பல்வேறு தடைகளை தாண்டியே மன்னார் நகரசபை சேவையாற்ற வேண்டி உள்ளது
பல்வேறு தடைகளையும் இடர்களையும் தாண்டியே மன்னார் நகர சபை நகரசபை சேவையாற்ற வேண்டி உள்ளது என நகர சபை உறுப்பினர்
அண்மையில் மன்னார் நகரசபை எல்லைக்குட்பட்ட கீரி எனும் இடத்தில்
மன்னார் நகரசபை தலைவர்,உப தலைவர் உறுப்பினர்கள்ஆகியோருக்கும் பொது மக்களுக்கும் இடையிலான சந்திப்பின் போதே அதை இவர் கூறினார்.
கீரி கிராம அபிவிருத்தி சங்கக் கட்டடத்தில் கிராம அபிவிருத்தி சங்க தலைவரின் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் மன்னார் நகர சபை தலைவர் ஞானப்பிரகாசம்,உப தலைவர் ஜேம்ஸ், மற்றும் உறுப்பினர்கள் மன்னார் நகர சபையால் மேட கொள்ளபபட்டு வரும் அபிவிருத்தி பணிகள் குறித்து மக்களுக்கு எடுத்து கூறினர்,
மன்னார் நகரசபை தலைவர் ரெட்ணம் குமரேஸ் மேலும் தெரிவிக்கையில்
மக்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றை எம்மால் முடிந்தவரை நிறைவேற்றுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம் ஆயினும் சிறிய விடயங்கள் முன்னெடுப்பது கூடபாரிய தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன .
பொது சேமக்காலையை புனரமைத்தல்,உள்ளக வீதிகளை திருத்துதல்,தெரு விளக்குபோடுதல்,சீரான முறையில் குப்பைகளை அகற்றுதல்,சிறுவர் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு பூங்கா அமைத்தல்,மணிக்கூட்டு கோபுரம் அமைத்தல்,
கடைத்தொகுதிகளை நிர்மாணித்தல்,மாரிகாலத்திற்கு முன்பாக வடிகால்களை சீர் செய்தல்,போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எம்மால் முன் எடுத்து வருகின்றோம்.
இத்தகைய வேலைத்திட்டங்களை நிறை வேற்ற நகரசபையால் தீர்மானம் நிறைவேற்றபட்ட போதிலும் அதி காரிகளாலும் அதற்கு மேற்ப்பட்ட வர்களாலும் சிற்சில தடைகள் ஏற்ட்படுகின்றன.
இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது,இருப்பினும் இன்னமும் தீர்வு காணப்படாமலே இடைநிறுத்தப்பட்டுள்ளது.இதே போன்று பொது சவக்காலையில் துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது சில தனி நபர்கள் அந்த இடம் தமக்கு சொந்தமானது என உரிமை கோருகின்றனர்.
இவ்வளவு தடைகளுக்கு மத்தியிலும் நாங்கள் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து செல்கின்றோம்.
தற்போது நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 400தெரு விளக்குகளை பொருத்தி வருகின்றோம்.அதிகாரிகள் மற்றும் அரசியல் செல்வாக்குள்ள நபர்களின் தடைகளை மீறி நாங்கள் எமது மக்களுக்கான அபிவிருத்தி பணிகளைமுன்னெடுத்து செல்கின்றோம்.
எதிர்காலத்தில் எத்தகைய தடைகள் வந்தாலும் மக்களை திரட்டி தடை விதிப்பவர்களுக்கு எதிராக போராடவும் தயங்க மாட்டோம் என அவர் தெரிவித்திருந்தார்.
பல்வேறு தடைகளை தாண்டியே மன்னார் நகரசபை சேவையாற்ற வேண்டி உள்ளது
Reviewed by NEWMANNAR
on
October 12, 2011
Rating:

No comments:
Post a Comment