வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் பெண்களை மாலை 6 மணிக்கு முன் அனுப்ப வேண்டுகோள்
மன்னார் பஸார் பகுதி உட்பட சகல வர்த்தக நிலையங்களிலும் வேலை செய்கின்ற பெண்களை மாலை 6 மணிக்கு முன்னர் வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், மன்னார் வர்த்தக சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மன்னார் நகர சபையின் உறுப்பினர் மெரினஸ் பெரேராவிடம் மக்கள் முறைப்பாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து மன்னார் நகர சபைத் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இக்கோரிக்கை வர்த்தக சங்கத்திடம் விடுக்கப்பட்டது.
மன்னார் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு காலை 8.30 மணிக்கு வேலைக்கு வரும் பெண்கள் மாலை 7 மணிவரை வர்த்தக நிலையங்களில் வேலை செய்கின்றனர். இந்த நிலையில் அவர்கள் வீடு செல்ல நீண்ட நேரமாகின்றது. இதனால் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.#
எஸ்.ஜெனி)
இது தொடர்பில் மன்னார் நகர சபையின் உறுப்பினர் மெரினஸ் பெரேராவிடம் மக்கள் முறைப்பாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து மன்னார் நகர சபைத் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இக்கோரிக்கை வர்த்தக சங்கத்திடம் விடுக்கப்பட்டது.
மன்னார் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு காலை 8.30 மணிக்கு வேலைக்கு வரும் பெண்கள் மாலை 7 மணிவரை வர்த்தக நிலையங்களில் வேலை செய்கின்றனர். இந்த நிலையில் அவர்கள் வீடு செல்ல நீண்ட நேரமாகின்றது. இதனால் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.#
எஸ்.ஜெனி)
வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் பெண்களை மாலை 6 மணிக்கு முன் அனுப்ப வேண்டுகோள்
Reviewed by NEWMANNAR
on
February 04, 2012
Rating:

No comments:
Post a Comment