மன்னார் விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் உரம்!
மன்னார் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் மானிய அடிப்படையில் வழங்கப்பட்ட உரம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விவசாய கிராமங்களில் 5 ஆயிரத்து 167 ஏக்கர் காணியில் பெரும்போக செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. விவசாய நடவடிக்கைகளுக்கென அரசாங்கத்தினால் மானியமாக வழங்கப்பட்ட உரவகைகள் உயிலங்குளம் கமநலசேவைகள் நிலையத்தினால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இங்கு 50 கிலோ எடை கொண்ட ஒரு பை உரம் 350 ரூபாவிற்கு வழங்கப்படுகின்றது. மொத்தமாக கமநல சேவை நிலையத் தினால் 17 ஆயிரம் அந்தர் உரம் மானிய அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மன்னார் விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் உரம்!
Reviewed by Admin
on
January 26, 2012
Rating:
Reviewed by Admin
on
January 26, 2012
Rating:

No comments:
Post a Comment