அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை மேற்கு பிரதேசசெயலக உப தபாலகம் இயங்க முடியாதநிலை

மன்னார் மாவட்டத்தில் உள்ள மாந்தை மேற்குப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பரப்புக் கடந்தான் பகுதிக்கான மக்கள் மீளக் குடியேறியுள்ள போதிலும் அந்தப் பகுதியில் உள்ள உப தபாலகம் இயங்க முடியாத நிலையில் காணப்படுகின்றது. கடந்த பல மாதங்களாக தபால் அதிபரை நியமிப்பதில் காணப்படும் இழுபறிகள் காரணமாக உப தபாலகம் இயங்க முடியாத நிலைமை காணப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.


ஏற்கனவே உப தபாலகத்தை இயங்கச்செய்யும் வகையில் மன்னார் தபால் திணைக்களத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப் பரீட்சையும் நடைபெற்றுள்ளது. இந் நேர்முகப் பரீட்சைக்கு நான்குபேர் தோற்றியதுடன் குறிப்பிட்ட நேர்முகப் பரீட்சையை வைத்தவர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஓர் இளைஞரையும் தகுதியானவர் என இனம் கண்டு தெரிவு செய்தும் உள்ளார்கள்.

இந்நிலையில் இந்தப் பகுதிக்கான உப தபால் அதிபரை நியமனம் செய்வதில் அரசியல் தலையீடுகள் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து யாருக்கு உரிய நியமனத்தை வழங்குவது என்பது தெரியாது பெரும் குழப்பமான நிலையினால் உப தபாலகம் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ___
மாந்தை மேற்கு பிரதேசசெயலக உப தபாலகம் இயங்க முடியாதநிலை Reviewed by Admin on May 29, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.