மன்னாரிலும் இராணுவம், பொலிஸார் இணைந்து வீடு வீடாகத் தேடுதல் வேட்டை!
மன்னாரில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து திடீர் சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மன்னார் மாவட்டத்தின் பல இடங்களிலும் இன்று காலை முதல் இராணுவத்தினரும், பொலிசாரும் வீடுகள் தோறும் சென்று குடும்ப அங்கத்தினர் விபரங்களைத் திரட்டி வருகின்றனர்.
அத்துடன் வெளியார் யாரும் தங்கியிருக்கின்றனரா என்பது குறித்து கடுமையான விசாரணைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
அத்துடன் மன்னாரில் அனைத்து வீதிச் சோதனைச்சாவடிகளின் நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. வாகனங்களில் செல்லும் அனைவரும் இறக்கப்பட்டு சோதனையிடப்படுகின்றனர்.
ஆனாலும் சோதனை நடவடிக்கைக்கான காரணம் என்னவென்பது குறித்து பாதுகாப்புத் தரப்பினரிடமிருந்து பொதுமக்கள் இதுவரை எந்தவித தகவல்களையும் பெற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்தின் பல இடங்களிலும் இன்று காலை முதல் இராணுவத்தினரும், பொலிசாரும் வீடுகள் தோறும் சென்று குடும்ப அங்கத்தினர் விபரங்களைத் திரட்டி வருகின்றனர்.
அத்துடன் வெளியார் யாரும் தங்கியிருக்கின்றனரா என்பது குறித்து கடுமையான விசாரணைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
அத்துடன் மன்னாரில் அனைத்து வீதிச் சோதனைச்சாவடிகளின் நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. வாகனங்களில் செல்லும் அனைவரும் இறக்கப்பட்டு சோதனையிடப்படுகின்றனர்.
ஆனாலும் சோதனை நடவடிக்கைக்கான காரணம் என்னவென்பது குறித்து பாதுகாப்புத் தரப்பினரிடமிருந்து பொதுமக்கள் இதுவரை எந்தவித தகவல்களையும் பெற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது.
மன்னாரிலும் இராணுவம், பொலிஸார் இணைந்து வீடு வீடாகத் தேடுதல் வேட்டை!
Reviewed by NEWMANNAR
on
April 01, 2011
Rating:

No comments:
Post a Comment