அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய தினம்::சர்வதேச எயிட்ஸ் தினம்: உங்களின் கவனத்திற்கு! _

சர்வதேச எயிட்ஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை தொற்று மக்களிடையே ஏற்படுத்துவது மிக முக்கியமான நோக்கமாக உள்ளது. a




HIV என்பது Human Immunodeficiency Virusஐ குறிக்கிறது. இதன் சுருக்கமே HIV ஆகும். இவ்வைரஸ் மனிதனின் நோய் எதிர்ப்பு கட்டமைப்பைத் தாக்குகிறது. இதனால் நோய்களுக்கு எதிராகப் போராடமுடியாமல் போகும் நிலைமை ஏற்படும்.




பாதிக்கப்பட்ட உடல் திரவங்கள் ஊடாகவே இவ்வைரஸ் பரவுகிறது. பொதுவாக பாதுகாப்பற்ற உடலுறவு, நோய் தொற்றுக்கு உள்ளான ஊசிகளைப் பகிர்தல் அல்லது வேறு உட்செலுத்தும் மருந்து உபகரணங்களைப் பகிர்தல் போன்ற காரணங்களாலே அதிகமாக நோய் தொற்று ஏற்படுகிறது. அதேவேளை தாயிடம் இருந்து பிறக்கும் குழந்தைக்கும் நோய் தொற்று ஏற்படுகிறது.



எனவே HIV தொடர்பான உண்மைகளை தெரிந்து கொள்வதுடன்,அவ் அறிவை குடும்பத்தினரிடமும்,நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். இலங்கையில் ஒவ்வொரு வாரமும் 2 தொடக்கம் 3 வரையான HIV தொற்றுக்கு உள்ளான புதியவர்கள் இனங்காணப்படுவதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் அறிவதோடு, அதில் இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.



HIV நோய்த் தொற்றுள்ள நபர் ஒருவருடன் பாலியல் உறவுகளை வைத்திருப்பதால் 95% நோய்த்தொற்று ஏற்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.



HIV தொடர்பான நிலைப்பாட்டை நீங்கள் இப்பொழுது அறிந்து கொள்ளுங்கள். அதை ஓர் இரத்தப் பரிசோதனை மூலமாகவே அறிந்து கொள்ள முடியும். HIV/AIDS தொற்றுக்கு உள்ளானவர்கள் சாதாரணமாகவும் காணப்படலாம். சில வளர்ச்சியடைந்த நாடுகளில் எச்சில் மாதிரிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தியும், நோய் தொற்று ஏற்பட்டுள்ளதா என அறிந்து கொள்ள முடியும்.



HIV இற்கு குலம்,மதம், இனம் ஆகிய எல்லைகள் இல்லை என்பதை நீங்கள் அறிவதோடு, உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நேரம் தாழ்த்துவதற்கு முன்னர் உங்கள் ஆபத்தான பாலியல் நடவடிக்கைகளை மாற்றி, பாதுகாப்பான பாலியல் நடைமுறையைப் பின்பற்றுங்கள்.



ஆனாலும் HIV நோய்த் தொற்று ஏற்பட்டவர்களைப் புறாந்தள்ளாதீர்கள். குறிப்பாக தொடுதல், முத்தமிடல், கை கொடுத்தல் போன்ற செயற்பாடுகள் மூலம் நோய் தொற்று ஏற்படாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.



நீங்கள் ஒரு தொழிலுக்காக வெளிநாடு செல்கிறீர்களா? உங்களது இல்லம் மற்றும் குடும்பத்தில் இருந்து நீங்கள் தனிமைப் படுத்தப்பட்டு இருக்கலாம். உணர்வுகள் உங்கள் ஆரோக்கியத்தை புறந்தள்ளுவதை ஒரு போதும் அனுமதிக்க வேண்டாம்.



HIV நோய்த் தொற்று பெரும்பாலும் திருமணத்துக்கு அப்பாலான உறவுகள் மூலமே ஏற்படுகின்றன. சரியானதை சிந்தித்துக் கவனமாக இருங்கள். பாதுகாப்பான பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுங்கள். உங்களையும், உங்கள் குடும்பத்தையும் HIV இடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.



பாரம்பரிய நடைமுறையைப் பேணுதலே இந்நோயில் இருந்து எம்மை மீட்பதற்கான ஒரே வழியாகும். இந்நோய் தொற்றுக்கு தடுப்பு மருந்தோ அல்லது தடுப்பு ஊசியோ பயனைக் கொடுக்காது. அதாவது ஒருவனுக்கு ஒருத்தி என்பதே அதன் தாரக மந்திரமாகும்.



உமா


இன்றைய தினம்::சர்வதேச எயிட்ஸ் தினம்: உங்களின் கவனத்திற்கு! _ Reviewed by NEWMANNAR on December 01, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.