ஈழத்தமிழருக்கு தமிழகத்தில் உயர் விருது - தமிழ்மணி அகளங்கன்
இந்தியா உட்பட 52 நாடுகளைச் சேர்ந்த 70,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் இந்தியாவின் SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராயத்தின் 2017ம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்று காட்டாங் குளத்தூரில் பல்கலைக்கழக கலைக் கூடத்தில் டைபெற்றுள்ளது.
இதில் வவுனியாவைச் சேர்ந்த மூத்த எழுத்தாளரும் கலைஞரும் கவிஞருமாகிய கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்களுக்கு விபுலாநந்த படைப்பிலக்கிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழியல் சார்ந்த துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராயம் விருது வழங்கிக் கௌரவித்து வருகிறது.
அந்த வகையில் 2017ஆம் ஆண்டுக்கான விபுலாநந்த படைப்பிலக்கிய விருது ஈழத்தமிழருக்கு கிடைத்துள்ளது.
பல்கலைக்கழக வேந்தர் தா.இரா.பாரிவேந்தர் மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் உலகளாவிய ரீதியில் 12 தமிழியல் துறை சார்ந்த தகைமையாளர்களுக்கு விருதும் பணப்பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
வவுனியாவைச் சேர்ந்த மூத்த படைப்பாளியும் 48 நூல்களை வெளியிட்டவருமாகிய தமிழ் அறிஞர் அகளங்கன் அவர்களுக்கு அவரது முற்றத்துக் கரடி எனும் சிறுகதைத் தொகுப்பின் அடிப்படையில் விபுலாநந்த படைப்பிலக்கிய விருது வழங்கப்பட்டது.
இவருக்கு விருதும் 150,000 ரூபா இந்தியப் பணமும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழருக்கு தமிழகத்தில் உயர் விருது - தமிழ்மணி அகளங்கன்
Reviewed by Author
on
February 01, 2018
Rating:

No comments:
Post a Comment