முள்ளிக்குளம் மக்களுக்கு கடற்றொழில் உபகரணம் வழங்குவது தொடர்பில் மகஜர் கையளிப்பு
யுத்தத்தின் போது இடம் பெயர்ந்து மீண்டும் மீள் குடியமர்ந்துள்ள முள்ளிக்குளம் மக்களுக்கு கடற்றொழில் உபகரணங்கள் பெற்றுக்கொடுப்பது தொடர்பாக முசலி பிரதேசப் பிரஜைகள் குழு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றை நேற்று கையளித்துள்ளதாக முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அமைப்பாளர் எ.சுனேஸ் சோசை தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சார்பாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ள மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
07-09-2007 அன்று யுத்தத்தின் காரணமாக முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
அந்த மக்கள் முள்ளிக்குளம் கிராமத்திலிருந்து வெளியேறிய போது அங்கிருந்த இராணுவத்தினர் அவர்களது உடைமைகள் எதனையும் கொண்டு செல்ல அனுமதிக்காததோடு இடம்பெயர்ந்து சென்று 3 நாட்களில் திரும்பி வருவீர்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
இதனால் மீன் பிடிப் படகுகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் பாதுகாப்பாக வைத்து விட்டுச் செல்லுங்கள் என இராணுவத்தினர் அம்மக்களிடம் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் அந்த மக்கள் தமது உடைமைகள் அனைத்தையும் வைத்து விட்டு அங்கிருந்து பல கிலோமீற்றர்; தூரம் நடந்து வந்து முருங்கன் பாடசாலையில் தஞ்சமடைந்தனர்.
பின் அங்கிருந்து தாழ்வுபாடு, வாழ்க்கைப்பெற்றான் கண்டல், சிலாவத்துறை, மன்னார் போன்ற இடங்களில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வந்தனர்.
இந்த மக்கள் எவ்வித தொழில் வாய்ப்புகளுமின்றி கடந்த 5 வருடங்களாக பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் இம்மக்கள் மீண்டும் தமது சொந்தக் கிராமத்தில் குடியமர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும் இதுவரை பலனளிக்கவில்லை.
எனினும் இம் மக்கள் தமது வாழ்வைச் சீர் செய்து கொள்ள முள்ளிக்குளம் கிராமத்தை அண்டிய பெரிய குளம் பகுதியில் உள்ள காடுகளை அகற்றி கடந்த 15 நாட்களாக எவ்விதத் தொழிலுமின்றி சிரமத்தின் மத்தியில் தற்காலிகமாகக் குடியேறியுள்ளனர்.
அம்மக்களை கடற்றொழில் செய்வதற்கு அங்குள்ள கடற்படையினர் அனுமதி வழங்கிள்ளனர்.
அந்த மக்கள் தற்போது கடற்றொழிலையே நம்பியுள்ளனர். ஆனால், அந்த மக்கள் தொழில் செய்வதற்கான கடற்றொழில் உபகரணங்கள் எதுவும் இல்லாத நிலையில் உள்ளனர்.
முதலில் பதிவு செய்யப்பட்ட கண்ணாடி இழைப் படகுகள் 40, பதிவு செய்யப்படாத கண்ணாடி இழைப் படகுகள் 35, தெப்பம் 60, படகு வெளி இணைப்பு இயந்திரங்கள், வலைகள் என்பன இடம் பெயர்வதற்கு முன் மக்களிடம் இருந்துள்ளன.
எனவே இந்திய உதவித் திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு வழங்கப்படவுள்ள மீன் பிடி உபகரணங்களில் முள்ளிக்குளம் மக்களுக்கு முதலிடம் அளித்து அம்மக்களுக்கு வழங்கி அவர்களின் தொழில் வாய்ப்பை சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தவும், மக்களின் மீள் குடியேற்றத்திற்கு அனைவரதும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என முசலி பிரதேச பிரஜைகள் குழு சார்பாகக் கேட்டுக்கொள்ளுகின்றோம்.இதன் பிரதிகள் முசலி பிரதேச செயலாளர், மன்னார் ஆயர், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ___

Reviewed by NEWMANNAR
on
June 28, 2012
Rating:

No comments:
Post a Comment