மன்னார் ஆயருக்கு எதிராக முஸ்லிம் அமைப்புக்கள் தீர்மானம்
இலங்கை நாடாளுமன்றத்தில், மன்னார் ஆயருக்கு எதிராக அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் பேசியதாக எழுந்த சர்ச்சை தொடர்ந்து வலுத்து வருகிறது.அமைச்சர் ரிசாத் பதியுதீன் பேச்சைக் கண்டித்து, மன்னார் தேவாயம் ஒன்றில் கடந்த வாரம் பிரார்த்தனைக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் ஒன்றியம், இடம் பெயர்ந்தோர் அமைப்பு உள்பட மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து முஸ்லிம் அமைப்புக்கள் இணைந்து,
வெள்ளிக்கிழமையன்று கூடி, மன்னார் ஆயருக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
இடம் பெயர்ந்த முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் கானிப் பங்கீடு ஆகியவற்றில் தலையிடுவதை மன்னார் ஆயர் தவிர்க்க வேண்டும், ஆயுத்தாரிகளாக இருந்து அரசியலுக்கு வந்த தலைவர்கள், ஆயர் விடயத்தை அரசியலாக்க முயற்சிக்கக் கூடாது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக, மன்னார் மாவட்ட பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் அஸ்ரஃப் முபாரக் மெளலவி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அதே நேரத்தில், தாங்கள் எந்த வகையிலும் மன்னார் ஆயருக்கு எதிரானவர்கள் அல்ல என்றும், தற்போது இருதரப்புக்கும் ஏற்பட்டிருக்கும் முறுகல் நிலைக்கு சுமுகத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அஸ்ரஃப் முபாரக் மெளலவி தெரிவித்தார்.
அவரது பேட்டியின் ஒலிவடிவத்தை நேயர்கள் இங்கு
கேட்கலாம்.
மன்னார் ஆயருக்கு எதிராக முஸ்லிம் அமைப்புக்கள் தீர்மானம்
Reviewed by NEWMANNAR
on
June 02, 2012
Rating:
Reviewed by NEWMANNAR
on
June 02, 2012
Rating:

No comments:
Post a Comment