மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களை திட்ட அமைச்சருக்கு என்ன அருகதை????-மன்னார் ஊடகவியலாளர் சங்கம் கண்டனம்.
கடந்த 8 ஆம் திகதி மன்னார் மாவட்டச் செயலகத்தில் மந்தை மேற்கு பிரதேசச்செயலாளர் பிரிவுக்குற்பட்ட சன்னார் கிராம மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் அம்மக்களின் காணி அபகரிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் அமைச்சர் றிஸாட் பதீயூதின் தலைமையில் இடம் இடம் பெற்றது.
இதன் பொது அமைச்சர் றிஸாட் மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களையும், மதத்தலைவர்களையும்,மன்னார் ஆயர் அவர்களையும் கடுமையாக சாடியுள்ளார்.குறிப்பாக மன்னார் ஊடகவியலாளர்களை கடுமையாக சாடுவதற்கு அங்குள்ள ஒரு சில அரச அதிகாரிகலே காரணமாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதேச ஊடகவியலாளர்கள் பல வருடங்கள் மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.பலருக்கு பல்வேறு விதங்களில் உயிர் ஆபத்துக்களும் ஏற்பட்டுள்ளது.ஆனால் இது வரை எந்த தீர்வும் இல்லை.மன்னார் ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கத்தினாலும் சரி கடுமையாக சாடியதாக கூறப்படும் அமைச்சரினாலும் சரி எவ்வித ஊடக உதவிகளும் இது வரையிலும் செய்து கொடுக்கப்படவில்லை.பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் மன்னார் மாவட்ட மக்களின் நன்மை தீமைகளை வெளிக் கொண்டு வரும் ஊடகவியலாளர்களை கடுமையாக சாடுவது மறைமுகமாக எச்சரிப்பது குறித்த செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களின் எதிர்காலத்திற்கே முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையாக அமையும்.
மன்னார் ஊடகவியலாளர்கள் துணிச்சல் மிக்கவர்கள் என்பதனை அமைச்சரும் சரி அரச அதிகாரிகளும் சரி நண்கு புரிந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் தொடர்ந்தும் அத்துமீரிய மீள் குடியேற்ற நடவடிக்கை,அதிகாரிகளின் ஊழல் மோசடி என சகல விடையங்களையும் வெளிக் கொண்டு வருவோம் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதனை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும்.எனவே மன்னார் மாவட்டத்ததைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை அமைச்சர் வன்மையாக சாடியிருந்தால் நாங்கள் அதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.
(மன்னார் ஊடகவியலாளர் சங்கம்)
மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களை திட்ட அமைச்சருக்கு என்ன அருகதை????-மன்னார் ஊடகவியலாளர் சங்கம் கண்டனம்.
Reviewed by Admin
on
December 14, 2011
Rating:

No comments:
Post a Comment