அண்மைய செய்திகள்

recent
-

தமிழும் அதன் தொன்மையும்

தமிழும் அதன் தொன்மையும் தமிழும் அதன் தொன்மையும் தொடர்ச்சியும் தமிழ்நாட்டின் கதைக்கு .
சங்க இலக்கியங்களில் , மதுரை ஈழத்து பூதந்தேவனார் ஆகியோரின் பாடல்களை மட்டும் உதாரணமாகப் பார்க்கும் கற்கையே இன்னமும் நிலவுகிறுது. ஆயின் வரலாற்றில் தமிழகத்துடன் பண்பாட்டுரீதியில் ஒன்றாக இருந்த ஈழத்தின் தமிழ்த் தொன்மை இன்னமும் உரிய முறையில் ஆய்வு செய்யப்படவில்லை எனத் துணிந்து கூறலாம். சோழவழநாடே விரும்பி ஏற்கும் பண்டங்களும் ஈழத்தில் இருந்து சென்றதை கரிகாலச் சோழனை பாட்டுடைத் தலைவனாகக்கொண்ட பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடுகிறார். எது எவ்வாறு இருப்பினும் தமிழகத்தில் தமிழ் உணர்வு குன்றியபோதும் அது பொங்கிப்பாய்வது ஈழத்தில் லேதான்.

19 ஆம் யிற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் யிற்றாண்டின் முற்பகுதியிலும் ஆறுமுக நாவலர்சி.வை தாமோதரம்பிள்ளை
, , போன்றோரின் தமிழ்க் குரலுக்கு ஓப்புண்டோ கூறுமின். சிங்கள அடக்குமுறைகள் அதன்வழி தூறிட்ட தமிழ்க் குரல்கள்,

" ஓடையிலே என் சாம்பல் கரையும்போதும் ஒண்தமிழே சலசலத்து ஓட வேண்டும்பாடையிலே படுத்து ஊரைச் சுற்றும் போதும்பைந்தமிழால் அழும் ஓசை கேட்க வேண்டும் "

என்றெல்லாம் பாடச் செய்தது. விரிவஞ்சி இவைபற்றியும் எழுத அஞ்சுகிறேன்' தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் தமிழ்த்தேசியத்தில்
ஏற்படுத்திய தாக்கத்தை அறியாதோர் இல்லை எனலாம். அதுவும் யாழ்ப்பாணத்தில் 1974 இல் இடம் பெற்ற நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும் அது ஏற்படுத்திய உணர்வலைகளும் தமிழ் மக்கள் அறிந்த ஒன்றே.

ஆயினும் இந்த ஆராய்சி மன்றத்தின் தோற்றத்திற்கு வடிகால் அமைத்தவர் தமிழீழத்தைச் சார்ந்த என்பதை சிலர் அறியாது இருக்கலாம். சென்ற இடமெல்லாம் எவராலும் நியமிக்கப்படாத தமிழின் தூதுவராக வலம் வந்த அடிகளாரின் தமிழ் வாழ்வு காலம்தோறும் தமிழ் செய்யும் ஒரு பண்பாட்டின் தொடர்ச்சியே. மலேசிய நாட்டில் கோலாலம்பூரில் _முதல் மாநாட்டை ஆரம்பித்து வைத்து தனது கடவுளுக்கு தேம்பாவணியில் இருந்து, " கலை அணிச் செல்வன் கமலச் சேவடி தலை அணி புனைந்து சாற்றுதும் தமிழே " எனத் தமிழால் தலைவணங்கி அதன்பின்

" என்னை நன்றாக இறைவன் படைத்தனன்தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே " என்ற
திருமந்திர வாக்கியங்களைக் கூறி மாநாட்டு பேருரையை ஆற்றினார். இந்த வாக்கியங்கள் தமிழ்கூறும் நல் உலகை எந்தளவில் பாலித்து நின்றது என்பதைக் கூறவும் வேண்டுமா. இதன் பின்னான இரண்டாவது>தமிழ்நாட்டில் சென்னையில் பூம்புகார் திடலில் ஏற்படுத்திய உணர்ச்சிப் பிரவாகங்களையும் சொல் ஓவியங்களையும் நாம் அறிவோம்.

