல் என்றும் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், அரசியலமைப்பினை மாற்றும் செயல் திட்டத்தினை அனைத்துலக சமூகம் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவிக்க, அதற்கு நிமல் சிறிபால டி சில்வா, அனைத்துலக சமூகத்தின் விருப்பத்துக்கேற்றவாறு செயற்படுவதற்கு தாம் ஆணை பெற்றிருக்கவில்லை என்று திருப்பி பதில் அளித்தார்.

இந்தப் பதிலால் மேலும் அவையில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, அரசியலமைப்பு மீளமைப்புக்கான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். விஜயம் செய்த 300 பிக்குகள் நயீனாதீவில் பூஜை வழிபாடு....


தென்னிலங்கை அமைப்பொன்றை சேர்ந்த 300 பௌத்த மத துறவிகளால் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் விஷேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த தென்னிலங்கை அமைப்பை சேர்ந்த பௌத்த துறவிகளால் கடந்த வியாழக்கிழமை இவ் விஷேட பூஜை வழிபாடுகளானது யாழ்.நாவற்குழி பௌத்த விகாரையில் இடம்பெறவிருந்தது.

எனினும் பின்னர் சில காரணங்களால் பிற்போடப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இன்றைய தினம் குறித்த பூஜை வழிபாடுகளானது இடம்பெற்று வருகின்றது.

இதன்படி  இன்றைய தினம் இடம்பெற்றுவரும் விஷேட பௌத்த மத துறவிகளது பூஜையானது நயீனாதீவு நாக விகாரையில் இடம்பெற்றுவருகின்றது.

இதேவளை கடந்த வியாழக்கிழமை நாவற்குழி பௌத்த விகாரையில் நடாத்துவதற்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருந்த போதிலும் அங்கு சிங்கள பௌத்த துறவிகளது விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளமை தொடர்பாக தொடர்ச்சியாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளையடுத்து குறித்த பௌத்த விகாரையின் விகாராதிபதி அவ் பூஜை அங்கே நடாத்துவது சில பாதகமான நிலமைகளை ஏற்படுத்தி விடும் என கருதி பூஜைகளை அங்கே நடாத்துவதற்கு அனுமதியை மறுத்திருந்தார்.

இதனையடுத்து குறித்த பூஜையானது நயீனாதீவு நாக விகாரையில் நடாத்த ஏற்பாட செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இன்றைய  தினம் ஆறு பேரூந்துகளில் 300 பௌத்த மத துறவிகள் அங்கு புறப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் இன்று மாலையளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த நிலையில் இன்று இரவு நயீனாதீவில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிம் ஜோங் உன் புதிய உத்தரவு... தீவிரமடையும் அமெரிக்கா- வடகொரியா பிரச்சனை....


வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன்னின் புதிய உத்தரவால் அமெரிக்கா- வடகொரியா இடையேயான பிரச்சனை இன்னும் தீவிரமடைந்துள்ளது.

வடகொரியா மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் விதமாக அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பல்களை மற்றும் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை கொரிய தீபகற்பத்தில் நிலைநிறுத்தியுள்ளது.

மேலும், அமெரிக்க இராணுவத்தின் வலிமையை நிரூபிக்கும் வகையில் தீபகற்பத்தின் மீது குண்டுவீச்சு விமானங்களை பறக்கவிட்டுள்ளது.

ஆனால் வடகொரியா, அமெரிக்கா விமானத்தை சமாளிக்க ஒரு திட்டத்தை தீட்டியுள்ளது.

அவற்றை வானிலே சுட்டு வீழ்த்தி வெளியேற்ற ஆயுதத்தை தயார் செய்துள்ளது.

இதற்காக, வட கொரியா தேசிய பாதுகாப்பு விஞ்ஞான அகாடமி ஏற்பாடு செய்த ஒரு புதிய வகை விமான எதிர்ப்பு ஆயுத சோதனையை பார்வையிட்ட கிம் ஜோங் உன்,குறித்த ஆயுதத்தை அதிகளவில் தயாரித்து நாடு முழுவதும் குவிக்க உத்தரவிட்டுள்ளார்.

இதனால், அமெரிக்கா- வடகொரியா இடையேயான பிரச்சனை இன்னும் தீவிரமடைந்துள்ளது.

36 ஆண்டுகளாக காதல்: ரயில் நிலையத்தை திருமணம் செய்த பெண்...


அமெரிக்காவில் ஒரு பெண் தான் நேசித்த ரயில் நிலையத்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கரோல் சான்டே பி (45). தன்னார்வ தொண்டு செய்வதில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்று கூறப்படுகிறது.

இவரது வீட்டில் இருந்து 45 நிமிட பஸ் போக்குவரத்து தூரத்தில் ஒரு ரயில் நிலையம் ஒன்று உள்ளது. அதன் மீது கரோலுக்கு 9 வயதில் இருந்தே தனி அன்பும் ஈர்ப்பும் ஏற்பட்டது.


