மன்னாரில் பொலிசார்-பொதுமக்கள் முறுகல்: இளைஞரொருவர் கைது

அப்பகுதி மக்கள் வாக்களிக்கச் செல்லும் வேளையில் பொலிசார் அநாவசிய இடையூறுகளை ஏற்படுத்தியதன் காரணமாக பிரதேச இளைஞர்கள் மற்றும் பொலிசாருக்கிடையில் வாதப் பிரதிவாதங்கள் ஆரம்பமாகி மோதலாக மாறியுள்ளது.
அதனையடுத்து பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்குட்படுத்தபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ்-பொதுமக்கள் மோதலையடுத்து நானாட்டனில் விசேட கலகமடக்கும் பொலிசார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மன்னாரில் பொலிசார்-பொதுமக்கள் முறுகல்: இளைஞரொருவர் கைது
Reviewed by NEWMANNAR
on
March 18, 2011
Rating:

No comments:
Post a Comment