அவர் ஆற்றிய உரையில் தமிழ் மக்கள் தங்கள் மொழிக்கு கொடுக்கும் உன்னதத்தைக் கண்டு நிற்கும் வெளிநாட்டார் தத்தமது நாட்டிற்குச் சென்று " எந்தத் தமிழைப் பற்றி ஆராயத் தமிழகம் சென்றோமோ அந்தத் தமிழகத்தில் உள்ள மக்கள், எங்களுக்கு முன்பே நெடுங்காலம் தொட்டு ஆராய்ந்து, அந்த ஆராய்ச்சியால் அகமகிழ்ந்து, அந்தத் தமிழ் மொழியை தங்கள் உயிரினும் மேலாக நேசிக்கிறார்கள்; .........அந்தத் தமிழுக்கு எந்தப் பக்கமிருந்து, எவரிடமிருந்து, எந்த வகையான ஊறு வந்தாலும், ஊறு வரும் என்று ஜயப்பட்டாலும் தமது இன்னுயிரைத் தந்தேனும் தமிழைக் காப்போம் என்கிற உறுதி பூண்டவர்கள் தமிழர்கள் இப்படியெல்லாம் அந்த வெளிநாட்டு வித்தகர்கள் கூறுவார்கள் " எனப் பேசினார். அவர் கூறியதற்கு இலக்கணமாக அமைந்த மாநாடே யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற நான்காவது மாநாடு என்பதை விரித்துக் கூறவும் வேண்டுமோ.

இந்த இடத்தில் பிரான்சு தேசத்தில் பாரிஸ் நகரில் இடம் பெற்ற மூன்றாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கும் ஒரு அதி விசேடம் உன்று. மல்கம் ஆதிசேசையாவால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த மாநாட்டில் தன் பாட்டுத் திறத்தாலே இந்த வையகத்தைப் பாலித்திட வரம் கேட்ட எங்கள் பாரதியின் கனவு பலித்தது.வரப்போவதை எல்லாம் முன்கூட்டியே பாடிச் சென்ற இந்த வரகவி, வறுமையில் வாடியபோது உதவி கேட்டு எட்டயபுர ராஜாவிற்கு கடிதம் எழுதுமாறு இவரின் நண்பர்கள் தொல்லை கொடுத்தனர்.
அந்தத் தொல்லையால் அவர் எட்டயபுர மன்னனுக்கு ஒரு கவிதை மடல் வரைந்தார். ஆயின் அது பிச்சை கேட்கும் மடல் அல்ல, அந்த மடலில்
" புவியனைத்தும் போற்றிட வான் புகழ்படைத்துத்தமிழ் மொழியைப் புகழில் ஏற்றும்கவியரசர் தமிழ்நாட்டுக்கில்லை என்னும்வசை என்னால் கழிந்த தன்றே சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிதுசொற்புதிது எந்நாளும் அழியாத மாகவிதை என்று நன்கு பிரான்ஸென்னும் சிறந்தபுகழ் நாட்டின் உயர்புலவோரும் பிறரும் ஆங்கே விராவுபுகழ் ஆங்கிலத் தீங்கவியரசர் தாமும் " தன் தமிழ்கவியை மொழிபெயர்த்துப் போற்றுகின்றார். என நடந்து முடிந்ததாகக் கவி பாடியதை பாரிஸ் மாநாட்டில் எடுத்து ஆய்ந்தனர். இது போன்று மதுரையில், மொறிசியஸ் நாட்டில், தஞ்சையில் நடந்த மாநாடுகள் காலம்தோறும் தமிழ் செய்யும் வாழ்விற்கு வளம் சேர்த்துள்ளன.

R.நிலாந்தினி
தமிழும் அதன் தொன்மையும் Reviewed by NEWMANNAR on October 07, 2009 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.