மன்னார் ஆர்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட 11 பேர் விளக்கமறியலில்.
மன்னாரில் நேற்றையதினம் நடந்த ஆர்பாட்டத்தையடுத்து ஏற்பட்ட கலகம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 11 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர், அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும்,இன்றையதினம் ஐந்து சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,நேற்றைய அமைதியின்மையின் போது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காவற்துறையிளர் மூவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக நேற்று பகல் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு காவற்துறையினர் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் ஆர்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட 11 பேர் விளக்கமறியலில்.
Reviewed by NEWMANNAR
on
July 19, 2012
Rating:

No comments:
Post a Comment