அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சௌத்பார் காணிஅபகரிப்பு குறித்து முறையிட்டவருக்கு எதிராக படையினர் முறைப்பாடு!

மன்னார் சௌத்பார் பகுதியில் தனியாருக்குச் சொந்தமானதாக கூறப்படும் 45 ஏக்கர் காணியில் படையினர் முகாம் அமைப்பது தொடர்பில் அந்தக் காணிக்கு உரிமை கோரியவருக்கு எதிராக மன்னார் காவல்துறை நிலையத்தில் படையினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விடையம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.


மன்னார் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள சௌத்பார் பகுதியில் உள்ள வெற்றுக்காணியில் கடந்த 10 தினங்களாக படையினர் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் படையினர் துப்புரவு பணிகள் மேற்கொள்ளும் காணி தன்னுடையதென உரிமை கோரியுள்ள தனி நபர் ஒருவர் தனக்கு அப்பகுதியில் சுமார் 45 ஏக்கர் காணியுள்ள நிலையில் அப்பகுதியில் படையினர்கள் தனது காணிக்குள் முகாம் அமைக்கும் நோக்கில் துப்பரவு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் எனவே உடனடியாக துப்புரவு பணிகள் அனைத்தையும் நிறுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கடந்த திங்கட்கிழமை மன்னார் காவல்துறை நிலையத்தில் காணிக்கு உரிமை கோரியவருக்கு எதிராக படையினர் முறைப்பாடொன்றைச் செய்துள்ளனர்.இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மன்னார் காவல்துறை நிலையத்தில் காணிக்கு உரிமை கோரியவரும் முறைப்பாட்டை மேற்கொண்டவரும் அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் சார்பில் முறைப்பாட்டை மேற்கொண்ட மேஜர் தர அதிகாரியொருவர் காவல்துறை நிலையத்தில் பிரசன்னமானார்.
இந்நிலையில் தாம் துப்புரவு செய்யும் காணி முற்று முழுதாக அரச காணியெனவும் மன்னார் பிதேச செயலாளர் படையினரின் பயன்பாட்டிற்காக இந்தக் காணியை தங்களுக்கு வழங்கியதாகவும் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த இராணுவ அதிகாரி பொலிஸாரின் விசாரனைகளின் போது தெரிவித்துள்ளார்.
மேலும் காணிக்கு உரிமை கோரியவர் இந்த காணி தனது காணி எனவும் வலிதான உறுதி மூலம் தனது மகளுக்கு இந்த 45 ஏக்கர் காணியை நான் உரிமை மாற்றம் செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வவுனியாவில் உள்ள நில அளவைத் திணைக்களத்திலிருந்து வரைபடங்களை தருவித்து பிரஸ்தாப காணி தனியாருக்கு சொந்தமானதா?அல்லது அரச காணியா? என்பது தொடர்பில் விரைவில் முடிவு எடுக்கப்படுமென இரு தரப்பிற்கும் காவல்துறையினர் அறிவித்துள்ளார்கள்.
மன்னார் சௌத்பார் காணிஅபகரிப்பு குறித்து முறையிட்டவருக்கு எதிராக படையினர் முறைப்பாடு! Reviewed by NEWMANNAR on June 28, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.