மன்னார் வளைகுடா சதுப்பு நிலங்களில் சட்ட விரோதமாக உப்பளங்கள்
மன்னார் வளைகுடாவில் உள்ள சதுப்பு நிலக் காடுகளில் சட்ட விரோதமாக உப்பளம் அமைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டதை வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த காடுகளை பாதுகாக்கும் வகையில் மொத்த பரப்பளவை மறு ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட பழைய காயல் பகுதியில் 14 எக்டேர் பரப்பில் சதுப்பு நில காடு உள்ளது.இங்கு சட்ட விரோதமாக உப்பளம் அமைக்கும் பணியில் கடந்த இரண்டு மாதங்களாக சிலர் ஈடுபட்டனர். மரங்களை அகற்றும் நவீன இயந்திரங்களை கொண்டு பணியில் ஈடுபட்ட ஆறு பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களுக்கு இரண்டரை இலட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து சதுப்பு நில காடுகளை பாதுகாக்கும் வகையில் அதன் மொத்த அளவையும் மறு ஆய்வு செய்யும் பணியை வனத்துறை தொடங்கியுள்ளது.
இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது "சதுப்புநில காடுகள், இயற்கை அளித்த கொடை, கடற்கோள் வந்த போது மாங்குரோவ் காடுகள் கொண்ட கிராமங்கள் தப்பின. அலைகளை தடுக்கும் சக்தி இந்த காடுகளுக்கு உள்ளது. இந்த காடுகளை பாதுகாக்க மொத்த பரப்பளவை மறு ஆய்வு செய்யும் பணிதய தொடங்கியுள்ளோம்' என்றார்.
சதுப்பு நில காடுகள், ஆறும், கடலும் சேரும் முகத்துவாரங்களில் காணப்படும் இவை கடல், அலைகளின் வேகத்தை குறைப்பதால் அலையாத்தி காடுகள் என்ற பெயரும் உண்டு. கடல் நீரும், நன்னீரும் சேருவதாலும் அலை வேகம் தணிந்திருப்பதாலும் இப்பகுதிகளில் மீன் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக இறால், மீன்கள் அதிகமாக கிடைக்கும். இந்தியாவில் சதுப்பு நில காடுகள் மேற்கு வங்கத்தில் அதிகமாக காணப்படுகின்றன. தமிழகத்தில் பிச்சாவரம், முத்துப்பேட்டை, மன்னார் வளைகுடா பகுதியான பழைய காயல் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

Reviewed by NEWMANNAR
on
October 01, 2011
Rating:

No comments:
Post a Comment