அண்மைய செய்திகள்

recent
-

'பேசாலையில் குடியேறிய மக்களை திருப்பியனுப்பிய கடற்படையினர்'

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் பேசாலைக்கு அருகில் உள்ள வீட்டுத்திட்டம் ஒன்றில் ஆறு வருடங்களின் பின்னர் மீள்குடியேறியிருந்த ஐம்பது வீட்டுத் திட்டம் என்று அழைக்கப்படும் இந்த வீட்டுத்திட்டத்தில் வசித்து வந்த குடும்பங்களை மன்னார் பிரதேச செயலாளர் உட்பட அரச அதிகாரிகளே மீள்குடியேறுவதற்கு அனுப்பியிருந்தார்கள். இந்த நிலையில், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட அந்த குடும்பங்கள் அங்கிருந்து திடீரென்று வெளியேற்றப்பட்டிருப்பது இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.



ஐம்பது வீட்டுத் திட்டத்தில் இருந்து கொண்டு, பேசாலையில் தொழில் செய்துவிட்டு, வீட்டிற்குத் திரும்பிச் சென்ற ஒரு குடும்பஸ்தரிடமே அங்கிருந்து வெளியேற வேண்டும் என்ற உத்தரவு முதலில் கடற்படைச் சிப்பாய் ஒருவரினால் தெரிவிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

யுத்த மோதல்கள் காரணமாக ஐம்பது வீட்டுத் திட்டத்தில் இருந்து வெளியேறிய குடும்பங்கள் பேசாலை புகையிரத நிலையத்தை அண்டிய பகுதிகளில் ரயில் பாதையிலேயே கொட்டில்களை அமைத்து குடியிருந்து வந்தனர்.

மதவாச்சி மன்னார் ரயில் பாதையில் மடுறோட்டிலிருந்து தலைமன்னார் வரையிலான ரயில்பாதை அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதனால், ரயில் பாதையில் குடியிருந்த குடிசைகள் அகற்றப்பட்டு. அங்கு குடியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றார்கள். இதனையடுத்தே ஐம்பது வீட்டுத்திட்டத்தில் இந்தக் குடும்பங்கள் மீள்குடியேறியிருக்கின்றன.

மீள்குடியேற்றத்திற்காக வீடுகளைத் திருத்தவும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் குடும்பம் ஒன்றிற்கு ஒரு லட்சம் ரூபா மானியமாகவும், இரண்டு லட்சம் ரூபா கடனாகவும் வழங்கப்பட்டு இந்தக் குடும்பங்கள் ஐம்பது வீட்டுத் திட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மெல் தெரிவித்தார்.

வெளியேற்றப்பட்ட குடும்பங்களை மீண்டும் அவர்களது இடங்களில் சென்று வசிப்பதற்குரிய முயற்சிகளுக்காக உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டிருப்பதாக பேசாலை பங்குத் தந்தை தெரிவித்துள்ளார். இதுவிடத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதேச செயலாளரும் கூறியுள்ளார்.
'பேசாலையில் குடியேறிய மக்களை திருப்பியனுப்பிய கடற்படையினர்' Reviewed by Admin on June 23, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.