திருக்கேதீச்சர பிரதேசத்தில் புதிய கட்டங்கள் நிர்மாணிப்பதற்கு தடை -புதை பொருள் ஆராய்சி திணைக்களம்
திருக்கேதீச்சர பிரதேசத்தில் புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதற்கும் அதற்க்கான அத்திவாரங்களை வெட்டுவதற்கும் புதைபொருள் அராய்ச்சி திணைக்களம் தடை விதித்திருப்பதாக தெரிய வருகின்றது.
அண்மையில் கேதீச்சர பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில் பெருமளவு முதலீட்டில் யாத்திரிகர் விடுதி ஒன்றினை அமைப்பதற்கு அத்திவார வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்தன.
அங்கு வந்த புதை பொருள் ஆராய்ச்சி திணைக்கள அதிகாரிகள் இப் பிரதேசம் முழுவதும் எமக்கு சொந்தமானது இங்கு எவரும் எதுவிதமான கட்டடங்களையும் புதிதாக நிர்மாணிக்கவோ அத்திவாரங்களை தோண்டுவதர்க்கோ அனுமதிக்க முடியாது என தடுத்திருப்பதாக அறியப் படுகிறது.
இதே போன்று இப் பிரதேசத்தில் சுமார் இருநூறு சிறுவர்களை பராமரித்து வருகின்ற சிவனருள் இல்லம் என பதிவு செய்யப்பட்ட சிறுவர் இல்லம் அவர்களுடைய கல்வித் தேவைக்கென புதிய கட்டடம் ஒன்றை கட்டுவதற்கு அத்திவாரம் வெட்டி ஆரம்பித்திருந்த நிலையிலேயே பொலிசாரால் தடுத்த நிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கோவில் நிர்வாக சபையுடன் தொடர்பு கொண்டு அறிவித்திருந்த போதும் அவர்கள் இவ் விடயத்தில் அக்கறை காட்டாது அலட்சியமாக இருப்பது ஆச்சரியத்திற்குரியது.
தற்போது இப் பிரதேசத்தில் கடைத்தொகுதிகளைக் கட்டுவதற்காக ஆலய நிர்வாகத்தால் கோரப் பட்டு வந்துள்ளன.
இதற்கும் தடை விதிக்கப்படுமா?என்பதன் மூலம் புரியாத பல கேள்விகளுக்கு விரைவில் விடைகிடைக்கும் என்பதுடன் பல மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப் படும் எனவும் நம்பப்படுகின்றது.
திருக்கேதீச்சர பிரதேசத்தில் புதிய கட்டங்கள் நிர்மாணிப்பதற்கு தடை -புதை பொருள் ஆராய்சி திணைக்களம்
Reviewed by Admin
on
November 10, 2011
Rating:

No comments:
Post a Comment