அதுவே பின்னர் காதலாக மாறியது. எனவே தினமும் 45 நிமிடம் பஸ்சில் பயணம் செய்து அந்த ரெயில் நிலையத்துக்கு சென்று அங்கு சிறிது நேரம் அமர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று அந்த ரெயில் நிலையத்தை மனதளவில் திருமணம் செய்து கொண்டார்.

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தனது முதல் திருமண நினைவு நாளைக் கொண்டாடி மகிழ்ந்தார்.

போர்க் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குங்கள்! யஸ்மின் சூகா வலியுறுத்தல்...


போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றவாளிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது, மாறாக அவர்களைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஹெய்ட்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைப் படையினர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிடம் குறித்த விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ள அவர்,

ஜகத் டயஸின் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஹெய்ட்டியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் வரையில் ஹெய்ட்டியில் இலங்கைப் படையினர் நிறுத்தப்படக் கூடாது.

ஜகத் டயஸ் தலைமை தாங்கிய 57வது படைப்பிரிவினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியமை பற்றிய பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன எனவும் அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


வெள்ளத்தில் மூழ்கியது தென் மாகாணம் - உயிரிழப்பு 127 ஆக அதிகரிப்பு- 97 பேரை காணவில்லை


நாட்டில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தம் காரணமாக இதுவரையில் 122 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் பிந்திய தகவலின் படி 127 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்புக்களில் இன்னும் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அனர்த்தம் காரணமாக இதுவரை 150 பேர் காணாமல் போயுள்ளனர். மாவட்ட செயலாளர்களின் தகவல்களுக்கு அமைய இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும்அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கைக்கமைய 49 பேர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த அனர்த்தம் காரணமாக 105956 குடும்பத்தை சேர்ந்த 415618 பேர் இடம்பெயர்ந்துள்ளாதாகவும் குறிப்பிடப்படுகின்றது.அத்துடன் 1602 வீடுகள் பகுதியாகவும் 187 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நேற்று இரவு 9 மணியவில் வெளியாகியுள்ள தகவல்களுக்கமைய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

14 மாவட்டங்களில் மக்கள் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த 14 மாவட்டங்களிலும், வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று உள்ளிட்ட அனர்த்தங்கள் காரணமாக 51 ஆயிரத்து 899 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இரண்டாயிரத்து 937 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 69 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 47 பேர் பலியானதுடன், 4 ஆயிரத்து 815 குடும்பங்களை சேர்ந்த 18 ஆயிரத்து 31 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மேற்படி மாவட்டத்தில் 44 மத்திய நிலையங்களில் பாதிக்கப்பட்ட 1194 குடும்பங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 844 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, காவத்தை, பெல்மதுளை, பதுல்பான, கிரியெல்ல, இறக்குவானை, எஹலியகொட, குருவிட்ட, நிவித்திகல, எலபாத்த, கலவான,அயகம, ஆகிய பிரதேசங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மழை குறைவடைந்துள்ள போதிலும் வெள்ள நீரின் அளவு குறைவடையவில்லை என வடிகாலமைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வெள்ள நீரின் அதிகரிப்பு காரணமாக பல கங்கைகள் உடைப்பெடுத்துள்ளன. இதன்காரணமாக பல கிராமங்களில் நீரில் மூழ்கி மாயான தேசமாக காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக பல மக்களை மீட்க முடியாமல் மீட்பு பணியாளர்கள் தவித்து வருகின்றனர்.

தொடர்ந்தும் அடைமழை பெய்யுமாயின் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்படும் என மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வடமாகாண விளையாட்டு விழாவில் மன்னார் மாவட்டம் சாதனையில்.....படங்கள் இணைப்பு


வட மாகாண விளையாட்டு விழா 2017,தடகளப்போட்டிகள் யாழ்ப்பாண துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது. முதல் நாள் நிகழ்வில் ஆண்களுக்கான 200மீற்றர் ஓட்ட்ப்போட்டியில் 200M 1ST, 2ND,3RD மூன்று பதக்கங்களும்  மன்னாருக்கே....

  மன்னார் மாவட்டம் 2 சாதனைகள்.
 TWO RECORD BREAK 200 M போட்டியில் பிறேம் தாஸ் 22.1 செக்கன்களில் ஓடி சாதனை.
ஆண்களுக்கான 800M  ஓட்டப்போட்டியில் 1ம் 2ம் இடங்களையும் பெற்றுக்கொண்டதோடு
முதலாம் இடத்தினை கிளஸ்ரன் 1.59.7 செக்கனிலும்
பெண்களுக்கான 200M ஓட்டப்போட்டியில் 1ம் இடத்தினை அபியும் பெற்றுக்கொண்டனர்.
பெண்களுக்கான 4X100 relay அஞ்சலோட்டத்தில் புதிய சாதனை 54.3செக்கனிலும்
ஆண்களுக்கான 4X100 relay அஞ்சலோட்டத்தில் 44.13 செக்கனிலும் சாதனையுடன் கிண்ணமும் பெற்றுக்கொண்டனர் 
Relay Champion Mannar District.


