மீண்டும் வழமைக்கு திரும்பி வரும் தம்பனைக்குளம் கிராமம்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் முழுமையாக பாதிக்கப்பட்ட மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட தம்பனைக்குளம் கிராமம் மீண்டும் இயல்பு நிலைக்குத்திரும்பி வருகின்றது.ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக குறித்த கிராமத்தில் உள்ள அணைத்து வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியதோடு வீட்டின் முகடுகள் மட்டுமே காணப்பட்டது.
தற்போது வெள்ள நீர் படிப்படியாக குறைந்த நிலையில் மக்கள் தங்களின் வீடுகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.வீட்டில் உள்ள சகல பொருட்களும் வெள்ள நீரில் நளைந்துள்ளது.
வீட்டினையும் பொருட்களையும் கழுவி துப்பரவு செய்யும் பனியில் குடியிருப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது மக்கள் பிரிதொரு இடத்தில் இருந்து வாந்து வீடுகளைத் துப்பரவு செய்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள ஒவ்வெரு வீட்டிலும் பாரிய துர்நாற்றம் வீசி வருவதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
(மன்னார் நிருபர்)
மீண்டும் வழமைக்கு திரும்பி வரும் தம்பனைக்குளம் கிராமம்.
Reviewed by NEWMANNAR
on
February 20, 2011
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 20, 2011
Rating:




No comments:
Post a Comment