மன்னாரில் இரத்ததான நிகழ்வு-உயிர்காக்க உதவுங்கள்
இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மன்னார் கிளை உலக செஞ்சிலுவைத் தினத்தினை முன்னிட்டு வருகின்ற செவ்வாய்கிழமை 8ம் திகதி ( 8.05.2012) அன்று காலை 9 மணி தொடக்கம் பி.ப 3 மணி வரையில் மன்னார் பொது வைத்தியசாலையில் இரத்த வங்கியில்( Blood Bank) இல் இரத்ததான நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.இவ்வருட உலக செஞ்சிலுவைத் தினமானது இளைஞர்களை இலக்காக கொண்டு கொண்டாடப்படவதனால் ' மனிதாபிமான பணிக்காக அர்பணித்த இளைஞர்கள்' என்ற தொணிப் பொருளுடன் கொண்டாடப்படவுள்ளது.
எனவே மன்னார் மாவட்டத்திலுள்ள செஞ்சிலுவை தொண்டர்கள், உறுப்பினர்கள், பிரிவு மற்றும் அலகு அங்கத்தவர்கள் மற்றும் தொடர்ச்சியாக எமது சங்கத்தினால் ஏற்பாடு செய்யும் போதெல்லாம் இரத்ததானம் செய்தவர்களையும் உயிர்காக்கும் இந்த முயற்சிக்கு புத்துயிர் அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகின்றேம். இந்த நிகழ்வானது நாட்டின் 25 மாவட்டங்களிலும் உள்ள செஞ்சிலுவைசக் கிளைகளினால் ஏற்பாடு செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மன்னாரில் இரத்ததான நிகழ்வு-உயிர்காக்க உதவுங்கள்
Reviewed by NEWMANNAR
on
May 04, 2012
Rating:
Reviewed by NEWMANNAR
on
May 04, 2012
Rating:


No comments:
Post a Comment