 முழுமையா விபரங்களை விரைவில்......
 
மன்னார் கீரி சுற்றுலா கடற்கரை கல் ஆசனங்களும் மின்குமிழ்களும் உடைப்பு.....????


மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட கீரி கடற்கரை பகுதியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட 'கீரி சுற்றுலா கடற்கரை' வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களினால்  02-05-2017 அன்று செவ்வாய்க்கிழமை  காலை  வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

-முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை நிதியில் 3.51 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட குறித்த 'கீரி சுற்றுலா கடற்கரை' மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் தலைமையில் இவ்வாறு திறந்து வைக்கப்பட்டு இன்றுடன் 25நாட்கள் தான் ஆகின்றது.

 அதற்குள் கல்லாசனங்களும் மின்குமிழ்களும் உடைக்கப்பட்டுள்ளதானது. மிகவும் கேவலமான செயலாகும்  ஏன்  எனில் மன்னாரின் ஒவ்வொருவரும் மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தியின் பங்காளர்கள் தான் அக்கறையுள்ளவர்கள் தான் அப்படி இருக்க யார்....??? இப்படியான கேவலமான செயலில் ஈடுபடுகின்றார்கள்.
  • இவர்களின் நோக்கம் தான் என்ன...???
  • ஏன் இப்படி செய்கின்றார்கள்.....???
யாராக இருந்தாலும் அபிவிருத்தியின் முன்னேற்றத்தின் விரும்புபவர்களாக இருக்க வேண்டுமே தவிர இப்படியான செயல்கலிள் ஈடுபடவேண்டாம். இப்போதுதான் மன்னார் அபிவிருத்தியில் முன்னேறிக்கொண்டு இருக்கின்றது.
அதையும் ஒரு சிலரின் தவறான எண்ணத்தினால் பார்வையினால் இவ்வாறு நடைபெறுகின்றது.

யாராக இருந்தாலும் கொஞ்சம் சிந்தியுங்கள்.......
மன்னார் மண்ணின் வளர்ச்சிக்காக......

முஸ்லிம்களின் புனித நோன்பு நாளை ஆரம்பம்....


முஸ்லிம்களின் புனித நோன்பு மாதம் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் நிகழ்வும், ரமழான் மாத நோன்பு ஆரம்பம் குறித்து தீர்மானிப்பதற்காகவும் பிறைக்குழு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடியிருந்தது.

இந்நிலையில் நாட்டின் பல இடங்களில் இன்று மாலை ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதாக ஆதாரபூர்வமான தகவல் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று அதிகாலை முதல் நோன்பு உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்படும் என்று பிறைக்குழு தீர்மானித்திருப்பதாக பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஏழ்மையில் வாடும் மக்களின் பட்டினித் துயரை அனுபவத்தின் ஊடாக உணரச் செய்து அதன் மூலம் அம்மக்களுக்கு உதவும் மனோபாவத்தை வசதி படைத்தவர்கள் மத்தியில் உருவாக்குவதே புனித நோன்பின் நோக்கம் என்று இஸ்லாமிய போதனைகள் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

அதற்காக இன்று தொடக்கம் எதிர்வரும் ஒருமாத காலம் வரையில் இஸ்லாமிய மதத்தவர்கள் பகல் நேரங்களில் சொட்டு நீர் கூட அருந்தாத நிலையில் புனித நோன்பை அனுஷ்டிப்பதுடன் , மாத இறுதியில் தம்மிடம் சேகரிப்பில் இருக்கும் நகை, பணம், சொத்துக்கள் என்பவற்றின் பெறுமதியில் இரண்டரை வீதத்தை ஏழை மக்களுக்காக ஸகாத் எனும் தானம் செய்யும் கிரியையிலும் ஈடுபடுவர்.

வன்னேரியில் சுற்றுலா மையம் திறந்து வைப்பு....


வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட சுற்றுலா மையம் இன்று கிளிநொச்சி வன்னேரிப் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

6 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட அந்த சுற்றுலா மையத்தை வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் திறந்து வைத்துள்ளதுடன், பறவைகள் சரணாலயமாகக் காணப்படுகின்ற வன்னேரிக் குளத்தை அண்டிய பகுதியிலேயே இந்த கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு வெளிநாட்டில் இருந்து பருவகாலப் பறவைகளும் அதிகம் வருகை தருகின்றமையால், இந்த பிரதேசத்தை எதிர் காலத்தில் மிகப்பெரிய சுற்றுலா மையமாக்கும் நோக்கோடு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 மேலும், இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி .சிறீதரன், வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, வடமாகாண ஆளுநரின் செயலாளர், கரைச்சிப் பிரதேச சபை செயலாளர், கரைச்சிப் பிரதேச செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Photos