அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மீனவர்கள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு _ (பட இணைப்பு) _

மன்னார் மாவட்டத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தமக்கு விதிக்கப்பட்டுள்ள சங்கு மற்றும் அட்டை பிடிப்பதற்கான தடையை நீக்கக் கோரி மாவட்ட அரசாங்க அதிபருக்கு இன்று வியாழக்கிழமை காலை மகஜரொன்றைக் கையளித்துள்ளனர்.



பள்ளிமுனை புனித லூசியா மீனவர்கள் கூட்டுறவுச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றின் போதே மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுக்கு மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மீனவ சங்கங்கள் தமது ஆதரவை வழங்கியிருந்தன.



மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர அலுவலகத்தில் இல்லாததன் காரணத்தினால் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி மேகநாதனிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

மாவட்டத்தின் பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். _
மன்னார் மீனவர்கள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு _ (பட இணைப்பு) _ Reviewed by NEWMANNAR on November 18, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.