மன்னாரில் முறையற்ற வகையில் அரசநியமனங்கள்- எதிர்ப்பு ஊர்வலம் நடத்த கூட்டமைப்பு முடிவு!
மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் முறையற்ற வகையிலான அரச நியமனங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 14 ஆம் திகதி மன்னாhர் மாவட்டத்தில் எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நடத்தவுள்ளதாக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.மன்னார் நகர சபையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது, அவர் இதனைத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், தலைமையில் உறுப்பினர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் மன்னார் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, முசலி பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்;
இதன் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது. எதிர்வரும் 14 ஆம் திகதி எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடத்தி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் வழங்கப்ப டவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் முறையற்ற வகையில் அரசநியமனங்கள்- எதிர்ப்பு ஊர்வலம் நடத்த கூட்டமைப்பு முடிவு!
Reviewed by NEWMANNAR
on
December 06, 2011
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 06, 2011
Rating:

No comments:
Post a Comment