மன்னாரில் 7 கிலோ 360 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

மன்னார் கோந்தைப்பிட்டி கடற்கரைப்பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் 7 கிலோ 360 கிராம் நிரை கொண்ட கஞ்சாப்பொதியுடன் மன்னார் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை கடற்படையினர் கைது செய்து மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மன்னார் கோந்தைப்பிட்டி கடற்கரைப்பகுதியில் வைத்து குறித்த நபர் பொதி ஒன்றுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து திரிந்துள்ளார்.
இதனை அவதானித்த கடற்படையினர் அவரை பிடித்து அவர் வைத்திருந்த பொதியை சோதனையிட்ட போது பொதியினுள் கஞ்சா போதைப் பொருள் காணப்பட்டுள்ளது.
இதன் போதே அவரை கைது செய்தாதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த நபரை கடற்படையினர் இரவு 12.30 மணியளவில் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதன் போது குறித்த நபர் வைத்திருந்த கஞ்சா போதைப் சோதனை இட்ட போது அவர் வைத்திருந்த கஞ்சா போதைப் போருள் 7 கிலோ 360 கிராம் நிறை கொண்டதாக தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மன்னார் பொலிஸார் குறித்த நபரை இன்று வியாழக்கிழமை மதியம் மன்னார் நீதவான் திருமதி.கே.ஜீவராணி முன்னிலையில் ஆஜர்படுத்திய போது குறித்த நபரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரையிலான 7 தினங்களுக்கு மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் நீதவான் திருமதி.கே.ஜீவரானி உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் போது குறித்த சந்தேக நபர் மன்னார் உப்புக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் என தெரிய வந்திருக்கின்றது.
இது இவ்வாறிருக்கு குறித்த நபர் அப்பகுதியில் இருந்து வீடு நோக்கி வந்து கொண்டிருந்த போது முட்சக்கர வண்டியில் வந்த சிலர் தன்னுடன் கதைத்ததாகவும் பின் அவர்கள் முட்சக்கர வண்டியில் இருந்து இறங்கிச்சென்றதாகவும் அதன் பின் அவ்விடத்திற்கு வந்த கடற்படையினர் முட்சக்கர வண்டியை சோதனையிட்ட போது அதில் இருந்து ஒரு பொதியை எடுத்ததாகவும் பின்னார் தன்னை பிடித்துச் சென்றதாகவும் தம்மிடம் குறியதாக அவருடைய உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில தினங்களாக மன்னார் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் சம்பங்களும் அவை தொடர்பான கைதுகளும் அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னாரில் 7 கிலோ 360 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது!
Reviewed by NEWMANNAR
on
November 04, 2011
Rating:

No comments:
Post a Comment