நூறு வருடங்கள் பழைமை வாய்ந்த நீர்த்தாங்கி இடிந்து விழும் நிலையில்
மன்னார் பொது விளை யாட்டு மைதானத்தில் காணப்படும் 100 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த மிகப் பெரிய நீர்த்தாங்கி எந்த நேரத்திலும் இடிந்து வீழ்ந்து பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய நிலையிலுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் இதன் மூலமாகவே மன்னார் மாவட்டம் முழுவதுக்கும் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. யுத்தத்தின் போது இதற்கும் மோசமான பாதிப்புக்கள் ஏற்பட்டன. ஆனால் இதுவரை எந்தவிதமான பராமரிப்பு வேலைகளும் மேற்கொள்ளப்படாத நிலையிலேயே இது காணப்படுகிறது.
இதன் காரணமாக இந்த நீர்த்தாங்கி சிறு சிறு துண்டு களாக உடைந்து கீழே விழுந்து கொண்டிருக்கின்றது.அத்துடன் இதன் சிமெந்து மேற்பூச்சுக்கள் கழன்று துருப்பிடித்த இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன.
இது அமைந்துள்ள மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் தினமும் விளையாட்டு வீரர்களும் பொது மக்களும் கூடுவது வழக்கமாகும். இவர்கள் எந்த நேரத்தில் இந்த நீர்த்தாங்கி தமது தலையில் இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் இதனை அண்ணார்ந்து பார்த்தவாறு செல்கின்றனர்.
இந்த நீர்த்தாங்கியின் மோசமான நிலைமையைப் பார்க்கும் போது அச்சம் தோன்றுவதாக மக்கள் கூறுகின்றனர். நீர்த்தாங்கிக்கு அருகாமையில் மன்னார் தலைமன்னார் பிரதான வீதி ஆகியவை காணப்படுகின்றன.
இது யார் மீதாவது இடிந்து விழுந்து அனர்த்தத்தை ஏற்படுத்துவதற்கு முன்னர் இதனை இடித்து ஒதுக்க வேண்டுமென் பதே மக்களின் பிரதான கோரிக் கையாக உள்ளது. உரிய அதிகாரிகள் இத னைக் கவனத்தில் எடுப்பார் களா என்று மக்கள் கேட்கின்றனர்.
நூறு வருடங்கள் பழைமை வாய்ந்த நீர்த்தாங்கி இடிந்து விழும் நிலையில்
Reviewed by NEWMANNAR
on
July 29, 2011
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 29, 2011
Rating:



No comments:
Post a Comment