வன்னிப் பிரதேசத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு விசேட போக்குவரத்து ஒழுங்கு-நேர அட்டவணை இணைப்பு
வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன்வன்னிப் பிரதேசத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களின் போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பாக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியிடம் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து ஆசிரியர்களுக்கான விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள் ளன.
வடமாகாண ஆளுநரின் வழிகாட்டலில் வடமாகாண சபைக்குச் சொந்தமான பேருந்துகள் ௭திர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமையில் இருந்து சேவையில் ஈடுபடவுள்ளன.
இப்போக்குவரத்து சேவையினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய், மடு, மன்னார் ஆகிய வலயங்களில் கடமையாற்றும் ஆசிரியர்களின் போக்குவரத்து இலகுபடுத்தப்பட்டுள்ளது.
இவ்விசேட ஏற்பாடானது இரண்டு பிரிவுகளாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
தினமும் போக்குவரத்து செய்யும் ஆசிரியர்களின் நன்மை கருதி காலை 6 மணிக்கு யாழ்.நகரிலிருந்து புறப்படும் பேருந்துகள் குறித்த பாடசாலைகள் வரை பயணித்து மீளவும் பி.ப 3 மணிக்கு குறித்த பாதை வழியாக யாழ்.நகரப் பகுதியினை பி.ப 5 மணிக்கு வந்தடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வார இறுதி நாட்களில் பயணம் செய்யும் ஆசிரியர்களின் நன்மை கருதி திங்கட்கிழமை காலை 5 மணிக்கு யாழ். நகரப்பகுதியிலிருந்து புறப்படும் பேருந்துகள் குறித்த பிரதேசங்களை சென்றடைவடைவதோடு வெள்ளிக்கிழமை பி.ப 2 மணிக்கு அப்பிரதேசங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அதே பாதை வழியாக வந்தடைவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
முதலாம் இலக்கப் பேருந்து யாழ். நகரப்பகுதியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பூநகரி, பரமன்கிராய், பூநகரி ம.வி, செம்பன்குன்று, ஜெயபுரம் ம.வி, கிராஞ்சி, வேரவில் ஊடாக காலை 8 மணிக்கு வலைப்பாடு சென்றடைவதோடு மீண்டும் அதே பாதை வழியாக பி.ப 3 மணிக்கு புறப்பட்டு யாழ். நகரப் பகுதியினை பி.ப 5 மணிக்கு வந்தடையும்.
இரண்டாம் இலக்க பேருந்து யாழ்.நகரப்பகுதியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பரந்தன் சந்தி வரை பயணித்து முல்லைத்தீவு வீதி, சென் அன்ரனீஸ் ம.வி, முரசுமோட்டை, கண்டாவளை ம.வி, நாகேந்திரா வித்தியாலயம், கட்டைக்காடு, நாகேஸ்வரா வித்தியாலயம், தர்மபுரம், சுண்டிக்குளம் சந்தி, கல்லாறு, பிரமந்தனாறு ம.வி, அம்பிகை வித்தியாலயம் ஊடாக காலை 8 மணிக்கு குமாரசுவாமிபுரம் சென்றடைவதோடு மீண்டும் அதே பாதை வழியாக பி.ப 3 மணிக்கு புறப்பட்டு யாழ். நகரப் பகுதியினை பி.ப 5 மணிக்கு வந்தடையும்.
மூன்றாம் இலக்க பேருந்து பருத்தித்துறையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பரந்தன் சந்தி வரை பயணித்து முல்லைத்தீவு வீதி, விஸ்வமடு, உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு ஊடாக காலை 8 மணிக்கு முல்லைத்தீவு சென்றடைவதோடு மீண்டும் அதே பாதை வழியாக பி.ப 3 மணிக்கு புறப்பட்டு யாழ்.நகரப்பகுதி ஊடாக பருத்தித்துறையினை வந்தடையும்.
நான்காம் இலக்க பேருந்து யாழ். நகரப்பகுதியிலிருந்து திங்கட்கிழமை மு.ப 5 மணிக்கு புறப்பட்டு பூநகரி ஊடாக மு.ப 8 மணிக்கு மன்னார் சென்றடையும்.
மீண்டும் அதே பாதை வழியாக பி.ப 2 மணிக்கு புறப்பட்டு யாழ். நகரப்பகுதியினை பி.ப 5 மணிக்கு வந்தடையும்.
ஐந்தாம் இலக்க பேருந்து யாழ்.நகரப் பகுதியிலிருந்து திங்கட்கிழமை காலை 5.30 மணிக்கு புறப்பட்டு பூநகரி, வெள்ளாங்குளம், மூன்றாம்பிட்டி, அந்தோனியார்குளம், இலுப்பைக்கடவை, கூரை, கோவில்குளம், பள்ளமடு, பெரியமடு, நாயாறு சந்தி, பாப்பாமோட்டை, அடம்பன்குளம், கருங்கண்டல், நெட்டாங்கண்டல், ஊடாக காலை 8 மணிக்கு பரப்பாங்கண்டல் சென்றடையும்.
அதே பாதை வழியாக பி.ப 3 மணிக்கு புறப்பட்டு யாழ்.நகரப் பகுதியினை பி.ப 5 மணிக்கு வந்தடையும்.
ஆறாம் இலக்க பேருந்து யாழ். நகரப்பகுதியிலிருந்து திங்கட்கிழமை காலை 5 மணிக்கு புறப்பட்டு மாங்குளம் ஊடாக காலை 8 மணிக்கு துணுக்காய் சென்றடையும். மீண்டும் அதே பாதை வழியாக வெள்ளிக்கிழமை பி.ப 2 மணிக்கு புறப்பட்டு யாழ். நகரப் பகுதியினை பி.ப 5 மணிக்கு வந்தடையும்.
வடமராட்சி பிரதேசத்தினை சேர்ந்த ஆசிரியர்கள் மூன்றாம் இலக்க பேருந்தில் பயணம் செய்து கொடிகாமம் சந்தியில் தமது பயண பாதைக்கு ஏற்றவாறு உரிய பேருந்துகளில் பயணிக்க முடியும்.
இவ்விசேட பேருந்து சேவைகள் மூலம் ஆசிரியர்களின் பயணம் இலகுவாக்கப்பட்டுள்ளதுடன் மாணவர்களிற்கு கூடுதலான நேரம் பாடவேளைகளை கற்பிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ௭னவே இப்பேருந்து சேவைகள் 11ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாகவும் இச் சேவையினைக் குறித்த வலயங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ள முடியும் ௭ன வும் வடமாகாண கல்வி அமைச்சின் செய லாளர் சி. சத்தியசீலன் அறிவித்துள்ளா ர்.
வன்னிப் பிரதேசத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு விசேட போக்குவரத்து ஒழுங்கு-நேர அட்டவணை இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
June 09, 2012
Rating:
No comments:
Post a Comment