மன்னாரில் சட்டவிரோதமான மாட்டிறைச்சி மீட்பு!
மன்னார் சாவக்காட்டு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக அறுக்கப்பட்ட இரண்டு பசுக்களின் இறைச்சிகளை மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜீ.குனசீலன் தலைமையிலான பொது சுகாதார பரிசேதகர்கள் நேற்று மீட்டுள்ளனர்.சட்டவிரோதமான முறையில் இறைச்சிக்காக மாடுகள் அறுக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலினை அடுத்து மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜீ.குனசீலன் தலைமையிலான் பொது சுகாதார பரிசேதகர்கள் குழுவினர் குறித்த பகுதியில் உள்ள வீட்டில் சோதனையினை மேற்கொண்டனர்.
இதன்போது இரு பசுக்களின் இறைச்சிகளை மீட்டதோடு குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 போருக்கு எதிராக மன்னார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த இறைச்சிகள் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜீ.குனசீலன் தெரிவித்தார்.
மன்னாரில் சட்டவிரோதமான மாட்டிறைச்சி மீட்பு!
Reviewed by NEWMANNAR
on
October 08, 2011
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 08, 2011
Rating:

No comments:
Post a Comment